ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
ஆத்திரேலிய நாடாளுமன்றம் (Parliament of Australia) அல்லது பொதுநலவாய நாடாளுமன்றம் (Commonwealth parliament) என்பது ஆத்திரேலிய அரசாங்கத்தின் சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும். இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை ஒத்தது. ஆனாலும் ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் சில சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆத்திரேலிய அரசியமைப்பின் படி, ஆத்திரேலிய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: அரசி, மேலவை, மற்றும் பிரதிநிதிகள் அவை. அரசி பொதுவாக தனது பிரதிநிதியாக பொது-ஆளுநரை (Governor-General) நியமித்துள்ளார்.
ஆத்திரேலிய நாடாளுமன்றம் Parliament of Australia | |
---|---|
47வது நாடாளுமன்றம் | |
வகை | |
வகை | |
அவைகள் | மேலவை பிரதிநிதிகள் சபை |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 9 மே 1901 |
தலைமை | |
அரசர் | ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு 9 செப்டெம்பர் 2022 முதல் |
ஆளுனர் | டேவிட் ஹர்லி 1 சூலை 2019 முதல் |
மேலவைத் தலைவர் | சு லைன்ஸ், தொழிற்கட்சி 26 சூலை 2022 முதல் |
சபாநாயகர் | மில்டன் டிக், தொழிற்கட்சி 26 சூலை 2022 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 151 கீழவை உறுப்பினர்கள், 76 மேலவை உறுப்பினர்கள் |
கீழவை அரசியல் குழுக்கள் | அரசு (77) தொழிற்கட்சி (77) ஏனையோர் (7) |
செனட் அரசியல் குழுக்கள் | அரசு (26) தொழிற்கட்சி (26) ஏனையோர் (18) |
ஆட்சிக்காலம் | கீழவை: 3ஆண்டுகள் செனட்: 6 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
Instant-runoff voting | |
Single transferable vote | |
அண்மைய கீழவை தேர்தல் | 21 மே 2022 |
Last செனட் election | 21 மே 2022 (half) |
அடுத்த கீழவை தேர்தல் | 2025 |
அடுத்த செனட் தேர்தல் | 2025 (half) |
மறுவரையறை | Redistributions are carried out on a state-by-state basis by the Australian Electoral Commission. |
கூடும் இடம் | |
நாடாளுமன்ற மாளிகை, கான்பரா, தலைநகரம், ஆத்திரேலியா | |
வலைத்தளம் | |
aph |
கீழவை, (அல்லது பிரதிநிதிகள் அவை), தற்போது 150 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஆத்திரேலியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொகுதிகளின் மக்கள் தொகை, எல்லைகள் மாறும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாற்றமடையும். 1984 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 125 இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது. இது 1993 இல் 147 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 1996 இல் 148 ஆக அதிகரிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் 150 ஆக அதிகரித்தது.
மேலவை, (அல்லது செனட் அவை), 76 உறுப்பினர்களைக் கொண்டது: ஒவ்வொரு மாநிலத்திலும் 12 உறுப்பினர்களும், இரண்டு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் இருவருமாக மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு அவைகளும் கான்பராவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் இரு வெவ்வேறு அறைகளில் கூடுகின்றன.
வெளி இனைப்புகள்
தொகு- நாடாளுமன்றத்தின் இணையத்தளம்
- ஆஸ்திரேலிய அரசியலமைப்பு
- ஆஸ்திரேலியா நாடாளுமன்ற முறைமை பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், சிறப்பு ஒலிபரப்புச் சேவையின் விவரணம் (தமிழில்)