இந்தியப் புவித்தட்டு

இந்தியப் புவித்தட்டு ( Indian Plate or India Plate) இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கில், புவியடியில் அமைந்த பெரிய புவித் தட்டுகளில் ஒன்றாகும். இந்தியப் புவித்தட்டு, பண்டைய கோண்டுவானா கண்டத்திலிருந்து பிரிந்து, நிலநடுக் கோட்டைத் தாண்டி வடக்கு நோக்கி நகர்ந்த இந்தியத் துணைக்கண்டப் பகுதியாகும்.[1] மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் புவித்தட்டு, அருகில் உள்ள ஆஸ்திரேலியாவின் புவித்தட்டுடன் ஒன்றாக இணைந்து இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு எனும் ஒரே புவித்தட்டாக மாறியது.[2] இந்தியப் புவித்தட்டில், இந்தியத் துணைக்கண்டம், தென்மேற்கு சீனா மற்றும் மேற்கு இந்தோனேசியா பகுதிகள் உள்ளன.[3][4][5]

இந்தியப் புவித்தட்டின் வரைபடம்

புவித்தட்டின் நகர்வுகள் தொகு

 
கோண்டுவானா புவித்தட்டிலிருந்து உடைந்து நகர்ந்த இந்தியப் புவித்திட்டும், மற்ற புவித்திட்டுகளும்
 
இந்தோ-ஆஸ்திரேலிய புவித்தட்டு, இந்தியப் புவித்தட்டாகவும், ஆஸ்திரேலியத் தட்டாகவும் பிரிக்கப்பட்டுள்ளதை வரைபடம் காட்டுகிறது.
 
புவித்தட்டுகளின் நகர்வுகளால், இந்தியப் புவித்தட்டு மடகாஸ்கர் புவித்தட்டிலிருந்து பிரிந்து, யுரேசியப் புவித்தட்டுடன் மோதியதின் விளைவாக உருவான இமயமலைத் தொடர்கள்

140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானா புவித்தட்டில் இருந்த தற்கால ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா பகுதிகளுடன் இந்தியப் புவித்தட்டும் ஒன்றாக இணைந்திருந்தது. பின்னர் கோண்டுவானாவின் புவித்தட்டு பல பகுதிகளாக உடைந்து சிதறிய வேகத்தில்,[6]இந்தியப் பெருங்கடல் உருவானது.[7]

கிரீத்தேசியக் காலத்தின் பிற்பகுதியில், ஏறத்தாழ 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கோண்டுவானாவின் புவித்திட்டுகள் மேலும் உடைந்து சிதறியதால், ஒன்றாக இருந்த மடகாஸ்கர் புவித்திட்டும், இந்தியப் புவித்திட்டும் இரண்டாகப் பிரிந்தது. பின்னர் இந்தியப் புவித்திட்டு ஆண்டிற்கு 20 செமீ வீதம் யுரேசியப் புவித்திட்டை நோக்கி வடக்கு திசையில் நகரந்தது.[6][8] இந்தியப் புவித்திட்டு வடக்கு நோக்கி ஏறத்தாழ 1300 கிலோ மீட்டர் வரை நகர்ந்து, யுரேசியப் புவித்திட்டுடன் மோதிய வேகத்தால் இமயமலைகள் மற்றும் திபெத்திய பீடபூமிப் பகுதிகள் உருவாயின என புவியியலாளர்கள் கருதுகிறார்கள்.[9]

புவியியல் தொகு

இந்தியப் புவிதட்டின் மேற்கு பகுதியில் அரேபியப் புவித்தட்டும், ஆப்பிரிக்கப் புவித்தட்டும், வடக்கில் யுரேசியன் புவித்தட்டின் இமயமலைகள் மற்றும் இந்து குஷ் மலைத்தொடரகளும் எல்லைகளாக உள்ளன.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Oskin, Becky (2013-07-05). "New Look at Gondwana's Breakup". Livescience.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-13.
  2. * Stein, Seth; Sella, Giovanni F.; Okai, Emile A. (2002). "The January 26, 2001 Bhuj Earthquake and the Diffuse Western Boundary of the Indian Plate". Geodynamics Series (American Geophysical Union): 243–254. doi:10.1029/GD030p0243. http://www.earth.northwestern.edu/public/emile/PDF/EAO147.pdf. பார்த்த நாள்: 2015-12-25. 
  3. Sinvhal, Understanding Earthquake Disasters, page 52, Tata McGraw-Hill Education, 2010, ISBN 978-0-07-014456-9
  4. Harsh K. Gupta, Disaster management, page 85, Universities Press, 2003, ISBN 978-81-7371-456-6
  5. James R. Heirtzler, Indian ocean geology and biostratigraphy, page American Geophysical Union, 1977, ISBN 978-0-87590-208-1
  6. 6.0 6.1 Kind 2007
  7. Kumar et al. 2007
  8. Scotese 2001
  9. van Hinsbergen, D.; Lippert, P.; Dupont-Nivet, G.; McQuarrie, N.; Doubrivine, P.; Spakman, W.; Torsvik, T. (2012). "Greater India Basin hypothesis and a two-stage Cenozoic collision between India and Asia". Proceedings of the National Academy of Sciences 109 (20): 7659–7664. doi:10.1073/pnas.1117262109. பப்மெட்:22547792. பப்மெட் சென்ட்ரல்:3356651. Bibcode: 2012PNAS..109.7659V. http://www.pnas.org/content/early/2012/04/23/1117262109.abstract. 

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Indian tectonic plate
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_புவித்தட்டு&oldid=3586179" இலிருந்து மீள்விக்கப்பட்டது