ஆஷா நேகி

இந்திய தொலைக்காட்சி நடிகை

ஆஷா நேகி (Asha Negi) ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார்.[3] "பவித்ர ரிஷ்த்தா" என்ற தொடரில் "பூர்வி" பாத்திரத்தில் நடித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்[4] மேலும் "ஏக் மத்தி ஆஸ்மான்" கல்பனா என்ற வேடம், "குச் தோ ஹை தேரே தர்மியான்" கோயல் என்ற வேடம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் இவரது துணைவரான ரித்விக் தஞ்சனியுடன் இணைந்து "நாக் பாலியே 6" என்ற இந்திய நடன நிகழ்ச்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.[5]

ஆஷா நேகி
2016 இல் ஆஷா நேகி பிந்தாஸ் ("ஏ ஹே ஆஷிகி") கண்காட்சியில்
பிறப்புதேராதூன், உத்தராகண்டம், இந்தியா[1]
இருப்பிடம்மும்பை, இந்தியா[1]
தேசியம்இந்தியன்
பணி
  • நடிகை
  • நிகழ்ச்சித் தொகுப்பாளர்
  • நடனமாடுபவர்
செயற்பாட்டுக்
காலம்
2010 முதல் தற்போது வரை
துணைவர்ரித்விக் தஞ்சனி (2013 முதல் தற்போது வரை)[2]

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

ஆரம்பகால வாழ்க்கை & அறிமுக நிகழ்ச்சி

தொகு

நேகி, உத்திராகான்ட் மாநிலத்தின் தேராதூனில் பிறந்து வளர்ந்தார். 2009 ஆம் ஆண்டில், அவர் "மிஸ் உத்தரகாண்ட்"டாக முடிசூட்டப்பட்டார். [சான்று தேவை] இறுதியில் நடிப்புத் தொழிலைத் தொடர மும்பைக்கு சென்றார்.[1]

 
2013 ஆம் ஆண்டில் பவித்ரா ரிஷ்தா இடுகையின் துவக்க விழாவில் நேகி.

நேகி 2009இல் விளம்பர நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர், தன்னுடைய கல்லூரி நாட்களிலேயே "மிஸ் உத்தரகாண்ட்" பட்டம் பெற்றார்.[6]

அவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றினார், பின்னர் அவர் 2010 ஆம் ஆண்டில் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான "சாப்பான் சே பஹார் நைனா" என்ற தொடரில் "மதுரா" என்ற வேடத்தில் தனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை நடித்தார்.[7] 2011 இல் ஆஷா தனது அடுத்த தொடரான ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸாரின் பிரபல நிகழ்ச்சியான படே அச்சே லாகே ஹெயின்" என்பதில் தனது உயிரியல் சகோதரியான அபேஷ்கா மல்ஹோத்ராவின் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார்,[8] அந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய அனுபவமாக கொண்டதுடன், முன்னணி நடிகயான "சாக்‌ஷி தன்வர்" தனக்கு உத்வேகம் அறித்ததாக கூறுயிள்ளார்.[9]

திருப்பம் மற்றும் வெற்றி (2011-2014)

தொகு

ஜீ தொலைக்காட்சியின் "பவித்ரா ரிஷ்தா" என்ற தொடரில் அர்ச்சனா தேஷ்முகின் மகளான "புருஷி தேஷ்முக்" பாத்திரத்தில் ஒரு அறிவார்ந்த, அழகான மற்றும் உறுதியான புதிய தலைமுறை கொண்டாடுபராக நடித்திருந்தார்.[10] அத்தொடரில் அவரது பாத்திரம் பரவலாக பாராட்டப்பட்டது, மற்றும் அர்ஜுன் (ரித்விக் தஞ்சனி) உடன் திரை நடிப்பிற்கான பெரும் ரசிகர்களை பெற்றார்.[11]

அந்த ஆண்டின் நட்சத்திர நடிகருக்கான கோல்ட் விருது வென்றார், மேலும் ரித்விக்குடன் ஜீ ரிஷ்தே விருது பெற்றார். ஆஷா, புதுமுகத்திற்கான இந்திய டெலி விருதினயும் வென்றார். 2014 ஆம் ஆண்டில் இவரது துணைவரான ரித்விக் தஞ்சனியுடன் இணைந்து "நாக் பாலியே 6" என்ற இந்திய நடன நிகழ்ச்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.[12][13] ஆகஸ்ட் 2014 இல், நேகி ஜீ தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியான "ஏக் முத்தி ஆஸ்மான்" தொடரில் நடித்துள்ளார்.[14] ஆஷிஷ் சௌத்ரியுடன் கல்பன ராகவ் சின்கானியா என்ற பாத்திரத்தில் நடித்தார். "கில்லர் கரோக்கி ஆட்கா தோ லட்காஹ்" என்ற நிகழ்ச்சியில் ஒரு சிறியத் தோற்றாத்தில் வந்தார்.[15]

சொந்த வாழ்க்கை

தொகு

2011 இல், அவர் ரித்விக் தஞ்சனி "பவித்ரா ரிஷ்தா" நிகழ்ச்சியில், பின்னர் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்துகொண்டனர்.[2] நேகி, தஞ்சனி ஆகிய இருவருமே தொடர்பில் இருக்கின்றனர்.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Small town girls who made it big on small screen - Times Of India". The Times of India. 2012-08-18. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "Rithvik Dhanjani and Asha Negi promote 'Nach Baliye 6' - The Times of India". Timesofindia.indiatimes.com. 13 October 2013. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  3. "I'd like to see Delhi's nightlife: Asha Negi - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. 1 June 2012. Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Soapbox's new screen jodis are amping the romance quotient". Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 August 2012.
  5. "TV's hit couple Rithvik and Asha Negi win 'Nach Baliye 6′". The Indian Express. 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  6. Ashok kumar says:. "MISS UTTARAKHAND CONTEST - The Biggest Beauty Pageant". Scenarioxpertz.com. Archived from the original on 2012-11-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-26.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  7. "Asha Negi opposite Karan Sharma in a TV show". பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.
  8. "Asha Negi in once again...Shafaq out of Pavitra Rishta". tellychakkar.com. Archived from the original on 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 2011-12-12.
  9. "Asha Negi: Sakshi Tanwar is my inspiration Gallery at". Indya.com. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-26.
  10. Tags:. "Manav- Archana to separate in Pavitra Rishta; Asha Negi to play their adopted daughter". Tellychakkar.com. Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2012-10-26.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  11. "Soapbox's new screen jodis are amping the romance quotient". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  12. "Nach Baliye 6: Rithvik Dhanjani & Asha Negi win". பார்க்கப்பட்ட நாள் 1 February 2014.
  13. "Was confident of winning 'Nach Baliye 6', says Asha Negi". பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
  14. "Asha Negi enters Ek Mutthi Aasman". 
  15. "Govinda, Krushna to shake a leg in 'Killerr Karaoke, Atka Toh Latkah'". பார்க்கப்பட்ட நாள் 11 March 2015.
  16. "Cute Television Lovebirds Rithvik Dhanjani And Asha Negi's Love Story Is Too Filmy To Handle". 8 February 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷா_நேகி&oldid=4156154" இலிருந்து மீள்விக்கப்பட்டது