ஆர்சனிக் முச்செலீனைடு

ஆர்சனிக் முச்செலீனைடு (Arsenic triselenide) என்பது As2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக்கின் செலீனைடு உப்பான இச்சீருறாத் திண்மம் 870 நானோ மீட்டர் மற்றும் 17.2 மைக்ரோ மீட்டர் அளவுக்கு ஒளிச்செலுத்துகை அளவுகள் கொண்டிருப்பதால் , அகச்சிவப்பு ஒளியியலில் சால்கோசெனைடு கண்ணாடியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்சனிக் முச்செலீனைடு ஒரு சகப் பிணைப்புச் சேர்மமாகக் காணப்படுகிறது. இருப்பினும் ஆர்சனிக் , முறைப்படியான +3.என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.

ஆர்சனிக் முச்செலீனைடு
Arsenic triselenide[1]
As2Se3structure.jpg
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) செலீனைடு
இனங்காட்டிகள்
1303-36-2 Yes check.svgY
ChemSpider 14089 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14772
வே.ந.வி.ப எண் CG2285000
பண்புகள்
As2Se3
வாய்ப்பாட்டு எடை 386.72 கி/மோல்
தோற்றம் பழுப்பு-கருப்புத் தூள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 4.75 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mP20, இடக்குழு = P21/c, No. 14

mP20 P21/c 14

தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈரார்சனிக் மூவாக்சைடு, ஈரார்சனிக் முச்சல்பைடு, ஆர்சனிக் முப்புரோமைடு, ஆர்சனிக்(III) தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆண்டிமனி(III) செலீனைடு
தொடர்புடைய சேர்மங்கள் ஆர்சனிக்(V) செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பயன்கள்தொகு

உயர் ஒளிவிலகல் எண் காரணமாக ஆர்சனிக் முச்செலீனைடு கண்ணாடிகளின் மெல்லிய படமானது, ஒருங்கிணைந்த ஒளியனியலில் நடுத்தர அக்ச்சிவப்பு ஒளிச்செலுத்துகை மற்றும் உயர் நேரிலா ஒளியியல் சுட்டிகள் என முக்கியத்துவம் பெற்ற பொருளாக வெளிப்பட்டுள்ளது. எத்திலீன் ஈரமீன் கரைசல்களில் இருந்து தற்சுழற்சிப் பூச்சு மூலம் உயர்தரமான As2Se3 கண்ணாடிப் படங்களைப் படிய வைக்க முடியும்[2]

பாதுகாப்புதொகு

வீரியமிக்க அமிலங்கள் மற்றும் அலுமினியம் அல்லது துத்தநாகத்துடன் தொடர்புடைய வீரியமான காரங்கள் முதலியனவற்றிடமிருந்து ஆர்சனிக் முச்செலீனைடைத் தள்ளி வைக்கவேண்டும்.

மேற்கோள்கள்தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–43, ISBN 0-8493-0594-2
  2. Yi Zou, Hongtao Lin, Okechukwu Ogbuu, Lan Li, Sylvain Danto, Spencer Novak, Jacklyn Novak, J. David Musgraves, Kathleen Richardson, and Juejun Hu, “Effect of annealing conditions on the physio-chemical properties of spin-coated As2Se3 chalcogenide glass films,” Optical Materials Express, Vol. 2, Issue 12, pp. 1723-1732 (2012).