இதயத் துடிப்பு கண்காணிப்பு கருவி
இதயத் துடிப்பு கண்காணிப்பு கருவி (Heart rate monitor) என்பது இதயத் துடிப்பை நிகழ் நேரத்தில் அளவிட/காட்ட அல்லது பிற்கால ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட கண்காணிப்பு சாதனமாகும். பல்வேறு வகையான உடற் பயிற்சிகளைச் செய்யும்போது இதயத் துடிப்புத் தரவைச் சேகரிக்க இக்கருவி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மின் இதயத் தகவலை அளவிடுவது இதய துடுப்பலை அளவி ஆகும்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ இதயத் துடிப்பு கண்காணிப்பு பொதுவாக கம்பி வடம் மற்றும் பல உணர்வுகளைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் கையடக்க மருத்துவ அலகுகள் கோல்டர் கண்காணிப்பு கருவியாகும். இதயக் குறைபாடுடையோரின் இதய துடுப்பினை அளவிட அன்றாட பயன்பாட்டிற்காக ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இக்கருவிகளில் இணைப்புக் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
வரலாறு
தொகுஆரம்பக்கால கருவிகளில் இதயத் துடுப்பினை அளவிடவேண்டியவரின் மார்பில் இணைக்கப்பட்ட மின் முனைகளுடன் கூடிய கண்காணிப்பு பெட்டியைக் கொண்டிருந்தன. முதல் கம்பி வடமில்லா இதயத் துடிப்பலைக் கருவி பின்லாந்து தேசிய நாடுகளுக்கிடையேயானஇசுகி குழுவினரின் பயிற்சி உதவியாக போலார் எலக்ட்ரோவால் 1977-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 1980களின் நடுப்பகுதியில் தடகள வீரர்களின் "தீவிர பயிற்சி”[1] பேசுபொருளாக மாறியதால் கம்பி வடமில்லா தனிப்பட்ட இதய அளவீட்டுக் கருவிகளின் சில்லறை விற்பனை 1983-ல் தொடங்கியது.
தொழில்நுட்பங்கள்
தொகுநவீன இதயத் துடிப்பு கண்காணிப்பு கருவி பொதுவாக இதய சமிக்ஞைகளை மின்சார அல்லது ஒளியியல் பதிவு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இந்த இரண்டு வகையான சமிக்கைகளும் ஒரே அடிப்படையான இதயத் துடிப்புத் தரவை வழங்க முடியும். இதயத் துடிப்பை அளவிட முழு தானியங்கி வழிமுறை பான் - தாம்ப்கின்சு படிமுறைத் தீர்வு பயன்படுத்தப்படுகிறது.[2]
இதயத் துடிப்பலை அளவி உணர்விகள் பொதுவாக மருத்துவ சாதனங்களில் செயல்படுத்தப்படும் இதய அறைகளின் விரிவு மற்றும் சுருங்குதலைக் கட்டுப்படுத்தும் மின் சமிக்ஞைகளால் உருவாக்கப்படும் உயிர் ஆற்றலை அளவிடுகின்றன.
ஒளிபிளெதிஸ்மோகிராபி உணர்விகள் இதயத்தின் உந்திச் செயலால் கட்டுப்படுத்தப்படும் இரத்த அளவை அளவிட ஒளி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
மின்சாரம்
தொகுமின் கண்காணிப்பு மானி இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கின்றது: ஒரு கண்காணிப்பு மானி/மின்கடத்தி-இது இதய அளவினை அளவிட வேண்டியவரின் மார்புப் பட்டையில் அணியக்கூடியது. மற்றது, சமிக்கையினைப் பெறக்கூடிய கருவி. இதயத் துடிப்பு கண்டறியப்பட்டால், வானொலி சமிக்கை அனுப்பப்படும். இதனை ஏற்பி தற்போதைய இதயத் துடிப்பைக் காட்ட/நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்துகிறது. இந்த சமிக்கை ஒரு எளிய வானொலி அலைத் துடிப்பாக இருக்கலாம் அல்லது மார்புப் பட்டையிலிருந்து (புளூடூத், ஏஎன்டி, அல்லது பிற குறைந்த சக்தி கொண்ட வானொலி இணைப்புகள் போன்றவை) தனித்துவமான குறியிட்டு சமிக்கையாக இருக்கலாம். புதிய தொழில்நுட்பம் ஒரு பயனரின் ஏற்பி அருகிலுள்ள மற்ற அலைபரப்பி சமிக்கைகளைப் பயன்படுத்துவதை (குறுக்கிடு) தடுக்கிறது . பழைய போலார் 5.1 கிலோ ஹெர்ட்சு வானலைச் செலுத்திடு தொழில்நுட்பம் நீருக்கடியிலும் பயன்படுத்தக்கூடியது. புளூடூத் மற்றும் ஆண்ட்+ இரண்டும் 2.4 அயிரிமா அலகினைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் நீருக்கடியில் சமிக்கைகளை அனுப்ப முடியாது.
ஒளியியல்
தொகுமிக சமீபத்திய சாதனங்கள் இதயத் துடிப்பை அளவிடுவதற்கு ஒளியியலைப் பயன்படுத்துகின்றன. தோல் வழியாக ஒளி உமிழ் இருமுனையத்திலிருந்துஒளியைப் பிரகாசிக்கின்றன. இரத்த நாளங்களில் இது எவ்வாறு சிதறுகிறது என்பதை அளவிடப்பட்டு, இதயத் துடிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில சாதனங்கள் இரத்த உயிர்வளி செறிவூட்டலை அளவிடுகிறது. சில சமீபத்திய ஒளியியல் உணர்விகள் மேலே குறிப்பிட்டபடி தரவையும் அனுப்பலாம்.
செல்பேசி அல்லது கைக்கடிகாரங்கள் போன்ற புதிய சாதனங்கள் தகவல்களை வெளியிட மற்றும்/அல்லது சேகரிக்கப் பயன்படுத்தப்படலாம். சில சாதனங்கள் இதயத் துடிப்பு, உயிர்வளி செறிவு மற்றும் பிற அளவுருக்களை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும். வேகம், இருப்பிடம் மற்றும் தூரத்தைக் கண்டறிய முடுக்கமானிகள், கொட்பளவி மற்றும் புவியிடங்காட்டி போன்ற உணர்விகளை இவற்றில் இருக்கலாம்.
சமீபத்திய ஆண்டுகளில், திறன் கடிகைகளில் இதயத் துடிப்பு கண்காணிப்பு மானி சேர்க்கப்படுவது பொதுவானதாகவும், பிரபலமாகவும் உள்ளது.[3] சில திறன் கடிகைகளில், திறன் பட்டைகள் மற்றும் செல்பேசி பிபிஜி உணர்விகளைப் பயன்படுத்துகின்றன.
உடற்பயிற்சி அளவீடுகள்
தொகுகார்மின், போலார் எலக்ட்ரோ, சுன்டோ மற்றும் பிட்பிட் ஆகியவை நுகர்வோர் இதயத் துடிப்பு தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் ஆவர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சொந்த தனியுரிமை இதயத் துடிப்பு படிமுறைத் தீர்வு பயன்படுத்துகின்றன.
துல்லியம்
தொகுபுதிய, மணிக்கட்டு அடிப்படையிலான இதயத் துடிப்பு கண்காணிப்பு மானிகள், சுயாதீன சோதனைகள் மூலம், மார்புப் பட்டையின் சகாக்களைப் போலவே கிட்டத்தட்ட 95% துல்லியத்தைக் காட்டும் வகையில் செயல்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் 30%க்கும் அதிகமான பிழைகள் பல நிமிடங்களுக்குத் தொடரலாம்.[4] தீவிரமான செயல்பாட்டின் போது[5] அல்லது நீருக்கடியில் பயன்படுத்தும் போது ஒளியியல் சாதனங்கள் குறைவான துல்லியத்துடன் செயல்பட வாய்ப்புள்ளது.
தற்போது இதயத் துடிப்பு மாறுபாடு ஒளியியல் சாதனங்களில் குறைவாகவே உள்ளது.[6] ஆப்பிள் 2018-ல் ஆப்பிள் கடிகாரச் சாதனங்களுக்கு[7] தரவு சேகரிப்பை அறிமுகப்படுத்தியது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Burke, E (ed) Precision Heart Rate Training
- ↑ Pan, Jiapu; Tompkins, Willis J. (March 1985). "A Real-Time QRS Detection Algorithm". IEEE Transactions on Biomedical Engineering BME-32 (3): 230–236. doi:10.1109/TBME.1985.325532. பப்மெட்:3997178.
- ↑ Smartwatch: Performance evaluation for long-term heart rate monitoring - IEEE Conference Publication. doi:10.1109/ISBB.2015.7344944.
- ↑ Haskins, Tristan Chest Strap Vs Wrist Based HR Accuracy
- ↑ "ECG vs PPG for Heart Rate Monitoring: Which is Best?". neurosky.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
- ↑ "Are Wrist Type Monitors Reliable?".
- ↑ "Heart Rate Variability (HRV): What is it, and why does Apple track it?". iMore. 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Heart rate monitors பற்றிய ஊடகங்கள்
- Visualization of ECG recordings using Python program ECG-pyview A simple Python program visualizing raw data produced by chest strap based ECG sportesters. Enables to inspect ECG recordings having lengths up to days. (Open source, non-commercial use, use matplotlib.) A demo video.