இத்ரீசு (அலைஹிஸலாம்)(Idris (prophet)(அரபியம்: إدريس‎) (கருதப்படும் காலம்: கி.மு.4310) இருமுறை திருக்குர்ரானில் குறிப்பிடப்படுகிறார்.முதலில் சூரா19-லும், பின்னர் சூரா21-லும் காணப்படுகிறது.இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனில், இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப் பட்டவர், இத்ரீசு' [1] ஆவார்.வேதங்களை நன்கு கற்றும், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்ததின் காரணத்தால், பாடம் கற்றுக் கொடுப்பவர் என பொருளுடையச் சொல்லான இத்ரீஸ் என அழைக்கப்பட்டார்.

துறவி இத்ரீசு நபி
இறைதூதர், மறைதிறன், தத்துவ தீர்க்கதரிசிகள்
ஏற்கும் சபை/சமயங்கள்இசுலாம்
சர்ச்சை(கள்)இத்ரீசும்,இனாக்கும் ஒருவரே.இருவரும் வெவ்வேறு இறைதூதர்கள் என்போரும் உண்டு
செல்வாக்குக்கு உட்பட்டோர்எண்ணிலடங்கா இசுலாமிய மறைஆற்றல்கள்,தத்துவ ஞானிகள்,அறிவியலாளர்கள்,சூபிஞானிகளான இபன்அரபை+ சுராவார்த்தி
பெற்றோர்Enoch

பிறப்பு

தொகு

ஆதி தந்தை ஆதம் அவர்களிலே பிரகாசித்த நூரே முஹம்மதிய்யா அவர்களின் புதல்வர் நபி ஷீது அவர்களின் நெற்றியில் பிரகாசிக்க அது அவர்களின் வழித்தோன்றலிலே ஊடுறுவி, நபி இத்ரீஸ் அவர்களிலே இலங்கியது. எகிப்து நாட்டில் உள்ள மனாப் என்ற ஊரில் பிறந்தார்கள்.

தோற்றம்

தொகு

அவர்கள் அழகிய உருவினராக விளங்கினார்கள். அவர்களின் உடல் பழுப்பு நிறமாக இருந்தது. உடலில் சதை பற்று குறைவாக இருந்தது. உயர்ந்த உருவினராக இருந்த அவர்கள் பெரிய மீசையும், தாடியும் வைத்து இருந்தார்கள். அவர்களின் ஒரு காது மற்ற காதை விட பெரியதாக இருந்தது.

குணம்:அவர்கள் வாய்மூடி, எதையோ சிந்தித்த வண்ணம் இருப்பார்கள். பேசினால் மெதுவாக பேசுவார்கள். சுட்டு விரலை அசைத்து, அசைத்து பேசுவார்கள். நடந்தால் தலையை குனிந்த வண்ணம் நடந்து செல்வார்கள்.

தொழில்:அவர்கள் தையல் தொழில் செய்து வந்தார்கள்.

திருக்குர்ரானின் குறிப்புகள்

தொகு
சூரா
வசனம்
19:56 وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ ۚ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَّبِيًّا
19:56 (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக(மிக்க சத்தியவானாக), நபியாக இருந்தார்.
21:85 وَإِسْمَاعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ ۖ كُلٌّ مِّنَ الصَّابِرِينَ
21:85 இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Brannon M. Wheeler (2002). Prophets in the Quran:an introduction to the Quran and Muslim exegesis. Continuum. p. 45. {{cite book}}: Text "isbn0-8264-4956-5" ignored (help)

இதையும் காணவும்

தொகு
  • நபி -இசுலாமியர்களின் அனைத்து நபிமார்கள் பற்றியக் கட்டுரை.

புற இணையங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்ரீஸ்&oldid=3684638" இலிருந்து மீள்விக்கப்பட்டது