ஆஸ்கர் ராபர்ட்சன்


ஆஸ்கர் பாமர் ராபர்ட்சன் (Oscar Palmer Robertson, பி. நவம்பர் 24, 1938) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். சின்சினாட்டி ராயல்ஸ் மற்றும் மில்வாக்கி பக்ஸ் அணிகளில் புள்ளிபெற்ற பின்காவல் மற்றும் சிறு முன்நிலை நிலைகளில் விளையாடியுள்ளார். 6'5" உயரம் 220 பவுண்ட் எடை கொண்ட ராபர்சன் 12 முறையாக என்.பி.ஏ. பல-நட்சத்திர அணியில் (All-Star team) தேர்ந்தெடுக்கப்பட்டார். என்.பி.ஏ. வரலாற்றிலேயே ஒரு முழு பருவத்தில் சராசரியாக ஒரு போட்டியில் "மும்மை-இரட்டை" (triple double) பெற்ற ஒரே வீரர் இவர்; அதாவது, மூன்று புள்ளியியல் பகுப்புகளில் குறைந்தது 10 சராசரியாக பெற்றார். 1980இல் கூடைப்பந்து புகழவை இவரை தேர்வு செய்துள்ளது. 1996இல் என்.பி.ஏ. வரலாற்றில் ஐம்பது உயர்ந்த வீரர்களின் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் இவர் என்.பி.ஏ.க்கு எதிராக நடத்திய நீதி வழக்கின் காரணமாக என்.பி.ஏ. வீரர்கள் பல உரிமைகளும் உயர்ந்த அளவில் சம்பளம் பெற்றனர்.

ஆஸ்கர் ராபர்ட்சன்
Oscar Robertson
நிலைபந்துகையாளி பின்காவல், புள்ளிபெற்ற பின்காவல், சிறு முன்நிலை
உயரம்6 ft 5 in (1.96 m)
எடை220 lb (100 kg)
சங்கம்என்.பி.ஏ.
அணிசின்சினாட்டி ரோயல்ஸ், மில்வாக்கி பக்ஸ்
சட்டை எண்#14, 1
பிறப்புநவம்பர் 24. 1938
ஷார்லட், டென்னசி
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிசின்சினாட்டி
தேர்தல்1ம் மொத்தத்தில், 1960
சின்சினாட்டி ரோயல்ஸ்
வல்லுனராக தொழில்1960–1974
முன்னைய அணிகள் சின்சினாட்டி ரோயல்ஸ், மில்வாக்கி பக்ஸ்
விருதுகள்* 1x NBA Champion (1971)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்கர்_ராபர்ட்சன்&oldid=4131879" இலிருந்து மீள்விக்கப்பட்டது