ஆலு கோபி (Aloo gobi)(pronounced [aːlu ɡɔːbʱi] ) என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் உருளைக்கிழங்கு (ஆலு), பூக்கோசு (கோப்(h)i) மற்றும் இந்திய மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படும் சைவ உணவாகும்.[1] இது இந்தியா மற்றும் பாக்கித்தான் உணவுகளில் பிரபலமானது.[2] இந்த உணவு தயாரிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் இதன் நிறம் மஞ்சளாகக் காணப்படும். சில நேரங்களில் இதில் கருஞ்சீரகம் மற்றும் கறிவேம்பு சேர்க்கப்படும். பூண்டு, இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லித் தழை, தக்காளி, பட்டாணி, சீரகம் ஆகியவை பிற பொதுவான சேர்க்கைப் பொருட்களில் அடங்கும். பல வகையான வேறுபாடுகளுடன் இது தயாரிக்கப்படுகிறது.

ஆலு கோபி
Aloo Gobi
வகைகறி
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஇந்திய துணைக்கண்டம்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்உருளைக்கிழங்கு பூக்கோசு, மசலாப் பொருட்கள் (மஞ்சள்)

பிரபலமாக

தொகு

ஆலு கோபி என்பது வீசரின் 2021 இசைத் தொகுப்பில் ஓகே ஹியூமனின் இரண்டாவது இசையின் தலைப்பு மற்றும் மைய தலைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. Dalal, T. (2007). Punjabi Khana. Sanjay & Company. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89491-54-3. பார்க்கப்பட்ட நாள் December 3, 2018.
  2. Campbell, L.A. (2014). The China Study All-Star Collection: Whole Food, Plant-Based Recipes from Your Favorite Vegan Chefs. BenBella Books. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-939529-97-8. பார்க்கப்பட்ட நாள் December 3, 2018.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலு_கோபி&oldid=3198385" இலிருந்து மீள்விக்கப்பட்டது