இடைசெவல்
இடைசெவல் (Idaiseval ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
இடைசெவல் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 628 716 |
ஊரின்சிறப்பு
தொகுகு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் ஆகிய எழுத்தாளர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாவர்களாவர். கி. இராஜநாராயணன் தன் எழுத்துகளில் இந்த ஊரைப்பற்றி, இது கரிசல் பூமி என்றும், இந்த ஊருக்கு கிழக்கே குருமலை என்கிற சஞ்சீவி மலை உள்ளது. இந்த மலையானது அனுமன் சஞ்சீவி மலையை கொண்டுவரும்போது அதில் இருந்து பீய்ந்து விழுந்த ஒரு துண்டாம் என்றும், இந்த ஊரில் மூன்று மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஆந்திரத்தில் இருந்து தெற்கே குடியேறிய தெலுங்கர்கள், கர்நாடகத்தில் இருந்து தெற்கே குடியேறிய கவுடர், தமிழர்களான ஆதி திராவிடர்கள் என்றும் குறிப்பிடுகிறார். [1]
மக்கள்வகைப்பாடு
தொகுஇந்த ஊரானது கோவில்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியில் இருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 602 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 850 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3024 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1533, பெண்களின் எண்ணிக்கை 1491 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 75.2% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
மேற்கோள்
தொகு- ↑ நூல்- வேட்டி, கி. இராஜநாராயணன், கட்டுரை- எங்கள் ஊர், பக்கம்- 99 100, வெளியீடு- அன்னம், தஞ்சாவூர், மூன்றாம் பதிப்பு 2007
- ↑ http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Kovilpatti/Idaiseval