ஆர்க்கிட்

ஆர்க்க்கிடே
புதைப்படிவ காலம்:80 Ma
Late Cretaceous - Recent
Haeckel Orchidae.jpg
Color plate from ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்'s Kunstformen der Natur
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைத் தாவரம்
வரிசை: Asparagales
குடும்பம்: ஆர்க்கிடே
Juss.
துணைக்குடும்பங்கள்
Orchidaceae.png
ஆர்க்கிடே குடும்பத் தாவரங்களின் பரவல்


Platanthera bifolia (flower).jpg


ஆர்க்கிட் அல்லது ஓக்கிட் (Orchids) என்பது ஒரு வித்திலையைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும்.இது தமிழில் மந்தாரை என்று அழைக்கப்படுகிறது. தாவர குடும்பங்களிலேயே இரண்டாவது மிகப்பெரிய பூக்கும் தாவரக் குடும்பமாகும். பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 763 பேரினங்களும் 21,950 முதல் 26,049 வரை ஏற்பு பெற்ற சிற்றினங்களும் உள்ளன.ref>Christenhusz M.J.M.and Bing J.W. 2016. "The number of known plants species in the world and its annual increase". Phytotaxa. Magnolia Press. 261 (3): 201–217. doi:10.11646/phytotaxa.261.3.1.</ref>[1] அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள பறவை இனங்களை விட இருமடங்கு அதிகம். ஆர்க்கிடுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் ஆகும்.

ஆர்கிட் மலர்ந்த பின் பல நாட்கள் வாடாமல் இருக்கும். இவை உலகின் எல்லா வகையான வாழிடங்களில் பல வகையில் இருக்கிறன. பல ஆர்கிடுகள், மரத்தைத் தொற்றிக்கொண்டு கொடிபோல் வளரும். சில வகை, தரையில் இருக்கும். இதுவரை 28 ஆயிரம் வகை ஆர்கிட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[2]இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், வட கிழக்கு இந்தியப் பகுதிகளிலும் இயற்கையாகக் காண்ப்படுகின்றன.இதில் கிளைத் தொடர்தண்டுடையவை, ஒருபாதமுறைத் தண்டுடையவை என இரு வகைகளுண்டு. இயற்கையாகக் காணப்படும் இந்த மாறுபட்ட அமைப்புடைய விந்தையான மலர்கள் தற்கால வேளாண் வணிகத்தின் ஒரு பகுதியாகும்.


மேற்கோள்கள்தொகு

  1. "WCSP". World Checklist of Selected Plant Families. Retrieved 2 April 2010.
  2. சு. தியடோர் பாஸ்கரன் (13 அக்டோபர் 2018). "மாய மலரைத் தேடி..." கட்டுரை. இந்து தமிழ். 14 அக்டோபர் 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orchidaceae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கிட்&oldid=3708975" இருந்து மீள்விக்கப்பட்டது