காடுவெட்டிவிடுதி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதி உள்ளது.

காடுவெட்டிவிடுதி
—  கிராமம்  —
காடுவெட்டிவிடுதி
அமைவிடம்: காடுவெட்டிவிடுதி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,840 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இடும்பன்

அருள்மிகு ஸ்ரீஇடும்பன் கோயில்

தொகு

மிகுந்த சக்தி வாய்ந்த கருணைமிகு இடும்பன் கோயில் அமைந்த புண்ணிய பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். தீராத வினையெல்லாம் தீர்க்கும் அருள்மிகு காவடி தந்த இடும்பன் சுவாமி ஆலயம் மகிமை நிறைந்த மந்திர சக்தி வாய்ந்த பூமியாகும், இந்த இறைவனை வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்,குழந்தை வரம் கிடைக்கும்,வறுமை நீங்கும்.இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது,இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்கொள்ளப்படும் என்பது தொல் நம்பிக்கை.

தஞ்சை ஜில்லா காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது.,இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்.,இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்.,நல்லவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.,ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்.

மூன்று திங்கள் கிழமை தொடர்ந்து வந்து 7 வேப்ப எண்ணெய் விளக்கு 7 நெய் விளக்கு 7 நல்லெண்ணெய் விளக்கு என ஒரு திங்களுக்கு 21 விளக்கு என மூன்று வாரங்களுக்கும் 63விளக்குகள் ஏற்றி பொங்கல் வைத்து வழிபட வீட்டில் செல்வம் பொழிந்து குழந்தை பாக்கியம் கிடைத்து பகை ஒழிந்து நோய் நொடியெல்லாம் தீர்ந்து. வம்சம் 21 தலைமுறைக்கு விருத்தியாகும். காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபட செல்வம் பல மடங்கு பெருகும் கல்வியில் சிறந்து விளங்கும் பாக்கியம் கிடைக்கும்.,அரசு வேலை கிடைக்கும்., ஆண் குழந்தை வேண்டுவோருக்கு கிடைக்கும்.,நோய்கள் தீரும்,நன்மையே நடக்கும்.

மகா காளியம்மன் பிறந்த பச்சை குழந்தைகளின் இரத்தத்தை ருசி பார்க்க பிறக்கும் அத்தனை குழந்தைகளும் இறந்து போக ஒரு மகா சித்தர் வாக்கை கேட்டு பழனிக்கு சென்று வேண்டுதல் செய்து பழனி மலையை விட்டு வரவே மாட்டேன் என்ற பழனிமலை காவலர் முருக பக்தர் அகத்தியர் சீடர் இடும்பர் சுவாமியிடம் எங்கள் வம்சமே உங்களுக்கு அடிமை தயவு செய்து வந்து அந்த மகா காளியம்மன் கோரத்தை கட்டுப்படுத்துங்கள் எங்கள் வம்சத்தை வளர ஆசி கூறுங்கள் என கூறி பாதம் பணிந்து பழனியிலிருந்து மண் எடுத்து கால் நடையாகவே பூசை செய்து அரோகரா பாடி அழைத்து வந்த பிறகே காடுவெட்டிவிடுதியில் நகரத்தார் வம்சம் விருத்தியானது.,

ஒரு விசித்திரம் என்னவென்றால் மேற்கிலுள்ள பழனி மலை இடும்பன் மலை கோயிலும் கிழக்கிலுள்ள இடும்பவனம்(இடும்பர் தவம் இருந்த இடமும்) ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது மேலும் ஒரு அபூர்வம் என்னவென்றால் அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலும் அதே நேர்க் கோட்டில் இந்த இரண்டு தலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இன்னுமொரு அற்புதம் யாதெனில் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலுக்கு வடக்கு பகுதியில் திருவண்ணாமலையும் தெற்கு பகுதியில் கடற்கரையில் மீமிசல் முருகன் கோயிலும் ஒரே நேர்கோட்டில் உள்ளது.

அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி ஆலயத்தின் கிழக்கே இடும்பாவனம் மேற்கே பழனி மலை வடக்கே அண்ணாமலை தெற்கே கடற்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில்., என சிவ பக்தரான இடும்பர் தவமிருந்து சிவனருளை பெற்ற இடும்பாவனம்.,அகத்தியர் கட்டளைப் படி சிவ சக்தி கிரிகளை (பழனி இடும்பன் மலைகள்) காவடியாக கயிலையிலிருந்து சுமந்து வந்து அடைந்த இடும்பாவனம் என ஆதியில் அழைக்கப்பட்ட திரு ஆவினன்குடி., சூரபதுமன் குருவான இடும்பர் அவனை விடுத்து முக்தியடைய அருளிய சிவனாரின் அருணாசலம்., அனுதினமும் இடும்பர் உச்சரிக்கும் "முருகா"என்ற தமிழ் கடவுளின் ஆலயம் என நான்கு திருத்தல பூமத்திய நேர்க்கோட்டில் சூழ சூர குல ஆசான், பவனமுனிவரின் மருமகன், அகத்தியர் சீடரின் சடாச்சர பீடம் அருள் பொங்கும் சக்தி வாய்ந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயில் விளங்குகிறது,தீராத வினையெல்லாம் தீர்க்கும் சக்தி பூமி என்பது முற்றிலும் உண்மை.

 
இடும்பன்

மக்கட் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1840 ஆகும். இவர்களில் பெண்கள் 916 பேரும், ஆண்கள் 924 பேரும் உள்ளனர்.[சான்று தேவை]

அரசியல்

தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[4]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடுவெட்டிவிடுதி&oldid=3708772" இலிருந்து மீள்விக்கப்பட்டது