இதயமலர்
இதய மலர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி கணேசன் மற்றும் தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய நினைவு நிலைக்கட்டும் என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கல்யாண ஜோதி எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1980 இல் வெளியானது.
இதய மலர் | |
---|---|
இயக்கம் | ஜெமினி கணேசன் தாமரை மணாளன் |
தயாரிப்பு | ஜி. எம். குலத்து அய்யர் வி. எல். நாராயணன் |
கதை | மணியன் |
திரைக்கதை | வித்வன் வி. லட்சுமணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கமல்ஹாசன் சுஜாதா சௌகார் ஜானகி |
விநியோகம் | ஜெயெந்த்ரா மூவீஸ் |
வெளியீடு | செப்டம்பர் 3, 1976 |
நீளம் | 3931 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் இயக்குநராக செயல்பட்ட ஒரே திரைப்படம் இதுவாகும். தாமரை மணாளன் உடன் இணைந்து இப்படத்தை இயக்கினார்.[2]
நடிகர்கள்தொகு
- ஜெமினி கணேசன் - கிருஷ்ணன்
- கமல்ஹாசன் - மோகன்
- சுஜாதா - ராதா
- சௌகார் ஜானகி - ராஜம்
- விஜயகுமார் - ஸ்ரீதர்
- ஜெயதேவி
- கே. ஏ. தங்கவேலு - சிங்காரம்
- எம். சரோஜா - குமாரி
பாடல்கள்தொகு
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் புலமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.[3]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | செண்டு மல்லி பூ ... | வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ் | புலமைப்பித்தன் | |
2 | தாழம்பூ கைகளுக்கு ... | பி. சுசீலா, பி. எஸ். சசிரேகா | புலமைப்பித்தன் | |
3 | அன்பே உன் பெயரென்ன ... | வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் | புலமைப்பித்தன் | |
4 | என் செல்லக்கிளி ... | பி. சுசீலா | புலமைப்பித்தன் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "இறுதியாகச் சிலர்..." thamizhstudio.com.
- ↑ "ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு". ஆனந்த விகடன். 22 மார்ச் 2018. 27 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Idhaya Malar". imdb.com.