இந்தியாவிற்கான எதிரி சொத்துகளின் பாதுகாவலர்

அரசு முகமை

இந்தியாவிற்கான எதிரி சொத்துகளின் பாதுகாவலர் (Custodian for Enemy Property for India), 1968 எதிரி சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் குடிபெயர்ந்த எதிரி நாட்டவர்களின் இந்தியாவில் உள்ள சொத்துக்களைக்[1] கையகப்படுத்தவும், அதனைப் பாதுகாத்து பராமரிக்கவும் மற்றும் ஏலத்தில் விற்பனை செய்யவும் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் அதிகாரம் பெற்ற நபராவர். இந்திய அரசின் இணைச் செயலாளர் தகுதியில் உள்ள அதிகாரி இதன் பாதுகாவலராக நியமிக்கப்படுகிறார். எதிரி சொத்துக்கள் பாதுகாவலரின் தலைமை அலுவலகம் புது தில்லியில் உள்ளது. இதன் கிளை அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா, லக்னோ நகரங்களில் உள்ளது. [2]

கட்டணம்

தொகு

கைப்பற்றப்பட்ட எதிரி சொத்துக்களின் மதிப்பில் 2% கட்டணமாக இதனை பாதுகாக்கும் அலுவலகம் வசூலிக்கும். இந்தக் கட்டணம் எதிரி சொத்துக்களின் வாடகை மற்றும் வட்டி மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஈடுசெய்யப்படும்.

எதிரி சொத்துக்களை விற்பனை செய்தல்

தொகு

டிசம்பர் 2017ஆம் ஆண்டில் 1968 ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.[3] 12,611 எதிரி சொத்துக்கள் அடையாளம் கண்டறியப்பட்டது. இவைகளின் மதிப்பு ரூபாய் 1 இலட்சம் கோடி ஆகும்.[4] தற்பொது எதிரி சொத்து விற்பனைக்கான நடைமுறைகள் மாவட்ட நீதிபதிகள் மற்றும் துணை ஆணையர்களின் உதவியுடன் தொடங்கவுள்ளது. ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மதிப்புள்ள சொத்துக்களில் குடியிருப்பாளருக்கு விற்பனை செய்ய முன்னுரிமை வழங்கப்படும். மறுக்கும் பட்சத்தில் எதிரி சொத்துகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேசமயம் எதிரி சொத்துகளின் மதிப்பு ரூபாய் 1 கோடியிலிருந்து 100 கோடிக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் பாதுகாக்கும் அலுவலர் அவற்றை மின்னணு ஏல (இ-ஏலம்) முறையில் விற்பனை செய்யலாம்.

எதிரி சொத்துக்களான பங்குகள், தங்கம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் இந்திய அரசுக்கு ரூபாய் 3,400 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.[5]

இந்தியாவிற்கான எதிரி சொத்துகளின் பாதுகாப்ப் அலுவகம் கண்டறிந்துள்ள 12,611 எதிரி சொத்துகளில் 12,485 சொத்துகள் பாகிஸ்தானியர்களுக்கு சொந்தமானவை. எஞ்சிய 126 சொத்துகள் மட்டுமே சீனாவில் குடியுரிமை பெற்றவர்களை சார்ந்தவை. தமிழ்நாட்டில் 67 எதிரி சொத்துகளும், கேரளாவில் 71 சொத்துகளும், கர்நாடகாவில் 24 எதிரி சொத்துகளும் உள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 4,088 எதிரி சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[6][7]

எதிரி சொத்துக்கள் ஏலம்

தொகு

இந்திய அரசின் வசம் உள்ள எதிரி சொத்துக்களை எதிரி சொத்துகளின் பாதுகாவலர் மூலம் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனி 25 சூலை 2023 அன்று மக்களவையில் அறிவித்தார்.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு