இடைமாநில நெடுஞ்சாலை முறை
ஐக்கிய அமெரிக்காவின் டுவைட் டி. ஐசனாவர் இடைமாநில நெடுஞ்சாலை முறை (Interstate Highway System) அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை முறையிலுள்ள ஒரு துணையமைப்பாகும். மொத்தமாக இம்முறையில் 75,376 கிமீ அளவு நெடுஞ்சாலைகள் உள்ளன; இது உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை முறையும் உலக வரலாற்றில் மிகப்பெரிய பொதுப்பணித் திட்டமும் ஆகும். அமெரிக்காவின் பல முக்கியமான நகரங்களிலும் ஒரு இடைமாநில நெடுஞ்சாலையாக இருக்கும்.[1][2][3]
இச்சாலைகளின் சந்திகளில் போக்குவரத்து ஒலிகள் கிடையாது; பல சந்திகளில் வாகனங்கள் மேம்பாலங்களை பயன்படுத்தி இடைமாற்றுச்சந்திகளால் வேறெந்த நெடுஞ்சாலைக்கு செல்லவும். பொதுவாக இச்சாலைகளின் விரைவு எல்லைகள் பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட 100 கிமீ/மணித்தியாலம் ஆகும்; கிராமப் பகுதிகளில் சில இடத்தில் 130 கிமீ/மணித்தியாலத்துக்கு மேலும் இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Weingroff, Richard F. (Summer 1996). "Federal-Aid Highway Act of 1956, Creating the Interstate System". Public Roads. Vol. 60, no. 1. பன்னாட்டுத் தர தொடர் எண் 0033-3735. Archived from the original on March 7, 2012. பார்க்கப்பட்ட நாள் March 16, 2012.
- ↑ Shirley, Chad (2023). Testimony on the Status of the Highway Trust Fund: 2023 Update (Report). Congressional Budget Office.
- ↑ Office of Highway Policy Information (February 5, 2024). Table VM-1: Annual Vehicle Distance Traveled in Miles and Related Data, 2022, by Highway Category and Vehicle Type (Report). Federal Highway Administration. பார்க்கப்பட்ட நாள் August 14, 2024.