ஆர்த்தோ-டையனிசிடின்
ஆர்த்தோ-டையனிசிடின் (o-Dianisidine) என்பது [(CH3O)(H2N)C6H3]2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று அல்லது வெண்மை நிறத்துடன் ஆர்த்தோ-டையனிசிடின் காணப்படுகிறது. ஆர்த்தோ-அனிசிடினிலிருந்து பென்சிடின் மறுசீராக்க வினையின் வழியாக வருவிக்கப்படும் வழிப்பெறுதியான இது ஒர் இருசெயல்பாட்டு சேர்மம் என வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-(4-அமினோ-3-மெத்தாக்சிபீனைல்)-2-மெத்தாக்சி அனிலின்
| |
வேறு பெயர்கள்
2,2'-டைமெத்தாக்சி-4,4’-பென்சிடின்
| |
இனங்காட்டிகள் | |
119-90-4 | |
ChEBI | CHEBI:82321 |
ChEMBL | ChEMBL398363 |
ChemSpider | 8104 |
EC number | 204-355-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19231 |
பப்கெம் | 8411 |
வே.ந.வி.ப எண் | DD0875000 |
| |
UNII | MJY508JZXV |
UN number | 2811, 2431, 3077 |
பண்புகள் | |
C14H16N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 244.29 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.178 கி/செ.மீ3 |
உருகுநிலை | 113 °C (235 °F; 386 K) |
கொதிநிலை | 356 °C (673 °F; 629 K) |
60 மி.கி/லி | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H350 | |
P201, P202, P264, P270, P281, P301+312, P308+313, P330, P405, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 206°செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிசு(டையசோனியம்) வழிப்பெறுதியாக உருவாதல் மூலமாக சில அசோ சாயங்கள் தயாரிப்பிற்கான முன்னோடிச் சேர்மமாக ஆர்த்தோ-டையனிசிடின் கருதப்படுகிறது. பிசு(டையசோனியம்) வழிப்பெறுதி பல்வேறு அரோமாட்டிக் சேர்மங்களுடன் இணைக்கப்படக்கூடியதாகும். நேரடி நீலம் 1,15, 22, 84 மற்றும் 98 உள்ளிட்ட வர்த்தக முக்கியத்துவம் கொண்ட சாயங்கள் ஆர்த்தோ-டையனிசிடினிலிருந்து வழிப்பெறுதிகளாக தயாரிக்கப்படுகின்றன. [1]
ஆய்வகத்தில் பெராக்சிடேசு நொதியின் மதிப்பிடுதல் செயல்முறையிலும் ஆர்த்தோ-டையனிசிடின் பயனாகிறது. இதற்கான வேதிவினை கீழ்கண்டவாறு அமைகிறது.
இங்குள்ள ROOR' ஐதரசன் பெராக்சைடு மற்றும் எலக்ட்ரான் வழங்கி ஆர்த்தோ-டையனிசிடின் ஆகும்.
பாதுகாப்பு
தொகுமற்ற பென்சிடின் வழிப்பெறுதிகலைப் போல ஆர்த்தோ-டையனிசிடினும் முறையாக முறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு வேதிப்பொருளாகும். [2] உயிர்வேதியியலில் பெராக்சைடுகளை ஆராயும் வினையாக்கியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Azo Dyes". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_245. .
- ↑ Golka, Klaus; Kopps, Silke; Myslak, Zdislaw W. (2004). "Carcinogenicity of Azo Colorants: Influence of Solubility and Bioavailability". Toxicology Letters 151: 203–210. doi:10.1016/j.toxlet.2003.11.016. பப்மெட்:15177655.