ஆர்பிஎல் வங்கி
இந்தியத் தனியார் துறை வங்கி
ஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி வரையறுக்கப்பட்டது) இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறை வங்கியாகும். இந்தியாவில் செயல்படும், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி மகாராஷ்டிராவின் கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கி 700,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இதன் மொத்த வணிகமானது ரூபாய் 21,000 கோடிகளாக உள்ளது. நவம்பர், 2014 அன்றைய நிலவரப்படி, இந்தியாவின் 13 மாநிலங்களில் 185 கிளைகள் மற்றும் 370 தானியங்கி பணவழங்கி எனப்படும் தாவருவிகளுடன் இவ்வங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறது.
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1943 |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | வங்கித் தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | தனிநபர் வங்கி வணிக வங்கி நிறுவன வங்கி |
பணியாளர் | 2798 |
இணையத்தளம் | rblbank.com |
மேற்கோள்கள்
தொகு