ஆறகழூர் காயநிர்மாலேஸ்வரர் கோயில்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
காமநாத ஈஸ்வரர் திருக்கோயில்சேலம் மாவட்டம் ஆறகளூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயில்,சேலம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°33′45.3″N 78°47′16.6″E / 11.562583°N 78.787944°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஆறகளூர் , சேலம் |
பெயர்: | ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயில்,சேலம் |
அமைவிடம் | |
ஊர்: | ஆறகளூர் |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காமநாத ஈஸ்வரர் |
தாயார்: | பிரகன்நாயகி,பெரியநாயகி |
தல விருட்சம்: | மகிழம் மரம் |
தீர்த்தம்: | அக்னித் தீர்த்தம் |
வரலாறு | |
அமைத்தவர்: | கெட்டி முதலி மன்னன் |
இதில் உள்ள 90 சதவீத தகவல்கள் தவறு
ஆலய வரலாறு
தொகுசிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர் , வசிட்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது.
பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.
தல சிறப்பு
தொகுஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது.
திறக்கும் நேரம்
தொகுகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
பொது தகவல்
தொகுஇத்தலவிநாயகர் மூலவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சன்னதியின் மேல் உள்ள ராஜகோபுரம் மூன்றுநிலைகளைக் கொண்டது.
அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுவாமிக்கு வலது பின்புறத்தில் தனிச்சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில் ஐயப்பனுக்கு தனி சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்னே இருபுறமும் விநாயகர் சன்னதி உள்ளது.
விநாயகர் தன் தம்பியான ஐயப்பனை தன் நிழல் வடிவிலும் காப்பதாக கூறப்படுவதால் இரண்டு விநாயகர் சன்னதி இருப்பதாக சொல்கிறார்கள்.
தலபெருமை
தொகுசனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும். இந்த சீடர்கள் யாரென்பதை அறிய முடியவில்லை.
தலையாட்டி பிள்ளையார்
தொகுஇத்தலத்திற்கு வெளியே "தலையாட்டி பிள்ளையார்' சன்னதி உள்ளது. மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்கினான். இவரே கோயிலுக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டான் மன்னன். அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் "ஆற்றூர்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் "ஆத்தூர்' என்று மருவியுள்ளது.
சிறப்பம்சம்
தொகுஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது.
அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு "அனந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
தெய்வங்கள்
தொகுபூஜைகள்
தொகுதினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு , ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி , தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம் , விநாயகர் சதுர்த்தி , மாசி மகம் ,கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி
போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு
தொகுகோவிலின் முன் வாயிலின் அருகே பூக்கடைகளை ஒட்டி குறும்ப விநாயகர் சன்னதி அருகில் ஒரு குத்துகல்லில் கல்வெட்டு காணப்படுகிறது, சற்றே சிதைந்த நிலை, சிலவரிகளை வைத்து அரசாங்க ஏட்டை வைத்து பார்த்ததில் வீரபாண்டியன் கல்வெட்டு என தெரிகிறது
கல்வெட்டு வாசகம்
தொகு"அழகிய சொக்கரான வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு 10ஆவது இவர் முதலிகள் கண்ணகனான வழுதிநாராயண தேவனேன் சேல நாட்டு சேலத்து உடையார் கிளிவண்ணமுடைய நாயனார் கோயில் இவ்வாட்டை சித்திரை மாதத்து திருமதிலும் விரிய இட்டும் திருமடை விளாகம் கண்டும் திருவெடுத்து கட்டி கண்டும் திருக்குளமும் வகுதுடும் திருவாசலில் தென் புறம் மாகேசுவர் நாயனாரை பூசிகுமவர்களுகும் மேடம் கண்டும் இம்மடம் நோக்கும் திருமேனிக்கு இந் நாயனார் தேவதானமான மறவந ஏரி குடிநீங்கா தேவதானத்தில் குழி 150 பறம்பு பூதான கரதானமாக கொண்டு இட்ட குழி 200 ஆகா குழி முன்னூற்றைம்பதுங்க் கொண்டு இம்மடம் குத்துமெழுகி திருவிளக்குமிட்டு அவர்களுக்கு இக்கல்வெட்டின் படி காணியாக கடவதாகவும் இதன்மம் நோக்கினவன் திருவடி இரண்டும் மேலே இதுப கேசுரர் இரக்ஷை "
இந்த வீரபாண்டியன் காலம் கிபி 1276, இவர் மதுரை பாண்டியர் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியரின் கீழ் கொங்கு பகுதிகளை ஆண்டவர் எனக் கொள்ளலாம், இவரின் அலுவலர் வழுதிநாராயணன் கோவிலுக்கு செய்த திருப்பணிகளை இந்த கல்வெட்டு சிறப்பாய் செல்கிறது...!
ஒரு சித்திரை மாதம் இவர் கோவிலில் திருமதிலும் திருமடை விளாகம் திருக்குளமும் தென்திசை வாசல் மடமும் எடுப்பித்து , இதற்காக மரவனேரி கீழுள்ள 350 குழி நிலத்தை கொடையாக கொடுத்தார்
வெளி இணைப்புகள்
தொகு- கோயில் அமைவிடம்
- கோயில் வரலாறு பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்