இடிகா (Idiga) எனப்படுவோர் மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற ஒரு கன்னட, தெலுங்கு சாதியினர் ஆவார்.[1] இச்சமூகத்தினர் தங்களை செட்டிபலிஜா என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.[2] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3]

இடிகா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கர்நாடகம், தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா
மொழி(கள்)
கன்னடம், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பலிஜா

சொற்பிறப்பு

தொகு

இடிகா என்பது தெலுங்கு சொல் 'இட்சு யில் இருந்து பெறப்பட்டது.[4] இவர்கள் தங்களை வியாசரின் வழித்தோன்றல்கள் என்கின்றனர்.[5]

தொழில்

தொகு

இவர்களின் ஆதித் தொழிலே பனை மரம் ஏறுவதும், கள் இறக்குவதும் ஆகும்.[6] தற்போது சிலர் வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர்

வாழும் பகுதிகள்

தொகு

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக வடதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் வட ஆற்காடு ஆகிய பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.[7]


மேற்கோள்கள்

தொகு
  1. Alpana Pandey, ed. (2015). Medieval Andhra: A Socio-Historical Perspective. Partridge Publishing. p. 164. The Idigas or Indras were the Telugu toddy drawing caste.They were largely employed in toddy drawing, though some were cultivators.
  2. Singh, K. S. (1992). People of India: Andhra Pradesh (3 pts.) (in ஆங்கிலம்). Anthropological Survey of India. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85579-09-2.
  3. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  4. All India Anthropometric Survey: Analysis of Data. South Zone. Anthropological Survey of India. 1989. p. 60. Etymologically Idiga is derived from Telugu word ' Idchu ' ( meaning ' to draw " ) . Idigas claim to be the descendents of Vyasa , the compiler of Maha . bharatha . Dandu Idiga and Balija Idiga are the two main sub - divisions in the caste .
  5. K. S. Singh, ed. (1992). People of India: Andhra Pradesh. Anthropological Survey of India. p. 275. BALIJA / SETTI BALIJA The ' Setti Balija ' or ' Chetti Balija ' or ' Setti Kula Balija ' are also known as Ediga , Settiga , Settikula and Indras . They claim their descent from Vyasa , the compiler of the Mahabharata . . They were originally toddy - tappers by profession , though a few took to cultivation .
  6. A. Vijaya Kumari, ‎Sepuri Bhaskar, ed. (1998). Social Change Among Balijas: Majority Community of Andhra Pradesh. M.D. Publications Pvt. Ltd. p. 10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிகா&oldid=4090702" இலிருந்து மீள்விக்கப்பட்டது