ஆர்யானா சயீது
ஆர்யானா சயீது (Aryana Sayeed) ஓர் ஆப்கானிய பாடகியும், பாடலாசிரியரும், தொலைக்காட்சி ஆளுமையும் ஆவார். இவர் பெரும்பாலும் தாரி மொழியில் பாடுகிறார். ஆனால், பஷ்தூ மொழியிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஆப்கானித்தானின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவராவார்.[2] [3] ஆப்கானித்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் இசை நிகழ்ச்சிகளிலும், கொடை நிகழ்ச்சிகளின் விழாக்களிலும் தவறாமல் நிகழ்த்துகிறார். சயீது மேலும் ஆப்கானித்தானின் இசைத் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இவரது மருமகள் நதியா நதிம் டென்மார்க் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடுகிறார்.[4]
ஆர்யானா சயீது | |
---|---|
ஒரு நிகழ்ழ்ச்சியில் ஆர்யானா சயீது பேசுகிறார். | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | آریانا سعید |
பிறப்பு | 1985 (அகவை 38–39)[1] காபுல், ஆப்கானித்தான் |
பிறப்பிடம் | ஆப்கானித்தான் |
இசை வடிவங்கள் | பரப்பிசை, ரிதம் அண்ட் புளூஸ், ஹிப் ஹாப், ஆப்கானித்தானின் நாட்டுப்புறப் பாடல்கள் music]] |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2007–தற்போது வரை |
இணையதளம் | facebook.com/aryanamusic |
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
தொகுஆர்யானா சயீது, 1985இல் ஆப்கானித்தானின் காபூலில் பஷ்தூ பேசும் தந்தைக்கும் (பஷ்தூன் ) தாரி பேசும் தாய்க்கும் பிறந்தார்.[5] இவருடைய பெற்றோர் இவரது 8 வயதில் ஆப்கானித்தானை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் குடியேறுவதற்கு முன்பு பாக்கித்தானின் பெசாவரில் வசித்து வந்தனர். 12 வயதில், இவர் ஒரு இசைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இவர் பாடகர் குழுவுடன் இசை நிகழ்த்தினார்.[6]
இசை வாழ்க்கை
தொகுசயீத்தின் முதல் தனிப்பாடல், 2008இல், மாஷ்அல்லா என்பதாகும். இருப்பினும், 2011ஆம் ஆண்டில் இவரது பாடலான ஆப்கான் பேசராக் வெளியான பிறகு இவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.[7] ஆரியானா சயீத் ஆப்கானித்தானுக்கு வெளியே உள்ள பல ஆப்கானித்தான் வீடுகளில் ஒரு வீட்டுப் பெயராக மாறினார். உலகம் முழுவதும் பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.[8] திடீர் வெற்றியின் உச்சத்தில், ஆரியானா ஆப்கானித்தானுக்குச் சென்று தனது பலவீனமான சொந்த நாட்டிற்குள் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்தார். தனது பழைய புகழ் பெற்ற ஆப்கான் பாடலான குலே செப் மூலம் புகழ் பெற்றார். ஆப்கானித்தானில் இந்த ஆரம்ப நாட்களில்தான் இவர் தனது அடுத்த பாடலான திலம் டாங் ஆஸ்டை படமாக்கினார். இப்பாடலின் வெற்றி, ஆரியானா தொலைக்காட்சி விருதுகளில் ஆப்கானித்தானுக்குள் படமாக்கப்பட்ட சிறந்த பாடலுக்கான விருதுக்கு காரணமாக அமைந்தது. இது ஆப்கானித்தானின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக ஒரு புதிய வாழ்க்கைக்கு வழிவகுத்தது.[9]
இவரது அடுத்த பாடல் ஹைரணம், ஜெல்வா ஆகியவை நல்ல வெற்றி பெற்றது. இவர் ஆப்கானிய இசைத் துறையில் முன்னணி பாடகர்களில் ஒருவரான ஜாவித் செரீப்புடன் இணைந்து பணியாற்றினார். பியா பியா என்ற இவர்களின் ஆரம்ப வெற்றிக்குப் பிறகு இவர்கள் இரண்டாவது முறையாக சேர்ந்தனர். ஆர்யானா சயீத் தனது நாட்டில் விளையாட்டு கலையை ஊக்குவிப்பதற்காக ஒரு உற்சாகமான தேசிய பாடலைப் பாடினார். ஆப்கானித்தான் ஆப்கானித்தான் பாடலை உருவாக்க பல பாடகர்கள் இணைதனர்.[10] ஒரு பெரிய இசைக்குழு பாடலின் இசைக்கு பங்களித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு ஆப்கானித்தானுக்குள் நடந்தது. பாடல் வெளியான சிறிது காலத்தில், ஆரியானாவிடம் பிபிசியின் நேர்காணல் நடந்தது. பாடலின் பின்னணியில் உள்ள காரணத்தையும் விளக்கத்தையும் விளக்கினார். இவரது அடுத்த பெரிய வெற்றி ஆனாரம் ஆனாரம், இது ஆரியானாவை மீண்டும் ஆப்கானித்தானில் தரவரிசையில் முதலிடத்தில் வைத்தது.[11] [12]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசயீது தனது மேலாளர் ஆசிப் சையத்துடன் 2018இல் திருமணம் செய்தார்.[13]
ஆகத்து 2021 இல், காபூல், 2021|]] தலிபான்களிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, இவர் காபூலிலிருந்து தோகா, கத்தார், பின்னர் துருக்கியின் இசுதான்புல்லுக்கு சென்றார்.[14] ஆகத்து 25, 2021 நிலவரப்படி, இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பதாக அறிவிக்கப்பட்டது. [15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aryana Awarded Atlantic Council 2018 Freedom Award". TOLOnews. 24 June 2018. Archived from the original on 19 January 2019. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
- ↑ Orooj Hakimi; Rod Nickel (March 16, 2019). "Defying threats, Afghan singer Aryana comes home for women". Reuters. Archived from the original on 26 July 2019. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ "Aryana Sayeed". altmedia.net.au. July 12, 2018. Archived from the original on 26 July 2019. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ "Nadia Nadim – Dänemarks "Zlatan"". tagesspiegel.de. July 29, 2017. Archived from the original on 26 July 2019. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ "Biography of Aryana Sayeed (آريانا سعيد)". 8 April 2018.
- ↑ "Aryana Sayeed: The Glamorous Diva of Live Performance". thevoiceafghanistan.com/. Voice of Afghanistan. Archived from the original on 3 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2013.
- ↑ யூடியூபில் நிகழ்படம்
- ↑ "Archived copy". Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Aryana Sayeed". 15 May 2013. Archived from the original on 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ "Afghanistan – Aryana Sayeed, la voix de la liberté". Archived from the original on 12 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ "Afghan singer Aryana Sayeed tells Newsday about death threats she's received". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ "Latest News, Articles, Photos, Images and Videos on range of topics – Firstpost". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
- ↑ "Biography of Aryana Sayeed". afghan-web.com. 8 April 2018. Archived from the original on 26 July 2019. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ "Afghan pop star Aryana flees from country amid fear of life under Taliban rule". wionews.com. 19 August 2021.
- ↑ https://www.today.com/news/afghan-pop-star-says-she-was-hopeless-fleeing-taliban-t228940