ஆலீஸ் குமாரசுவாமி

ரத்தன் தேவி (Ratan Devi ) (பிறப்பு : 1889 - இறப்பு: 1958 சூலை 15) ஆலிஸ் எத்தேல் ரிச்சர்ட்சன் என்ற பெயரில் பிறந்த இவர் ரத்தன் தேவி என்ற மேடை பெயரில் பணியாற்றினார். இவர் இந்திய இசையை பதிவு செய்தார்.மேலும் இந்து பாடல்கள் மற்றும் கவிதைகளை நிகழ்த்தினார். பிரித்தன் மற்றும் அமெரிக்காவில் கச்சேரிகளுக்காக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பிரித்தானிய சாம்ராஜ்யத்தில் இசை தொடர்பாக கவனிக்கப்படாத குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவராக ஆலிஸை மார்ட்டின் கிளேட்டன் என்பவர் அடையாளம் காட்டுகிறார்.[1]

ரத்தன் குமாரசுவாமி
Alice Coomara as Ratan Devi.jpg
ரத்தன் தேவி 1917 இல் மன்ஹாட்டனில் ஒரு நிகழ்ச்சியில் தம்புராவுடன்
பிறப்புஆலிஸ் எத்தல் ரிச்சர்ட்சன்
October 1889 (October 1889)
செபீல்டு
இறப்புசூலை 15, 1958(1958-07-15) (அகவை 68)
பாஸ்டன்
தேசியம்பிரித்தன்
மற்ற பெயர்கள்ரத்தன் தேவி
பணிஇசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஆனந்த குமாரசுவாமி
பிரான்சிஸ் பிட்டர்

சுயசரிதைதொகு

ஆலிஸ் எத்தேல் ரிச்சர்ட்சன் 1889 அக்டோபரில் இங்கிலாந்தின் செபீல்டில் ஜார்ஜ் ரிச்சர்ட்சன் மற்றும் சாரா பால்க்னர் ஆகியோருக்குப் பிறந்தார்.[2] [3]

முதல் திருமணம்தொகு

1907ஆம் ஆண்டில் ஆலிஸ் கலை வரலாற்றாசிரியர் ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி மற்றும் அவரது மனைவி, கை நெசவாளர் மற்றும் டையர் எத்தேல் குமாரசாமி ஆகியோரின் அதே கலைஞர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்த தனது நண்பரான பிலிப் மைரெட்டை சந்தித்தார். அடுத்த ஆண்டு, இவர் ஆனந்துடன் ஒரு உறவைத் தொடங்கினார். எத்தேல் ஒரு வாரிசை பெற்றெடுக்கவில்லை. எனவே அவருடைய கணவன் ஆனந்த் ஒரு குழந்தையை பெற விரும்பினார். அவர் தனது விவகாரத்தில் எந்த ரகசியமும் கொண்டிருக்கவில்லை. இறுதியில் ஆனந்த் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கும் யோசனையை தனது மனைவி எத்தேலிடம் கூறினார். இதைக் கேட்ட எத்தேல் திகைத்து, வீட்டை விட்டு வெளியேறினார். [3]

ஆலிஸ் 1913இல் லண்டனின் செயின்ட் பாங்க்ராஸில் குமாரசாமியை மணந்தார்.[4] இவர்களுக்கு காலப்போக்கில் நாரத குமாரசாமி மற்றும் ரோகினி குமாரசாமி என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.[5] இருவரும் சேர்ந்து இந்தியா சென்று காஷ்மீரில் சிறீநகரில் ஒரு வீட்டுப் படகில் தங்கினர்.[6] குமாரசாமி ராஜபுதன ஓவியத்தையும், ஆலிஸ் கபுர்தலாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமுடன் இந்திய இசையையும் பயின்றார். அவர்கள் இங்கிலாந்து திரும்பியபோது, ஆலிஸ் ரத்தன் தேவி என்ற மேடை பெயரில் இந்திய பாடல்களை நிகழ்த்தினார். [3] ரத்தன் தேவி வெற்றிகரமாக இருந்தார். மேலும் பிரித்தனைச் சுற்றி சுற்றுப்பயணம் செய்தார். அங்கு இவரது கணவரின் அறிமுக பேச்சுக்குப் பிறகு இவர் பாடுவார்.

நிகழ்ச்சிகள்தொகு

1913ஆம் ஆண்டில் இவர் தனது கணவருடன் இணைந்து எழுதிய "பஞ்சாப் மற்றும் காஷ்மீர்" என்பதிலிருந்து முப்பது பாடல்களை வெளியிட்டார். இந்த புத்தகம் முப்பது பாடல்களுக்கு இசைக் குறியீட்டைக் கொடுத்தது. மேலும் வங்காள பன்முகக் கவி இரவீந்திரநாத் தாகூரின் அறிமுகத்தையும் உள்ளடக்கி இருந்தது. தாகூர் ஆலிஸின் பாடலைப் பற்றி மிகவும் கனிவுடன் இருந்தார்.[7] பத்திரிகைகளைத் தவிர, இசையமைப்பாளர் பெர்சி கிரெய்ங்கர், நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா மற்றும் கவிஞர் டபிள்யூ பி யீட்ஸ் ஆகியோரிடமிருந்தும் நல்ல விமர்சனங்களையும் பெற்றார். [3]

இரண்டாவது திருமணம்தொகு

குமாரசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக அவரை ஆலிஸ் விவாகரத்து செய்தார். பின்னர் அமெரிக்க கலைஞரான ஸ்டெல்லா ப்ளாச்சை மணந்தார். ஸ்டெல்லா இந்தியாவுக்குச் சென்று அமெரிக்காவுக்குத் திரும்பினார்.[8]

ஆலிஸ், சக்திவாய்ந்த காந்தங்களை கண்டுபிடித்ததற்காக அறியப்பட்ட பிரான்சிஸ் பிட்டர் என்பவரை 1928 மே 31 அன்று நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் திருமணம் செய்து கொண்டார் . வெஸ்டிங்ஹவுஸில் பணிபுரிந்த பிட்டர் 1930 இல் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள கால்டெக்கிலும் பின்னர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திலும் பேராசியராகவும் இருந்தார். .[9]

இறப்புதொகு

1958 சூலை 15, அன்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பிலிப்ஸ் இல்லத்தில் ஆலிஸ் இதய நோயால் இறந்தார். [9]

குறிப்புகள்தொகு

  1. Music and orientalism in the British Empire, 1780s to 1940s: portrayal of the East. Ashgate Publishing Ltd.. https://books.google.com/books?id=3cRlzq6mAzAC&pg=PA82. 
  2. "Ratan Devi is Dead. Wife of Francis Bitter of M. I. T. Had Been a Singer". https://www.nytimes.com/1958/07/15/archives/ratandevi-is-dead-wife-of-francis-bitter-of-m-i-t-had-been-a-singer.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 Crooks 2011.
  4. Coatts, Margot (October 2007) [2004]. Mairet, Ethel Mary (1872–1952). Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். http://www.oxforddnb.com/view/article/39639. பார்த்த நாள்: 17 October 2015.  (subscription required)
  5. "Ratan Devi is Dead. Wife of Francis Bitter of M. I. T. Had Been a Singer". த நியூயார்க் டைம்ஸ். July 15, 1958. https://www.nytimes.com/1958/07/15/archives/ratandevi-is-dead-wife-of-francis-bitter-of-m-i-t-had-been-a-singer.html. பார்த்த நாள்: 2015-06-05. 
  6. Alice Richardson, Making Britain, திறந்தவெளி பல்கலைக்கழகம், Retrieved 17 October 2015
  7. Clayton, Martin; Zon, Bennett (2007). Music and orientalism in the British Empire, 1780s to 1940s: portrayal of the East. Aldershot, Hampshire, England; Burlington, Vermont: Ashgate Publishing Ltd.. பக். 82–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-5604-3. https://books.google.com/books?id=3cRlzq6mAzAC&pg=PA82. 
  8. Seaman, G. R. (2004). Coomaraswamy, Ananda Kentish (1877–1947). Oxford: Oxford University Press. http://www.oxforddnb.com/view/article/55201.  (subscription required)
  9. 9.0 9.1 "Ratan Devi is Dead. Wife of Francis Bitter of M. I. T. Had Been a Singer". த நியூயார்க் டைம்ஸ். July 15, 1958. https://www.nytimes.com/1958/07/15/archives/ratandevi-is-dead-wife-of-francis-bitter-of-m-i-t-had-been-a-singer.html. பார்த்த நாள்: 2015-06-05. 

ஆதாரங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alice Coomaraswamy
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலீஸ்_குமாரசுவாமி&oldid=2964885" இருந்து மீள்விக்கப்பட்டது