இதய இலயமின்மை

இதய இலயமின்மை (Arrhythmia) அல்லது சீரற்ற இதயத் துடிப்பு) என்பது இதயத் துடிப்பு வழமையாக இல்லாத பல்வேறு குறைபாடுகளைக் குறிக்கின்றது. இதயத் துடிப்பு மிகவும் விரைவாகவோ (இதயத் துடிப்பு மிகைப்பு) மிகவும் மெதுவாகவோ (இதயத் துடிப்புத் தளர்வு) அல்லது தனது இயல்பான இலயத்தில் துடிக்காமலோ இருக்கலாம்.[2] சிலவகை இலமின்மைகளில் எவ்வித அறிகுறியும் இருக்காது.[1]சீரற்ற நெஞ்சுத்துடிப்பு அல்லது இதயத் துடிப்புகளுக்கிடையே நிறுத்தம் அறிகுறிகளாக வெளிப்படும்.[1] மிகக் கடுமையான நோயின் போது தலை சுற்றல், மயக்கம், மூச்சுத் திணறல் அல்லது நெஞ்சு வலி காணப்படும்.[1] பெரும்பாலான நேரங்களில் இலயமின்மை கடும்நோயாக இல்லாதிருப்பினும் சிலசமயங்களில் பக்கவாதம் அல்லது குருதித்தேக்க இதயத் திறனிழப்பு நோய்களுக்கு வழிகோலுகிறது.[2][3] சில இலயமில்லாத இதய நோயாளிகளுக்கு உடனடி மரணமும் சம்பவிக்கிறது.[3]

இதய இலயமின்மை
ஒத்தசொற்கள்Cardiac arrhythmia, cardiac dysrhythmia, irregular heartbeat, heart arrhythmia
இதய துடிப்பலைஅளவியில் (ECG) பதிந்துள்ளஇதயக் கீழறை குறுநடுக்கம் (VF) உள்ளவரின் மின்னசைவுகள் ஒழுங்கற்று இருப்பதைக் காட்டும் படம்
சிறப்புஇதயவியல்
அறிகுறிகள்சீரற்ற நெஞ்சுத்துடிப்பு, தலைசுற்றல், மயக்கம், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி[1]
சிக்கல்கள்பக்கவாதம், குருதித்தேக்க இதயத் திறனிழப்பு[2][3]
வழமையான தொடக்கம்கூடிய அகவை[4]
வகைகள்கூடுதல் துடிப்புகள், கீழறை மேற்புர மிகைத்துடிப்புகள், கீழறை இலயமின்மைகள், மெதுவான இலயமின்மைகள்[3]
காரணங்கள்இதய மின்கடத்துகை ஒருங்கிய கோளாறுகள்[2]
நோயறிதல்இதய துடிப்பலைஅளவி, ஓல்டர் கண்காணிப்புத் திரை[5]
சிகிச்சைமருந்துகள், மருத்துவ முறைமைகள் (செயற்கை இதயமுடுக்கி), அறுவை[6]
நிகழும் வீதம்மில்லியன்கள்[4]

இலயமில்லா இதயங்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: (1) முந்தும் இதயத் துடிப்புகள் அல்லது மிகை துடிப்புகள், (2) கீழறை மேற்புர மிகைத் துடிப்புகள், (3) கீழறை இதய இலயமின்மைகள் மற்றும் (4)மெதுவான இலயமின்மைகள்[3] மிகைத்துடிப்புகளில் முந்தும் மேலறை சுருக்கங்கள், முந்தும் கீழறை சுருக்கங்கள் மற்றும் முந்தும் சந்திப்பு சுருக்கங்கள் அடங்கும்.[3] கீழறை மேற்புர மிகைத் துடிப்புகளில் மேலறை குறுநடுக்கங்கள், மேலறைப் பதற்றம் கீழறை மேற்புர துரத்து மிகைத்துடிப்பு அடங்கும்.[3] இதயக் கீழறை இலமின்மைகளில் கீழறை குறுநடுக்கங்கள் மற்றும் கீழறை மிகைத் துடிப்புகள் அடங்கும்.[3][7] மெதுவான இலயமின்மைகள் சைனசு முடிச்சுக் கோளாறாலோ மேலறை கீழறை இடைத்துளை கடத்துகை குழப்பங்களாலோ ஏற்படுகின்றது.[8]. இலயமின்மைகள் இதய மின்கடத்துகை ஒருங்கியக் கோளாறுகளால் ஏற்படுகின்றன.[2] பல சோதனைகள் மூலம் இக்கோளாறு கண்டறியப்படுகின்றது; குறிப்பாக இதய துடிப்பலைஅளவி மற்றும் ஓல்ட்டர் உணர்கருவி பயன்படுத்தப்படுகின்றது.[5]

பல்வகை இலயமின்மைகளும் குணப்படுத்தக் கூடும்.[2] மருந்துகள், செயற்கை இதயமுடுக்கி செருகுதல் போன்ற மருத்துவ முறைமைகள், அறுவை சிகிச்சை ஆகியன சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.[6] விரைவான இதயத் துடிப்புள்ளோருக்கு பீட்டா பிளாக்கர்கள் போன்ற மருந்துகள், இலயமின்மையை கட்டுப்படுத்தும் புரோகைனமைடு போன்ற மருந்துகள் தரப்படுகின்றன.[6] புரோகைனமைடு போன்ற மருந்துகள் நெடுங்காலம் எடுக்கப்பட்டால் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தும்.[6] இதய முடிக்கிகள் மெதுவான இதயத் துடிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[6] சீரற்ற இதயத் துடிப்புகளைக் கொண்டவர்களுக்கு சிக்கல்கள் மிகாதிருக்க குருதி மெலிவூட்டிகள் தரப்படுகின்றன.[6] மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவநிலையாக நிலையற்றோர்களுக்கும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்ட மின் அதிர்ச்சி (இதயத் திருப்பம், குறுநடுக்கமெடுப்பு) கொடுக்கப்படுகின்றது.[6]


இலயமின்மை நோய்கள் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கின்றன.[4] ஐரோப்பாவிலும் வட and அமெரிக்காவிலும் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி மேலறை குறுநடுக்கம் மக்கள்தொகையில் ஏறத்தாழ 2% முதல் 3% வரை பீடித்துள்ளது.[9] 2013இல் மேலறை குறுநடுக்கம் மற்றும் மேலறை பதற்றம் காரணமாக 112,000 மரணங்கள் ஏற்பட்டுள்ளன; இது 1990களில் 29,000 மரணங்களாக இருந்தது.[10] இதயக் குழலிய நோயால் இறந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் இதய நிறுத்தம் காரணமாக இறந்தனர். உலகளவில் இறந்தோரில் இது கிட்டத்தட்ட 15% ஆகும்.[11] உடனடி இதய இறப்பிற்கு 80% காரணமாக கீழறை இலயமின்மைகள் இருந்தன.[11] இலயமின்மை நோய் எந்த அகவையிலும் ஏற்படலாம். இருப்பினும் அகவை முதிர்ந்தோரிடையே பெருமளவில் உள்ளது.[4] குழந்தைகளுக்கும் இந்நோய் வரலாம். இதயத் துடிப்புகளின் வழமையான அளவு அகவைக்கு ஏற்ப வேறுபடும் என்பதை நினைவில் கொள்க.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "What Are the Signs and Symptoms of an Arrhythmia?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 19 February 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "What Is Arrhythmia?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 2 March 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Types of Arrhythmia". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 7 June 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  4. 4.0 4.1 4.2 4.3 "Who Is at Risk for an Arrhythmia?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 3 March 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  5. 5.0 5.1 "How Are Arrhythmias Diagnosed?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 18 February 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "How Are Arrhythmias Treated?". National Heart, Lung, and Blood Institute. July 1, 2011. Archived from the original on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 7 March 2015.
  7. Martin, C; Matthews, G; Huang, CL (2012). "Sudden cardiac death and Inherited channelopathy: the basic electrophysiology of the myocyte and myocardium in ion channel disease.". Heart 98 (7): 536–43. doi:10.1136/heartjnl-2011-300953. பப்மெட்:22422742. 
  8. Vogler, Julia; Breithardt, Günter; Eckardt, Lars (2012-07-01). "Bradyarrhythmias and Conduction Blocks" (in en). Revista Española de Cardiología (English Edition) 65 (7): 656–667. doi:10.1016/j.rec.2012.01.027. பன்னாட்டுத் தர தொடர் எண்:1885-5857. https://www.sciencedirect.com/science/article/pii/S1885585712001260. 
  9. Zoni-Berisso, M; Lercari, F; Carazza, T; Domenicucci, S (2014). "Epidemiology of atrial fibrillation: European perspective.". Clinical Epidemiology 6: 213–20. doi:10.2147/CLEP.S47385. பப்மெட்:24966695. 
  10. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990–2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013". Lancet 385 (9963): 117–71. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  11. 11.0 11.1 Mehra, R (2007). "Global public health problem of sudden cardiac death.". Journal of Electrocardiology 40 (6 Suppl): S118–22. doi:10.1016/j.jelectrocard.2007.06.023. பப்மெட்:17993308. 

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 001101


"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_இலயமின்மை&oldid=3294683" இலிருந்து மீள்விக்கப்பட்டது