ஆவடி தொடருந்து நிலையம்

ஆவடி தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Avadi railway station) , சென்னை புறநகர் தொடருந்து வலையத்தின் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் அமைந்துள்ள முக்கிய தொடருந்து முனையங்களுள் .ஒன்றாகும். சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி, நகர மையத்திலிருந்து மேற்கே 23 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் ஆவடியின் அண்மைய வட்டாரங்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. இது ஆவடியில் திருமலைராஜபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இது கடல் மட்டத்திலிருந்து 26.85 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

Avadi

ஆவடி
சென்னை புறநகர் இரயில்வே மற்றும் தெற்கு இரயில்வே
இரவில் ஆவடி தொடருந்து நிலையம்; ஆவடி.
பொது தகவல்கள்
அமைவிடம்திருமலைராசபுரம், ஆவடி, சென்னை, தமிழ் நாடு, India
ஆள்கூறுகள்13°07′06″N 80°06′06″E / 13.1182°N 80.1016°E / 13.1182; 80.1016
உரிமம்Ministry of Railways, Indian Railways
தடங்கள்மேற்கு, மேற்கு வடக்கு and மேற்கு தெற்கு பாதைகள் சென்னை புறநகர் இரயில்வே.
நடைமேடை4
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையாக தரையில் அமைந்த நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAVD[1]
பயணக்கட்டண வலயம்தெற்கு இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979[2]
முந்தைய பெயர்கள்தெற்கு இந்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் 201340,000/நாளொன்றுக்கு[3]

2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரயில்வே வெளியீட்டின்படி, எழும்பூர் தொடருந்து நிலையத்திற்கான முனையமாக, தாம்பரம் நிலையம் உருவாக்கப்படுவது போல, சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கான தொடருந்து பெட்டி முனையமாக (செயற்கைக்கோள் முனையம்) (ஆங்கிலம்: coaching terminal (satellite terminal) ஆவடி நிலையத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[4]

வரலாறு தொகு

1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி, சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர் பிரிவின் மின்மயமாக்கலுடன், நிலையத்தின் முதன்மை பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. ஆவடியில் உள்ள மின் மோட்டார் பொருத்தப்பட்ட தொடருந்து பெட்டிகளை (ஆங்கிலம்: electrical motor unit (EMU) நிறுத்துமிடத்திற்கான பாதைகள் பிப்ரவரி 1, 1980 ஆம் தேதியன்று மின்மயமாக்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி வில்லிவாக்கம் -ஆவடி பிரிவு மின்மயமாக்கலுடன் நிலையத்தில் உள்ள கூடுதல் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டன.[2]

1977 ஆம் ஆண்டிலேயே ஆவடி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் பூர்வாங்க பணிகள், மின் கம்பங்கள் போன்றவை காணப்பட்டன. முதல் அகலப்பாதை மின்சார மின் மோட்டார் தொடருந்துகள் முதன்முதலில் சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி பிரிவில் 1979 ஆம் ஆண்டிலும், அடுத்த கட்டமாக 1980 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் பிரிவிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. 1971 முதல் 1980 வரை, திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் புறநகர் தொடருந்து பெட்டிகளை இழுத்துச் செல்லும் WP நீராவி இன்ஜின்கள் பணியில் இருந்தன. ஆவடி விமானப்படை நிலையம் கண்டோன்மென்ட் பகுதியில் (ஆங்கிலம்: Avadi Air Force Station Cantonment Area) உள்ள மின் பணிமனை (ஆங்கிலம்: E Depot) வரை செல்லும் "பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்" (ஆங்கிலம்: Pattabhiram Military Siding) தொடருந்தினை டபிள்யூடிஎஸ் வகை ஷட்டில் டீசல் இன்ஜின் இழுத்துச் சென்றது. இது தொடருந்துகளை அடையாளம் காண உதவியது. ஆவடி வழியாக செல்லும் விரைவு தொடருந்துகளுக்கு மின்சார டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டன. . 1960களின் பிற்பகுதியிலும், 1970களின் முற்பகுதியிலும், பால்ட்வின் கிளாஸ் WP நீராவி லோகோக்கள் (ஆங்கிலம்: Baldwin Class WP steam locos) தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் பாம்பே மெயில் போன்ற தொடருந்து பெட்டிகளை கல்யாணில் இருந்து இழுத்துச் சென்றன. மும்பை - கல்யாண் வழித்தடத்தில் இயக்குவதற்காக வலிமைமிக்க WCM DC மின்சார இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டன.[சான்று தேவை]

தளவமைப்பு தொகு

இந்த நிலையத்தில் இரண்டு பக்க இணைப்புப் பாதைகள் (ஆங்கிலம்: Loop lines) உட்பட ஆறு தடங்கள் மற்றும் நான்கு நடைமேடைகள் உள்ளன. முதல் நடைமேடையானது நிலையத்தின் நுழைவாயில் மற்றும் டிக்கெட் கவுண்டர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பக்க நடைமேடையாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகள் ஒரு தீவு போல அமைந்துள்ளன. நான்காவது நடைமேடை நிலையத்தின் வடக்கு முனையின் எல்லையாக உள்ளது. மற்றும் அனைத்து நடைமேடைகளும் மிக நீளமானவை. இந்த நடைமேடைகள் ஒரு நடைப்பாலம் (ஆங்கிலம்: footbridge) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 40,000 பயணிகளைக் கையாளுகிறது.[3]

வளர்ச்சிகள் தொகு

சென்னை புறநகர் தொடருந்து வலையத்தில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஆவடியும் ஒன்றாகும், அவை சிறந்த நிலையங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன.[5]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Railway Station Codes". stationcodes.com. Archived from the original on 4 May 2012. பார்க்கப்பட்ட நாள் 26 Aug 2012.
  2. 2.0 2.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
  3. 3.0 3.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013. http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. 
  4. "Plans to develop Avadi or Ambattur railway station". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai). 16 November 2008 இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104005947/http://articles.timesofindia.indiatimes.com/2008-11-16/chennai/27917600_1_railway-station-southern-railway-railway-board. 
  5. "Nemilichery station to be ready in three months". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai). 4 August 2009 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103143041/http://articles.timesofindia.indiatimes.com/2009-08-04/chennai/28201714_1_railway-stations-adarsh-stations-thiruninravur. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி_தொடருந்து_நிலையம்&oldid=3742442" இலிருந்து மீள்விக்கப்பட்டது