ஆவணம் முத்துமாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆவணம் முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், ஆவணம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:ஆவணம், பேராவூரணி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பேராவூரணி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ முத்து மாரியம்மன்
குளம்:அம்மன் குன்று
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத்திருவிழா
உற்சவர் தாயார்:மாரியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் ஆகும்.[சான்று தேவை] இங்கே இருக்கும் மாரியம்மனின் அக்கா பிடாரி அம்மன் ஆகும்.முற்காலத்தில் இங்குள்ள மாரியம்மன் மற்றும் பிடாரி அம்மன் உற்சவர் சிலையை கள்வர்கள் திருடி சென்றுவிட்டனர் பின்னர் திருடிய கள்வர்களின் கண்கள் பறிபோயிகிய நிலையில் கிராமத்து அருகில் ஒரு பாழடைந்த கிணற்றில் சிலைகளை போட்டுவிட்டு அங்கே கண் தெரியாத நிலையில் திருடர்கள் இருந்தன பின்னர் பக்கத்து கிராமத்து மக்கள் கிணற்றை பார்த்த பொழுது சிறுமி கிணற்றுக்குள் நிற்பது போன்று தெரிந்துள்ளது அதைக் கண்டு இரண்டு ஆட்கள் உள்ளே இறங்கி பார்த்த பொழுது அம்மன் சிலைகள் இருந்தது தெரியவந்தது பின்னர் சிலைகளை கைப்பற்றி கோவிலில் ஒப்படைத்தனர். சித்திராபௌர்ணமி முதல் 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம் மற்றும் மது எடுப்பு இங்கு பிரசித்தி பெற்ற ஒன்றாகும் மாரியம்மனை வழிபட்டால் அம்மை நோய் குணமடையும் திருமணத்தடை குழந்தை பாக்கியம் கிடைக்கும். தற்பொழுது இங்கே தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களே இக்கோயிலை பராமரித்து வருகிறார்கள். இங்கே வருடாந்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். தலவிருட்சம்: வேம்பு மற்றும் மணோரஞ்சீதம்

கோயில் அமைப்பு

தொகு

முத்துமாரியம்மன் கோவில் கம்பீரமான ராஜகோபுரம் கொடிமரம் அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளது அதனையடுத்து உள்ளே நுழைத்தால் கருவறை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது இங்கு சிவசக்தி விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகிறார்கள்.

பூஜைகள்:

காலை 8மணி முதல் 9:30மணிவரையிலும் மாலை 5:40மணி முதல் 8:15வரையிலும் நடை திறந்திருக்கும் இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைத்திருவிழா முக்கிய நிகழ்வாக தேரோட்டம் மற்றும் மது எடுத்தல் நடைபெறுகிறது

கோவில்வழித்தடம்:

பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது(24கீ.மி) புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி வழியாக செல்லும் வழியில் உள்ளது(35கீமி)ஆவணம் கைகாட்டி கிராமம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)