இடும்பன் (கௌமாரம்)
இடும்பன் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒன்றாவான். இடும்பன் கவசம் என்ற கவசமும் காணப்படுகிறது.
இடும்பன் | |
---|---|
இடும்பனின் சித்தரிப்பு | |
வகை | அசுரன் |
நூல்கள் | கந்த புராணம் |
இடும்பனின் வரலாறு
தொகுஇடும்பனின் வரலாறு பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான் முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வானவாசஞ் சென்றான். அவ்வழியால் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.
இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார்.
இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.
காடுவெட்டிவிடுதி மிகுந்த சக்தி வாய்ந்த இடும்பன்
தொகுமிகுந்த சக்தி வாய்ந்த கருணைமிகு இடும்பன் கோயில் அமைந்த புண்ணிய பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். தீராத வினையெல்லாம் தீர்க்கும் அருள்மிகு காவடி தந்த இடும்பன் சுவாமி ஆலயம் மகிமை நிறைந்த மந்திர சக்தி வாய்ந்த பூமியாகும், இந்த இறைவனை வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்,குழந்தை வரம் கிடைக்கும்,வறுமை நீங்கும்.இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் திருக்கோயில் கருவரையில் மூலவராக வழிபடப்படும் இறைவர் குண்டலினி உடம்பில் சக்தி அம்சமாக மூலாதாரத்தை தொடுதல். உச்சந்தலையில் சிவா அம்சம் (துரியம் அல்லது ஆக்கினை) உள்ளது. இவற்றை விளக்கும் வகையில் சூரிய சந்திர பிறையுடன் இடும்பர் அமரந்துள்ளார். இந்த கோலத்தில் சிவனடியாரான இவரை வழிபட சிவபெருமான் அருள் பன்மடங்கு கிட்டும்.இந்த சித்திரத்தை காடுவெட்டிவிடுதி சு.சா.சுப்பஞ் செட்டியார் வழி தோன்றலான இலக்கியச்செம்மல் சு.வை.சு.சிவகுமாரால் எழுப்பப்பட்டது இந்த ஆலயத்தில் நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது,இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்கொள்ளப்படும் என்பது தொல் நம்பிக்கை.
தஞ்சை ஜில்லா காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது.,இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்.,இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்.,நல்லவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.,ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்.
மூன்று திங்கள் கிழமை தொடர்ந்து வந்து 7 வேப்ப எண்ணெய் விளக்கு 7 நெய் விளக்கு 7 நல்லெண்ணெய் விளக்கு என ஒரு திங்களுக்கு 21 விளக்கு என மூன்று வாரங்களுக்கும் 63விளக்குகள் ஏற்றி பொங்கல் வைத்து வழிபட வீட்டில் செல்வம் பொழிந்து குழந்தை பாக்கியம் கிடைத்து பகை ஒழிந்து நோய் நொடியெல்லாம் தீர்ந்து. வம்சம் 21 தலைமுறைக்கு விருத்தியாகும். காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபட செல்வம் பல வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.
மகா காளியம்மன் பிறந்த பச்சை குழந்தைகளின் இரத்தத்தை ருசி பார்க்க பிறக்கும் அத்தனை குழந்தைகளும் இறந்து போக ஒரு மகா சித்தர் வாக்கை கேட்டு பழனிக்கு சென்று வேண்டுதல் செய்து பழனி மலையை விட்டு வரவே மாட்டேன் என்ற பழனிமலை காவலர் முருக பக்தர் அகத்தியர் சீடர் இடும்பர் சுவாமியிடம் எங்கள் வம்சமே உங்களுக்கு அடிமை தயவு செய்து வந்து அந்த மகா காளியம்மன் கோரத்தை கட்டுப்படுத்துங்கள் எங்கள் வம்சத்தை வளர ஆசி கூறுங்கள் என கூறி பாதம் பணிந்து பழனியிலிருந்து மண் எடுத்து கால் நடையாகவே பூசை செய்து அரோகரா பாடி அழைத்து வந்த பிறகே காடுவெட்டிவிடுதியில் நகரத்தார் வம்சம் விருத்தியானது.
ஒரு விசித்திரம் என்னவென்றால் மேற்கிலுள்ள பழனி மலை இடும்பன் மலை கோயிலும் கிழக்கிலுள்ள இடும்பவனம்(இடும்பர் தவம் இருந்த இடமும்) ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது மேலும் ஒரு அபூர்வம் என்னவென்றால் அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலும் அதே நேர்க் கோட்டில் இந்த இரண்டு தலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இன்னுமொரு அற்புதம் யாதெனில் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலுக்கு வடக்கு பகுதியில் திருவண்ணாமலையும் தெற்கு பகுதியில் கடற்கரையில் மீமிசல் முருகன் கோயிலும் ஒரே நேர்கோட்டில் உள்ளது.
அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி ஆலயத்தின் கிழக்கே இடும்பாவனம் மேற்கே பழனி மலை வடக்கே அண்ணாமலை தெற்கே கடற்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில். என சிவ பக்தரான இடும்பர் தவமிருந்து சிவனருளை பெற்ற இடும்பாவனம்.,அகத்தியர் கட்டளைப் படி சிவ சக்தி கிரிகளை (பழனி இடும்பன் மலைகள்) காவடியாக கயிலையிலிருந்து சுமந்து வந்து அடைந்த இடும்பாவனம் என ஆதியில் அழைக்கப்பட்ட திரு ஆவினன்குடி. சூரபதுமன் குருவான இடும்பர் அவனை விடுத்து முக்தியடைய அருளிய சிவனாரின் அருணாசலம்., அனுதினமும் இடும்பர் உச்சரிக்கும் "முருகா"என்ற தமிழ் கடவுளின் ஆலயம் என நான்கு திருத்தல பூமத்திய நேர்க்கோட்டில் சூழ சூர குல ஆசான், பவனமுனிவரின் மருமகன், அகத்தியர் சீடரின் சடாச்சர பீடம் அருள் பொங்கும் சக்தி வாய்ந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயில் விளங்குகிறது,தீராத வினையெல்லாம் தீர்க்கும் சக்தி பூமி என்பது முற்றிலும் உண்மை.
கோயில்களில் இடும்பன்
தொகுமுருகபக்தனான இடும்பனுக்கு முருகன் கோயில்களில் சிறப்பிடம் அளித்தனர். இடும்பன் பூசை பல கோயில்களில் மகோற்சவத்தை அடுத்து நடைபெறுதல் வழக்கம்.
திருவோணம் அருகே கீழமேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கோவிலில் விநாயகர், இடும்பன், மற்றும் முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளது
இலங்கையில் இடும்பன் கோயில்கள்
தொகுஇலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு (காலையடி) இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லாந்தை மற்றும் மட்டக்களப்பின் சில பாகங்களிலும் இடும்பன் பரிவார தெய்வமாகத் தனிக் கோயில் பெற்று விளங்குவதைக் காணலாம். திரிகோணமலையில் பறையன்குளம் எல்லையிலுள்ள காளி கோயிற் பகுதியில் இடும்பன்மலை எனக் குன்று ஒன்று உள்ளது.
தமிழகத்தில் இடும்பன் கோயில்கள்
தொகுதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இடும்பாவனம் மற்றும் திருக்கன்றாப்பூர் போன்ற இடங்களில் இடும்பன் சிவனைப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, குன்றக்குடி போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். திருப்பூர் அருகில் இடுவம்பாளையம் என்னும் இடத்தில் இடும்பன் கோவில் உள்ளது. (இடும்பனுக்கு தனி கோவில் உண்டு) தஞ்சை மாவட்டம், காடுவெட்டிவிடுதியில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கற்சிலை யில் உருவம் கொண்ட கோவில் உள்ளது.இங்கு இடும்பனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இங்கு இதுவரை சைவ வழிபாட்டின் மூலம் இந்தக் கோவிலில் இருந்து வருகிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், கொழும்பு, 1990