ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அல்லது கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (APJ Abdul Kalam Technological University or Kerala Technological University) என்பது இந்தியா மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு மாநில பொதுத்துறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய விண்வெளி விஞ்ஞானியுமான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக 2015ஆம் ஆண்டு அன்று இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] இப்பல்கலைக்கழகத்துடன் 170க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைவுப் பெற்றுள்ளன.[3] இக்கல்லூரிகள் கேரளாவின் 14 மாவட்டங்களில் பரவியுள்ளன. இது ஒப்பீட்டளவில் புதிய மற்றும் சீர்திருத்தப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும்.[3][4]
தமிழ் | ஏ. பி. ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
---|---|
மலையாளம் | എ. പി. ജെ. അബ്ദുൽ കലാം ടെക്നോളജിക്കൽ യൂണിവേഴ്സിറ്റി |
ஆங்கில மொழி | APJ Abdul Kalam Technological University' |
Other name | கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 2014 |
நிதிநிலை | ₹ 50 மில்லியன் |
வேந்தர் | கேரள ஆளுநர் |
துணை வேந்தர் | முனைவர் கே. சிவபிரசாத்[1] |
மாணவர்கள் | 160,000+ |
அமைவிடம் | , , 8°32′30″N 76°54′21″E / 8.5416°N 76.9057°E |
மொழி | ஆங்கிலம் |
நிறங்கள் | நீலம், சென்னீலம், மற்றும் ஆலிவ் |
சேர்ப்பு | அ.இ.தொ.க.கு ப.மா.கு இ.ப.ச |
இணையதளம் | ktu |
வரலாறு
தொகுகேரள தொழில்நுட்ப பல்கலைக்கழம், 21 மே 2014 அன்று ஓர் அரசாணை மூலம் கேரள அரசால் நிறுவப்பட்டது.[5] அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளரான குஞ்செரியா பி. ஐசக், 1 செப்டம்பர் 2014 அன்று இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார், மேலும் முன்னாள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரான எம். அப்துல் இரகுமான், முதல் சார்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6] இப்பல்கலைக்கழகத்தின் முதல் கல்வித் தொகுதிக்கான வகுப்புகள் 1 ஆகத்து 2015 அன்று தொடங்கியது.[3]
கல்வி
தொகுஇப்பல்கலைகழகம் வழங்கும் கல்வியின் பயிற்று மொழி ஆங்கிலம். இப்பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட நிலைகளில் பொறியியலில் பின்வரும் பாடங்களை வழங்குகிறது.[7]
இளநிலை தொழில்நுட்பவியல்
தொகு- தொழில்நுட்பம் (பி.டெக்)
- கட்டிடக்கலை
- வடிவமைப்பு
- தொழிற்கல்வி
- உணவக மேலாண்மையும் உணவாக்கத் தொழில்நுட்பமும்
முதுநிலை தொழில்நுட்பவியல்
தொகு- தொழில்நுட்பம்
- கட்டிடக்கலை
- வணிக நிர்வாகவியல்
- கணினி பயன்பாடு
முனைவர் திட்டம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Hindu Bureau (2024-11-27). "Governor appoints interim V-Cs for KTU, Digital University" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/governor-appoints-interim-v-cs-to-ktu-digital-university/article68918876.ece.
- ↑ Press Trust of India (PTI) (29 July 2015). "Kerala's Technological University to be Named After President APJ Abdul Kalam". NDTV (திருவனந்தபுரம்). https://www.ndtv.com/kerala-news/keralas-technological-university-to-be-named-after-president-apj-abdul-kalam-1201742/amp/1.
- ↑ 3.0 3.1 3.2 "KTU BTech first batch results out: 36.41 pass percentage recorded". The New Indian Express. 21 July 2019. https://www.newindianexpress.com/amp/story/states/kerala/2019/jul/21/ktu-btech-first-batch-results-out-3641-pass-percentage-recorded-2007047.html. பார்த்த நாள்: 16 February 2023.
- ↑ K, Krishnachand (2018-12-30). "Government nod to set up Kerala Technological University HQ in capital". The New Indian Express. https://www.newindianexpress.com/states/kerala/2018/dec/30/govt-nod-to-set-up-ktu-hq-in-capital-1918208.html.
- ↑ Kerala Technological University Ordinance. Government of Kerala. 5 மே 2014. Archived from the original on 29 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
- ↑ "VC for technical university". The Hindu. 22 July 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/vc-for-technical-university/article6235742.ece. பார்த்த நாள்: 29 October 2014.
- ↑ "Academic Programs".