ஆர்தர் ஜியோப்ரி வாக்கர்
பேராசிரியர் ஆர்தர் ஜியோப்ரி வாக்கர் Arthur Geoffrey Walker, FRS FRSE (17 ஜூலை 1909 , வாட்போர்டு கெர்ட்போர்டுசயர் , இங்கிலாந்து - 31 மார்ச் 2001) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளர் ஆவார் , அவர் இயற்பியல், அண்டக் கட்டமைப்பியலுக்கு முத்ன்மைப் பங்களிப்புகளை வழங்கினார்.[1] அவர் ஒரு திறமையான புவிமானியாக இருந்தபோதிலும் , பொது சார்பியலுக்கான இரண்டு முதன்மையான பங்களிப்புகளுக்காக அவர் இன்றும் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்.
ஆர்தர் ஜியோப்ரி வாக்கர் | |
---|---|
பிறப்பு | Watford, Hertfordshire, England | 17 சூலை 1909
இறப்பு | 31 மார்ச்சு 2001 | (அகவை 91)
படித்த கல்வி நிறுவனங்கள் | Balliol College, Oxford Merton College, Oxford University of Edinburgh |
பணி | Mathematician, math professor |
வாழ்க்கைத் துணை | Phyllis Ashcroft Freeman (m. 1939) |
எச். பி. இராபர்ட்சனுடன் இணைந்து அவர்கள் ஃப்ரீட்மேன் - லெமைட்டர் - ராபர்ட்சன் - வாக்கர் அண்டவியல் படிமங்களுக்காக நன்கு அறியப்பட்டனர். இவை இராபர்ட்சன்ஸ் - வாக்கர் மெட்ரிக் ஐன்ஸ்டீன் புலச் சமன்பாட்டின் சரியான தீர்வுகளாகும். என்றிக்கோ பெர்மியுடன் இணைந்து பெர்மி - வாக்கர் வேறுபாடு என்ற கருத்துப்படிமத்தை அறிமுகப்படுத்தினார்.
இளமை
தொகுஅவர் 1909, சூலை 17 அன்று வாட்ஃபோர்டில் ஒரு பயிற்சியாளரும் கட்டிடங் கட்டுபவருமான ஆர்தர் ஜான் வாக்கர் (பி. 1879) அவரது மனைவியான எலியனோர் ஜோனா கோசுலிங் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.
வாக்கர் சிறுவர்களுக்கான வாட்போர்டு இலக்கணப் பள்ளியில் பயின்றார் , மேலும் ஆக்சுபோர்டில் உள்ள பாலியோல் கல்லூரியில் உதவித்தொகையைப் பெற்றார் , அங்கு அவர் கணிதத்தில் முதல் வகுப்பு தகைமையுடன் பட்டம் பெற்றார். பின்னர் ஆக்சுபோர்டில் உள்ள மெர்ட்டன் கல்லூரியில் படித்தார். பின்னர் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் , பேராசிரியர் ஆர்த்தர் எடிங்டனின் கீழ் பயின்று தனது முதல் முனைவர் பட்டம் பெற்றார்.
கல்வி வாழ்க்கை
தொகுவாக்கர் 1935 இல் இம்பீரியல் கல்லூரியில் விரிவுரையாளராக பதவியை ஏற்றார் - அடுத்த ஆண்டு அவர் இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தூய கணிதவியல் விரிவுரையாளராகவும் அமர்த்தப்பட்டார். 1947 வரை அவர் அப்பதவியில் இருந்தார் - பின்னர் அவர் செப்பீல்டு பல்கலைக்கழகத்திற்குத் தூய கணிதவியல் பேராசிரியராகச் சென்றார்.
1946 ஆம் ஆண்டில் அவர் எடின்பர்கு அரசு கழகத்தின்ன் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முன்மொழிவாளர்கள் அரோல்டு சுட்டான்லி உரூசு, சர் எட்மண்டு டெய்லர் விட்டேகர், டேவிடு கிப், வில்லியம் எட்ஜ் ஆவர். 1947 - 49 காலகட்டத்தில் கழகத்தின் கீத் பதக்கத்தை வென்றார்.
1952 இல் அவர் இலிவர்பூல் பல்கலைக்கழகம் திரும்பினார் , 1962 இல் அதன் அறிவியல் புலமுதல்வர் ஆனார். 1955 இல் அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் , 1961 முதல் 1962 வரை அமைப்பின் மன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1962 முதல் 1963 வரை இலண்டன் கணிதவியல் கழகத்தின் தலைவராக பணியாற்றினார். வாக்கர் 1974 இல் இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
வெளியீடுகள்
தொகு- கிளையலை வெளிகள் (1962)
- வடிவியல் அண்டவியல் அறிமுகம் (1975)
தகைமைகளும் விருதுகளும்
தொகுதனிப்பட்ட வாழ்க்கை
தொகுவாக்கர் 1939 இல் ஃபில்லிஸ் ஆஷ்கிராஃப்ட் ஃப்ரீமேனை மணந்தார் - இந்த இணையர் திறமையான பால்ரூம் நடனக் கலைஞர்கள் ஆவர்.[4] அவர் சிச்செசுட்டரில் 31 மார்ச் 2001 அன்று தனது 91 வயதில் காலமானார்.
குறிப்புகள்
தொகு- ↑ Hitchin, N. J. (2006). "Arthur Geoffrey Walker. 17 July 1909 -- 31 March 2001: Elected FRS 1955". Biographical Memoirs of Fellows of the Royal Society 52: 413–421. doi:10.1098/rsbm.2006.0028.
- ↑ Merton College Register 1900-1964. 1964.Levens, R.G.C., ed. (1964). Merton College Register 1900-1964. Oxford: Basil Blackwell. p. 232.
- ↑ Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). July 2006. Archived from the original (PDF) on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014.
{{cite book}}
: Check date values in:|archive-date=
(help) (PDF). Royal Society of Edinburgh. July 2006. p. 959. ISBN 0-902-198-84-X. Archived from the original பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம் (PDF) on 16 January 2014. Retrieved 27 November 2014. - ↑ 4.0 4.1 O'Connor, J.J.; Robertson, E.F. (October 2003). "Arthur Geoffrey Walker". MacTutor. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.O'Connor, J.J.; Robertson, E.F. (October 2003). "Arthur Geoffrey Walker". MacTutor. Retrieved 10 October 2021.
- ↑ "Royal Society of Edinburgh. Awards to Professors". The Glasgow Herald. 2 May 1950. https://news.google.com/newspapers?id=IEhAAAAAIBAJ&pg=3924%2C129473.