ஆர்த்தி முகர்ஜி
ஆர்த்தி முகர்ஜி (Aarti Mukherjee) (பிறப்பு 18 சூலை 1945), அல்லது ஆரத்தி முகோபாத்யாயா எனவும் அறியப்படும் இவர், இந்தியப் பின்னணிப் பாடகராவார். கீத் கதா சால் (1975), தபஸ்யா (1976), மனோகமனா, மசூம் (1983) போன்ற இந்திப் படங்களில் பாடியுள்ளார்.
ஆர்த்தி முகர்ஜி | |
---|---|
இயற்பெயர் | ஆர்த்தி முகர்ஜி |
பிற பெயர்கள் | ஆரத்தி முகோபாத்யாயா, ஆரத்தி முகர்ஜி |
பிறப்பு | 18 July 1945 மேற்கு வங்காளம், இந்தியா | (வயது 79)
இசை வடிவங்கள் | மேல்நாட்டுச் செந்நெறி இசை |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைக்கருவி(கள்) | குரலிசை |
இசைத்துறையில் | 1961–தற்போது வரை |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஆர்த்தி, இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பிறந்தார். இவரது வங்காளக் குடும்பம் பணக்கார, கலாச்சார, இசைப் பாரம்பரியத்துடன் இருந்தது. தனது தாயாரால் இசையை அறிமுகம் செய்து கொண்ட இவர், சுசீல் பானர்ஜி, உஸ்தாத் முகமது சாகிருத்தீன் கான், பண்டிட் சின்மோய் லாஹிரி, பண்டிட் இலட்சுமன் பிரசாத் ஜெய்பூர்வாலே , பண்டிட் ரமேஷ் நட்கர்னி ஆகியோரின் கீழ் படித்தார்.
தொழில்
தொகுதாதகிரி என்ற வங்காளதேசத் தொலைக்காட்சி நிகழ்சியில் இவர் தனது ஆரம்ப நாட்களில் பாடி வந்தார். 1955ஆம் ஆண்டில் தனது 14 வயதில் அகில இந்திய இசை திறமை நிகழ்ச்சியில் பாடினார். சிறு வயதிலிருந்தே இந்திய பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். முதன்மையாக பெங்காலி படங்களுக்காக பாடினார். "மெட்ரோ-மர்பி போட்டி" என்ற இசை போட்டியில் வென்றார். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த அனில் பிஸ்வாஸ், நௌசாத், வசந்த் தேசாய், சி. இராமச்சந்திரன் உட்பட இசை இயக்குநர்கள் இவர் பின்னணிப் பாடகியாக மாற உதவினர்.[1] 1958 ஆம் ஆண்டு வெளியான சஹாரா என்ற இந்திப் படத்தில் பாட இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தின் இசை குறைக்கப்பட்டது.
வங்காள திரைப்படங்கள்
தொகுஏ கேர்ல்பிரென்ட் என்ற படத்தில் பாடிய பிறகு, இவர் பெங்காலி படங்களுக்குத் தொடர்ச்சியாக பாட ஆரம்பித்தார். 1962இல் கன்னியா என்ற வங்காள மொழி படத்தில் முதன் முறையாக பாடினார். இவரது பன்முகத்தன்மையும் குரலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்கள் முன்னாள் முன்னணி பாடகிகளான சந்தியா முகர்ஜி , பிரதிமா பானர்ஜி போன்றவர்கள் மீது ஆர்வம் இழக்கத் தொடங்கினர். 1960களின் பிற்பகுதியில், இவரது குரல் முன்னணி நடிகை சுசித்ரா சென்னுக்கு திரையில் குரலாகப் பயன்படுத்தப்பட்டது.
1966 ஆம் ஆண்டில், இவர் கோல்போ ஹோலியோ சோட்டி என்ற படத்தில் பாடினா. இது சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான வங்காள திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதைப் பெற்றுத் தந்தது. 1976இல், இவர் மீண்டும் சுதிர் பாண்டே என்ற படத்துக்காக அதே விருதை வென்றார். எண்பதுகளிலும் எண்பதுகளின் முற்பகுதியில் இருந்த முன்னணி நடிகைகளான மாதவி முகர்ஜி, ஷர், தனுஜா போன்றவர்களுக்காக இவர் குரல் கொடுத்தார். இவர், ஆஷா போஸ்லேவுடன், சேர்ந்து 1970களில் முன்னணி இடத்தைப் பிடித்தார்.
ஆர்த்தி தனது இசைப் பயணத்தை பெங்காலி திரைப்படமான சுவர்ணா ரேகா, இந்தி திரைப்படமான அங்குலிமால் ஆகியவற்றில் தொடங்கினார். அதன் பின்னர், பெங்காலி, ஒடியா, மணிப்புரியம், அசாமி, இந்தி, குஜராத்தி, மராத்தி போன்ற பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 1971இல் வெளிவந்த ஆரண்யா என்ற படத்திலும்,[2] மானப் அரு தனாப் போன்ற அசாமிய படங்களிலும் பாடியுள்ளார்.[2]
பிற பணிகள்
தொகுதிரைப்படங்களைத் தவிர, இவர், இசைத் தொகுப்புகள், ரவீந்திர சங்கீதம், நஸ்ருல் கீதியின் தொலைக்காட்சி, மேடையில் நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ரசிகர்களை ஈர்த்தார். தும்ரி, பஜனை, தப்பா, தரணா, கசல் போன்ற பல்வேறு இசை வகைகளில் இவர் தனது பன்முகத்தன்மையை வெளிபடுத்தினார். இவர் இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Full of patriotic fervour Solo magic". தி இந்து. 3 October 2008 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140605123512/http://www.hindu.com/fr/2008/10/03/stories/2008100350440100.htm. பார்த்த நாள்: 28 May 2013.
- ↑ 2.0 2.1 Babul Das (1985). Asomiya Bolchabir Geet. Bani Mandir, Dibrugarh.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆர்த்தி முகர்ஜி
- Aarti Mukherjee on Calcuttaweb at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 13 பெப்பிரவரி 2009) (in இந்தி)