ஆலிவர் ஹார்டி

அமெரிக்க நகைச்சுவை நடிகர்

ஆலிவர் நார்வெல் ஹார்டி (Oliver Norvell Hardy) (பிறப்பு நார்வெல் ஹார்டி ; ஜனவரி 18, 1892 - ஆகஸ்ட் 7, 1957) ஒரு அமெரிக்க நகைச்சுவை நடிகரும் மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களான லாரல் மற்றும் ஹார்டி என்பவரில் ஒருவரும் ஆவார். மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக இசுடான் லாரலும் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டியும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர்.[1][2]

ஆலிவர் ஹார்டி
1938 இல் ஆலிவர் ஹார்டி
பிறப்புநார்வெல் ஹார்டி
(1892-01-18)சனவரி 18, 1892
ஜியார்ஜியா, அமெரிக்கா
இறப்புஆகத்து 7, 1957(1957-08-07) (அகவை 65)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அமெரிக்கா
பணி
  • நகைச்சுவை நடிகர்
  • இயக்குநர்
  • திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1914–1955
கையொப்பம்
தி லக்கி டாக் திரைப்படத்தில் லாரல் மற்றும் ஹார்டி நடித்த ஒரு காட்சி
இங்கிலாந்தின் கரோனேச அரங்கத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள இசுடான் லாரல் மற்றும் ஆலிவர் ஹார்டியின் சிலை

ஊமைத் திரைப்படங்களின் காலம் தொடங்கி 1926 முதல் 1957 வரை இவரது தொழில் வாழ்க்கை நீடித்தது. இவர்களிருவரும் 1920களின் கடைசிகளில் இருந்து 1940களின் மத்தியப்பகுதி வரை சேட்டை நகைச்சுவையில் (slapstick comey) முடிசூட மன்னர்களாக திகழ்ந்தனர். லாரல் எப்பொழுதும் குழந்தை தனமாக செயல்களால் குழப்பம் ஏற்படுத்தும் நபராகவும், அதிக பந்தா உடைய ஹார்டியின் தோழமை கதாபாத்திரத்திமாக நடித்தார். இருவரும் சேர்ந்து நூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளனர். ஆரம்ப காலங்களில் 1930களில் முழுநீளத்திரைப்படங்கள் தயாரிக்கபடுவதற்கு முன்பு வரை குறும்படங்களில் மட்டுமே நடித்தனர். சன்ஸ் ஆஃப் தி டிசெர்ட் (1933), தி மியூசிக் பாக்ஸ் (1932), பேப்ஸ் இன் டாய்லேன்ட் (1934), மற்றும் வே அவுட் வெஸ்ட் (1937) ஆகியன மிகப்பிரமாண்டமான வெற்றியை ஈட்டின. ஹார்டியின் "Well, here's another nice mess you've gotten me into!" என்கிற வாக்கியம் இன்றும் பிரபலமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Laurel and Hardy." Britannica Online Encyclopedia. Retrieved: June 12, 2011.
  2. Rawlngs, Nate. "Top 10 across-the-pond duos." பரணிடப்பட்டது ஆகத்து 21, 2013 at the வந்தவழி இயந்திரம்டைம் (இதழ்) July 20, 2010. Retrieved: June 18, 2012.

நூற்பட்டியல்

தொகு
  • Louvish, Simon (2001). Stan and Ollie: The Roots of Comedy. London: Faber & Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-571-21590-4.
  • Marriot, A.J. Laurel & Hardy: The British Tours. Hitchen, Herts, UK: AJ Marriot, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9521308-0-7.
  • McCabe, John, Babe: The Life of Oliver Hardy. London: Robson Books Ltd., 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86105-781-4.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்_ஹார்டி&oldid=4137386" இலிருந்து மீள்விக்கப்பட்டது