இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு

வேதிச்சேர்மம்

இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு (Strontium oxalate) என்பது SrC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும் . ஒரு நீரேற்று வடிவிலோ (SrC2O4•nH2O) அல்லது ஓர் இசுட்ரோனியம் ஆக்சலேட்டின் அமில உப்பாகவோ இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு இயற்கையில் காணப்படுகிறது [1].

இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
814-95-9
ChemSpider 63140
EC number 212-415-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 69947
  • [Sr+2].[O-]C(=O)C([O-])=O
பண்புகள்
SrC2O4
வாய்ப்பாட்டு எடை 175.64 கி/மோல்
அடர்த்தி 2.08 கி/செ.மீ3
கொதிநிலை சிதைவடையும் 200 °C (392 °F; 473 K)
நீரில் கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தோல் மற்றும் கண்களில் எரிச்சல் உண்டாக்கும்.சுவாசிக்க நேர்ந்தால் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வில் எரிச்சலூட்டும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வான வெடிமுறைப் பயன்கள்

தொகு

இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு சூடுபடுத்தும்போது சிதைவடைகிறது [2]

SrC2O4 → SrO + CO2 + CO.

வெப்பத்துடன் கொண்டுள்ள இச்சிதைவடையும் பண்பினால் வானவெடிச் செயல்முறைகளுக்கு உகந்த ஒரு முகவராக இது பயன்படுத்தப்படுகிறது. இசுட்ரோன்சியம் ஆக்சைடாக சிதைவடையும் போது இவ்வினையில் சிவப்பு நிறம் உருவாகிறது. வினையில் உருவாகும் கார்பனோராக்சைடு மக்னீசியம் ஆக்சைடுடன் சேர்ந்து மேலும் ஒடுக்கமடைகிறது. மக்னீசியத்தின் முன்னிலையில் இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு ஒரு சிறந்த சிவப்பு நிற உற்பத்தி முகவராக செயல்படுகிறது. மக்னீசியம் பயன்படுத்தப்படாத நிலையில் இதே வினைக்கு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு ஒரு நல்ல மாற்றாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Knaepen, E. "Preparation and Thermal Decomposition of Various Forms of Strontium Oxalate". Thermochimica Acta 284.1 (1996): 213-27.
  2. Kosanke, K. "Chemical Components of Fireworks Compositions". Pyrotechnic Chemistry. Whitewater, CO: Journal of Pyrotechnics, 2004. 1-11.