இடியப்பம் அல்லது இடியாப்பம் (ஓலிப்பு) என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே பொதுவாக செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுத்தலாம். இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்.

இடியாப்பம்
Cooked idiyappams on a plate
மாற்றுப் பெயர்கள்இடியப்பம்
வகைகாலை உணவு
தொடங்கிய இடம்கேரளம்(இந்தியா)
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு
வேறுபாடுகள்கோதுமை இடியப்பம்
இதே போன்ற உணவுகள்Putu mayam

இடியப்பம் அவியல் செயன்முறையில் அமைந்த உணவு ஆகும். இலங்கை சிறார்களின் முக்கிய பாடசாலை உணவாக உள்ளது. குடல் செரிமானதுக்கு உகந்த உணவாகையால் நோயாளிகள் மற்றும் வாயோதிபருக்கு ஏற்ற உணவாகும். [1][2][3]

சம்பல், சொதி

தொகு
இடியாப்பம் பிழிதல்

இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. K. T. Achaya (November 2003). The Story of Our Food. Universities Press. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7371-293-X.
  2. "Lokopakara" Agri-History Bulletin No. 6 - (Trans) Ayangarya, Y. L. Nene, Nalini Sadhale, Valmiki Sreenivasa (Trans), 2004
  3. "Idiyappam". Marias Menu. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Idiyappam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடியப்பம்&oldid=4014822" இலிருந்து மீள்விக்கப்பட்டது