ஆஷா சின்கா
ஆஷா சின்கா (Asha Sinha) சார்க்கண்டு மாநில காவல்துறையில் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனராவார். 1992ஆம் ஆண்டில் இந்தியத் துணை இராணுவப் படைகளின் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் 1982-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். மகாராட்டிரம், சார்க்கண்டு, பீகார், இந்திய அரசாங்கத்தில் பல முக்கிய பணிகளை வகித்துள்ளார். 2013ஆம் ஆண்டில் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியான அதன் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ஆஷா சின்கா | |
---|---|
இந்தியாவில் துணை ராணுவப் படையின் முதல் பெண் தளபதி | |
பிறப்பு | ஆஷா தம்பன் 24 மார்ச் 1956 கோட்டயம், கேரளா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை (பொருளியல்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருவன்ந்தபுரம் அரசு மகளிர் கல்லூரி |
பணி | இந்தியக் காவல் பணி |
பெற்றோர் | பி. கே. தம்பன்-வலசம்மா தம்பன் |
வாழ்க்கைத் துணை | சஞ்சய் சின்கா |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | புகழ்பெற்ற சேவைக்காக காவலர் பதக்கம். |
சொந்த வாழ்க்கையும், கல்வியும்
தொகுஆஷா, தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கோட்டயத்தில் பிறந்தார். பட்டய கணக்கறிஞரான இவரது தந்தை பி. கே. தம்பன் கேரள மாநில மின்சார வாரியத்தில் பணிபுரிந்தார். இவரது தாய் திருமதி. வல்சம்மா தம்பன், ஒரு இல்லத்தரசியாவார். திருவனந்தபுரத்திலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். மேலும், திருவனந்தபுரத்திலுள்ள அரசு மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பையும், முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார்.
திருவனந்தபுரம், அனைத்து புனிதர்கள் கல்லூரியிலும், கண்ணூரிலுள்ள சிறீ நாராயணா கல்லூரியில் சிறிது காலம் கற்பித்த பிறகு, இவர் இந்திய பொது காப்பீட்டு நிறுவனத்தில் நேரடி ஆட்சேர்ப்பு உதவியாளராக சேர்ந்தார். பின்னர், 1982 இல் இந்தியக் காவல் பணியில் சேர இவர் தனது பணியை விட்டு வெளியேறினார். பின்னர் 1983ஆம் ஆண்டில் இந்திய சுங்கத் துறையில் சேர்ந்தார். இவர் தனது வருங்கால கணவரான சஞ்சய் சின்காவை பொது காப்பீட்டு நிறுவனத்தில் சந்தித்தார். இவர்களுக்கு இரண்டு அபிசேக் சின்கா (வழக்கறிஞர்) என்ற ஒரு மகனும், வைஷ்ணவி (பத்திரிகையாளர்) என்ற ஒரு மகளும் என இரு குழந்தைகள் இருந்தனர்.
தொழில்
தொகுஆஷா சின்கா 1982 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். மேலும், கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் பல பொறுப்புகளில் நாட்டிற்கு சேவை செய்தார். இவர் ஒன்றிய அரசிலும், மகாராட்டிரம், பீகார், சார்க்கண்டு ஆகிய மாநில அரசுகளுக்கும் பணியாற்றியுள்ளார்.
இந்தியக் காவல் பணி அதிகாரியாக பட்னாவின் காவல்துறைக் கண்காணிப்பாளர், சீதாமர்ஹி, துணைப் பிரிவு காவல் அதிகாரி உட்பட இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். மகாராட்டிரா அரசுக்கு இவர் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டார். மும்பையில் மூன்று ஆண்டுகள் ஊழல் தடுப்பு பணியகத்தில் துணைக் காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மகாராட்டிரா அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இவர் பீகார் திரும்பினார். பின்னர் 1992இல் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவின் அனைத்து துணை இராணுவப் படையிலும் இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் இவர் பிஐப்ரி, நவ சேவா துறைமுகம், ராய்காட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை கவனிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சாதனைகள்
தொகுஇவர், இந்தியாவில் துணை ராணுவப் படைக்குக் கட்டளையிட்ட முதல் பெண் அதிகாரியாக, மும்பை மசாகோவ் கப்பல்துறை தளபதியாக நியமிக்கப்பட்டார். சார்க்கண்ட் மாநிலத்தில் சிறப்புப் பிரிவிற்கும், பின்னர் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஆகியவற்றில் புலனாய்வுத் துறைக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியக் காவல் பணி பெண் அதிகாரி ஆனார். காவல் ஆணையர் பிரான்சிஸ் இந்த்வார் என்பவர் 2009 இல் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட சோகமான நிகழ்வுக்குப் பிறகு, உளவுத்துறை தோல்வியடைந்ததால், மாநில புலனாய்வு பிரிவின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நக்சலைட்கள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், 2009இல் மக்களவைக்கும், மாநிலச் சட்டப் பேரவைக்கும் தேர்தல்களை ஒப்பீட்டளவில் எவ்வித சம்பவமில்லாமல் பணியாற்றினார்.
விருதுகள்
தொகுஇவரது சேவைகளைப் பாராட்டி, 2010ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சேவைக்கான குடிய்ரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.ef>
மேற்கோள்கள்
தொகு- http://www.ashasinha.in/ பரணிடப்பட்டது 2020-11-01 at the வந்தவழி இயந்திரம்
- https://www.jhpolice.gov.in/medals/smt-asha-sinha-15193-1367846379 பரணிடப்பட்டது 2020-03-25 at the வந்தவழி இயந்திரம்
- https://jhpolice.gov.in/sites/default/files/documents-reports/jhpolice_IPS-disposition-list_100815.pdf பரணிடப்பட்டது 2017-02-15 at the வந்தவழி இயந்திரம்
- https://m.telegraphindia.com/states/jharkhand/intelligence-wing-gets-more-teeth/cid/584073
- https://www.business-standard.com/article/pti-stories/reshuffle-in-jharkhand-police-department-113031100643_1.html
- https://www.telegraphindia.com/states/jharkhand/home-guard-dg-to-huddle-on-graft-issue/cid/1425931
- https://news.webindia123.com/news/articles/india/20091018/1363721.html பரணிடப்பட்டது 2020-03-25 at the வந்தவழி இயந்திரம்
- https://m.telegraphindia.com/states/jharkhand/blaze-brigade-rolls-out/cid/1428884
- https://www.telegraphindia.com/states/jharkhand/police-station-turns-friendly/cid/326153
- https://informatics.nic.in/news/341
- https://dtf.in/wp-content/files/Indian_Police_Service_IPS_-_Civil_List_2014.htm
- https://www.telegraphindia.com/states/jharkhand/first-kid-friendly-thana-shut-in-capital/cid/222887
- https://www.igovernment.in/articles/31458/five-senior-ips-officers-reshuffled-in-jharkhand பரணிடப்பட்டது 2021-09-01 at the வந்தவழி இயந்திரம்
- https://www.dailypioneer.com/2014/state-editions/company-commanders-take-oath-of-service.html
- https://www.telegraphindia.com/states/jharkhand/trainers-arrested-in-jawan-drowning/cid/732441
- https://www.jhpolice.gov.in/news/आशा-सिन्हा-डीजी-और-एसएन-प्रधान-एडीजी-बने-14127-1363071091 பரணிடப்பட்டது 2021-09-01 at the வந்தவழி இயந்திரம்
- https://www.telegraphindia.com/states/jharkhand/police-at-ease-with-pen-and-pistol/cid/862257
- https://www.telegraphindia.com/states/jharkhand/44-member-fleet-to-fight-fire-even-in-bylanes-relief-for-blazing-infrastructure-shortfall-as-new-vehicles-wait-to-be-customised-into-tenders-big-and-small/cid/203356
- https://jhpolice.gov.in/cid-adgp-succession-board பரணிடப்பட்டது 2021-09-01 at the வந்தவழி இயந்திரம்
- https://www.telegraphindia.com/states/jharkhand/2-yrs-on-heroes-recognised/cid/557504
- https://122.15.233.169/news/रांची-में-चल-रहा-यातायात-जागरुकता-अभियान-23987-1431689789[தொடர்பிழந்த இணைப்பு]
- https://www.igovernment.in/articles/31458/five-senior-ips-officers-reshuffled-in-jharkhand பரணிடப்பட்டது 2021-09-01 at the வந்தவழி இயந்திரம்
- http://www.thespeedpost.com/jharkhand-dg-hg-stresses-on-physical-fitness-of-homeguards/[தொடர்பிழந்த இணைப்பு]
- http://viewpointjharkhand.com/2015/06/12/कंपनी-कमांडर-को-शपथ-दिलाय/[தொடர்பிழந்த இணைப்பு]
- https://m.telegraphindia.com/states/jharkhand/ranchi-gets-a-new-ssp-in-cop-reshuffle/cid/733877
- https://www.jhpolice.gov.in/news/डीजी-प्रशि0-आशा-सिन्हा-को-जैप-वन-ग्राउंड-में-दी-गई-विदाई-26270-1459422534 பரணிடப்பட்டது 2021-09-01 at the வந்தவழி இயந்திரம்
- https://www.bhaskar.com/news/c-181-1892186-ra0024-NOR.html
- http://www.svpnpa.gov.in/memories/alumni-gallery/378-1982-batch