இசுக்காண்டியம்(III) சல்பைடு

வேதிச் சேர்மம்


இசுக்காண்டியம்(III) சல்பைடு (Scandium(III) sulfide) என்பது Sc2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் தனிமமும் கந்தகமும் சேர்ந்து மஞ்சள் நிறத்தில் இச்சேர்மம் உருவாகிறது.

இசுக்காண்டியம்(III) சல்பைடு
Scandium(III) sulfide
இசுக்காண்டியம்(III) சல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம் செசுகியூசல்பைடு
இனங்காட்டிகள்
12166-29-9 Y
ChemSpider 145824
EC number 235-320-1
InChI
  • InChI=1S/3S.2Sc/q3*-2;2*+3
    Key: KAYAWNAUDDJSHN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166646
  • [S-2].[S-2].[S-2].[Sc+3].[Sc+3]
பண்புகள்
Sc2S3
வாய்ப்பாட்டு எடை 186.11 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
அடர்த்தி 2.91 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,775 °C (3,227 °F; 2,048 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுகாண்டியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இட்ரியம்(III) சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

Sc2S3 சேர்மத்தின் படிக அமைப்பு சோடியம் குளோரைடு சேர்மத்தின் படிக அமைப்புக்கு நெருக்கமாக தொடர்புடையதாகும். இக்கட்டமைப்பு ஒரு கனசதுர சமகோள நெருக்கப் பொதிவு அயனிகளை அடிப்படையாகக் கொண்டதாகும். NaCl கட்டமைப்பில் அயனி அணிக்கோவையில் உள்ள அனைத்து எண்முக இடைவெளிளும் நேர்மின் அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. Sc2S3 கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கு காலியாக உள்ளது. காலியிடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மிகவும் சிக்கலான முறையில், Fddd என்ற இடக்குழுவைச் சேர்ந்த ஒரு பெரிய செஞ்சாய்சதுர அலகு செல்லிற்கு வழிவகுக்கிறது.[1]

தயாரிப்பு

தொகு

உலோக சல்பைடுகள் பொதுவாக இரண்டு தனிமங்களையும் சேர்த்து வெப்பமூட்டுவதால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இசுக்காண்டியத்தைப் பொறுத்தவரை, இந்த தயாரிப்பு முறையில் இசுக்காண்டிய மோனோசல்பைடு (ScS) மட்டுமே கிடைக்கிறது. இசுக்காண்டியம்(III) ஆக்சைடை பாயும் ஐதரசன் சல்பைடின் கீழ் 1550 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு அல்லது அதற்கு மேலாக கிராபைட்டு புடக்கலனில் இட்டு 2-3 மணிநேரத்திற்கு சூடுபடுத்தினால் Sc2S3 தயாரிக்கலாம்.[1]

Sc2O3 + 3H2S → Sc2S3 + 3H2O

உயர் வெப்பநிலைகளில் இசுக்காண்டியம்(III) குளோரைடு சேர்மத்துடன் உலர் ஐதரசன் சல்பைடு வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இசுக்காண்டியம்(III) சல்பைடு தயாரிக்கலாம்:[2]

2 ScCl3 + 3 H2S → Sc2S3 + 6 HCl

வினை

தொகு

1100 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இசுக்காண்டியம்(III) சல்பைடு கந்தகத்தை இழந்து, Sc1.37S2.[1] போன்ற விகிதவியல் ஒவ்வா சேர்மங்களாகச் சிதைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Dismukes, J. P.; White, J. G. (1964). "The Preparation, Properties, and Crystal Structures of Some Scandium Sulfides in the Range Sc2S3-ScS". Inorg. Chem. 3 (9): 1220–1228. doi:10.1021/ic50019a004. 
  2. Klemm, W.; Meisel, K.; v. Vogel, H. U. (1930). "Über die Sulfide der seltenen Erden (Sulfides of the rare earths)". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 190: 123–144. doi:10.1002/zaac.19301900113.