இந்தியப் போர் நினைவு அருங்காட்சியகம்
இந்தியப் போர் நினைவு அருங்காட்சியகம் (Indian War Memorial Museum) வட இந்தியாவின் தில்லியில் உள்ள செங்கோட்டையின் நௌபத் கானாவில் அமைந்துள்ளது. இது 1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும் பிரித்தானியப் பேரரசின் சார்பாக இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ முதல் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டது.
செங்கோட்டையின் நௌபத் கானாவில் அமைந்துள்ளது. | |
நிறுவப்பட்டது | 1919[2] |
---|---|
அமைவிடம் | நௌபத் கானா, செங்கோட்டை, தில்லி, வட இந்தியா. [1] |
வகை | போர் நினைவு அருங்காட்சியகம் |
கண்காட்சி
தொகுநௌபத் கானாவின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவின் இராணுவ வரலாறு தொடர்பான பல காட்சியகங்கள் இதில் உள்ளன. [3]
பாபர் இப்ராகிம் லோடியின் படைகளைத் தோற்கடித்து முகலாயப் பேரரசை நிறுவிய பானிபட் போரின் (1526) ஒளிநிழல் படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய ஆயுதங்களான கத்திகள் மற்றும் குப்திகள் எனப்படும் வாள் கைப்பிடிகள், தலைக்கவசங்கள் , தொழில்மயமாக்கலின் வருகைகளான இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் போன்ற புதிய ஆயுதங்கள் போன்றவை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
துருக்கிய மற்றும் நியூசிலாந்து இராணுவ அதிகாரிகளின் பல்வேறு பதக்கங்கள், நாடாக்கள், சீருடைகள் மற்றும் கொடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற இராணுவ வீரரும் அரசருமான மகாராசா பிரதாப் சிங்கின் ஆடை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இதில் குர்தா (நீண்ட சட்டை), பெல்ட், கால்சட்டை, சரிகை வேலையுடன் கூடிய தலைப்பாகை, காலணிகள் மற்றும் உறையுடன் கூடிய வாள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Annual Report. Government of India, Ministry of Education and Social Welfare. 1980. pp. 93–.
- ↑ Hindustan Year-book and Who's who - Volumes 66-67 - Page 138. M. C. Sarkar. 1999. p. 138.
- ↑ "Indian War Memorial Museum, Red Fort (New Delhi)". Archaeological Survey of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-12-09.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தியப் போர் நினைவு அருங்காட்சியகம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.