இண்டியம்(I) அயோடைடு
இண்டியம் மோனோ அயோடைடு (Indium monoiodide) என்பது InI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் உலோகமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடோ இண்டியம்
| |
வேறு பெயர்கள்
இண்டியம் மோனோ அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13966-94-4 | |
ChemSpider | 21241509 |
EC number | 237-746-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336605 |
| |
பண்புகள் | |
IIn | |
வாய்ப்பாட்டு எடை | 241.72 g·mol−1 |
தோற்றம் | செம்-பழுப்பு திண்மம் |
அடர்த்தி | 5.32 கி/செ.மீ3 |
உருகுநிலை | 365 °C (689 °F; 638 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇண்டியம் மற்றும் அயோடின் அல்லது இண்டியம் மற்றும் இண்டியம்(III) அயோடைடை வெற்றிடத்தில் 300 °செல்சியசு முதல் 400 °செல்சியசு வெப்பநிலையில் அல்லது இண்டியத்துடன் பாதரசம்(II) அயோடைடை 350 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் இண்டியம் மோனோ அயோடைடு உருவாகும்.[3]
- 2In + I2 -> 2InI[4]
- 2In + InI3 -> 3InI
- 2In + HgI2 -> 2InI + Hg
இயற்பியல் பண்புகள்
தொகுஇண்டியம்(I) அயோடைடு பழுப்பு-சிவப்பு காந்த திடப்பொருளாக உருவாகிறது. இதன் உருகுநிலையில் கருப்பு நிறமாகக் காணப்படுகிறது. a = 475 பைக்கோமீட்டர், b = 1276 பைக்கோமீட்டர், c = 491 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் Cmcm (இடக்குழு எண். 63) என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[5]
வேதிப் பண்புகள்
தொகுதண்ணிருடன் சேர்க்கப்பட்டால் மெல்ல சிதைவடைகிறது:
- 2InI + H2O -> InOH + HI
ஆக்சிசன் முன்னிலையில் தண்ணிருடன் வினைபுரிகிறது:[6]
- 2InI + O + 3H2O -> 2In(OH)2 + 2HI
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indium(I) Iodide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
- ↑ "Indium(I) iodide". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
- ↑ Gasanov, A. A.; Lobachev, E. A.; Kuznetsov, S. V.; Fedorov, P. P. (1 November 2015). "Indium monoiodide: Preparation and deep purification" (in en). Russian Journal of Inorganic Chemistry 60 (11): 1333–1336. doi:10.1134/S0036023615110066. பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-8613. https://link.springer.com/article/10.1134/S0036023615110066. பார்த்த நாள்: 29 March 2024.
- ↑ Rieke, Reuben D. (30 November 2016). Chemical Synthesis Using Highly Reactive Metals (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-92914-8. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
- ↑ Fedorov, P P; Popov, A I; Simoneaux, R L (31 March 2017). "Indium iodides". Russian Chemical Reviews 86 (3): 240–268. doi:10.1070/RCR4609. Bibcode: 2017RuCRv..86..240F. https://www.russchemrev.org/RCR4609pdf.
- ↑ Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.