இசுட்ரோன்சியம் பாசுபைடு
இசுட்ரோன்சியம் பாசுபைடு (Strontium phosphide) என்பது Sr3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] கருப்பு நிற படிகங்களாக இது தோற்றமளிக்கிறது.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மூவிசுட்ரோன்சியம் இருபாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12504-16-4 | |
ChemSpider | 145854 |
EC number | 235-678-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166710 |
| |
UN number | 2013 |
பண்புகள் | |
P2Sr3 | |
வாய்ப்பாட்டு எடை | 324.8 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 2.68 கி/செ.மீ3 |
நீருடன் சேர்கையில் சிதைவடையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் பாசுப்பைடு பேரியம் பாசுபைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுட்ரோன்சியம் நைட்ரைடு இசுட்ரோன்சியம் ஆர்சனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஒரு வில் உலையில் இசுட்ரோன்சியம் பாசுபேட்டுடன் புகைக்கரியைச் சேர்த்து சூடாக்கினால் இசுட்ரோன்சியம் பாசுபைடு உருவாகிறது.
இசுட்ரோன்சியத்துடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து சூடாக்கினாலும் இசுட்ரோன்சியம் பாசுபைடு கிடைக்கும்:[3]
இயற்பியல் பண்புகள்
தொகுஇசுட்ரோன்சியம் பாசுபைடு கருப்பு நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது.[3]
வெப்பத்தில் நிலைப்புத்தன்மை கொண்டது என்றாலும் உயர் வெப்பநிலையில் உருகும்.
ஈரமாக இருக்கும்போது ஆபத்தானது. நச்சுப் பண்பு கொண்டதாகவும் உள்ளது.[4]
வேதிப் பண்புகள்
தொகுதண்ணீருடன் வினைபுரியும் போது சிதைவடைந்து பாசுபீன் வாயுவை வெளிவிடுகிறது:[3]
அமிலங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய உப்புகளைக் கொடுக்கிறது. இவ்வினையிலும் பாசுபீன் வாயு வெளியாகிறது.
பயன்கள்
தொகுஇசுட்ரோன்சியம் பாசுபைடு மிகவும் வினைத்திறன் கொண்ட ஒரு பொருளாகும். வேதி வினைகளில் ஒரு வினையாக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Strontium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
- ↑ Wang, Junjie; Hanzawa, Kota; Hiramatsu, Hidenori; Kim, Junghwan; Umezawa, Naoto; Iwanaka, Koki; Tada, Tomofumi; Hosono, Hideo (8 November 2017). "Exploration of Stable Strontium Phosphide-Based Electrides: Theoretical Structure Prediction and Experimental Validation". Journal of the American Chemical Society 139 (44): 15668–15680. doi:10.1021/jacs.7b06279. பப்மெட்:29023114. https://pubs.acs.org/doi/10.1021/jacs.7b06279. பார்த்த நாள்: 13 December 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59553-9. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 11. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
- ↑ "STRONTIUM PHOSPHIDE | CAMEO Chemicals | NOAA". cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.