இந்தியாவின் மகள்

இந்தியாவின் மகள் (India's Daughter) இங்கிலாந்தைச் சேர்ந்த லெசுலீ உத்வின் (Leslie Udwin) இயக்கிய (ஆங்கில வடிவ) விபரணத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு மற்றும் அதில் கொல்லப்பட்ட 23 வயது பெண் குறித்தானது.[1][2] இந்தத் திரைப்படத்தில் திகார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் எடுக்கப்பட்டப் பேட்டியும் அடங்கியிருந்தது. குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது. பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மார்ச் 8, 2015, அனைத்துலக பெண்கள் நாளன்று ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.[3] இந்தியாவில் என்டிடிவி 24x7 தொலைக்காட்சியாலும் ஐக்கிய இராச்சியத்தில் பிபிசி ஃபோர் தொலைக்காட்சியாலும் மற்றும் ஒரே நேரத்தில் டென்மார்க்கு, சுவீடன், சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் கனடா நாடுகளிலும் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.[4]

இந்தியாவின் மகள்
India's Daughter'
இயக்கம்லெசுலீ உத்வின்
தயாரிப்புலெசுலீ உத்வின்
கதைலெசுலீ உத்வின்
மூலக்கதைதில்லி கும்பல் வல்லுறவு
இசைகிர்சுனா சோலோ
படத்தொகுப்புஅனுராதா சிங்
விநியோகம்பெர்தா பிலிம்
வெளியீடுமார்ச் 4, 2015
ஓட்டம்63 நிமிடங்கள் (1 ம 3 நி)
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம், இந்தி

மார்ச் 4, 2015 அன்று இதனை ஒளிபரப்ப இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இத்திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிபிசி போர் ஒளிபரப்பை முன்பு திட்டமிட்ட அனைத்துலக பெண்கள் நாளுக்கு மாறாக முன்னதாகவே மார்ச் 4 அன்று ஒளிபரப்பியது.[5]

நிர்பயாவின் பெயரை பொதுவில் பிபிசி வெளியிட்டதற்கு அவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தார்.[6][7]

மேற்சான்றுகள்தொகு

  1. "India’s Daughter". கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம். பார்த்த நாள் 4 March 2015.
  2. Freeman, Colin (3 March 2015). "Interview with Delhi gang rapist left 'stain on my soul', says British film maker". த டெயிலி டெலிகிராப். பார்த்த நாள் 4 March 2015.
  3. "India's Daughter: Required Clearances Were Taken by Documentary Maker". என்டிடிவி (4 March 2015). பார்த்த நாள் 4 March 2015.
  4. Baddhan, Raj (3 March 2015). "NDTV 24×7 & BBC to air ‘Nirbhaya’ film on Sunday". என்டிடிவி 24x7. பார்த்த நாள் 4 March 2015.
  5. "இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு". தினமலர் (5 மார்ச் 2015). பார்த்த நாள் 5 மார்ச் 2015.
  6. "India’s Daughter Makes A Strong Move By Revealing The Name Of Nirbhaya". youngisthan. பார்த்த நாள் 14 மார்ச் 2015.
  7. "'The Fearless One': Rape Trial Galvanizes India". spiegel. பார்த்த நாள் 14 மார்ச் 2015.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவின்_மகள்&oldid=2703403" இருந்து மீள்விக்கப்பட்டது