இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம்

இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC), ஆசியாவையும், ஐரோப்பாவையும் மத்திய கிழக்கு மற்றும் மத்தியத் தரைக்கடல் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஆகும்.[1] இத்திட்டத்தை 2023ல் முதன்முதலில் இந்தியா முன்மொழிந்தது.[2]

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்
சுருக்கம்IMEC
உருவாக்கம்9 செப்டம்பர் 2023; 13 மாதங்கள் முன்னர் (2023-09-09)
நிறுவனர்
நோக்கம்பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பை ஊக்குவித்தல்
தலைமையகம்

9 மற்றும் 09 செப்டம்பர் 2023 அன்று புது தில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், இரயில், சாலை வழியாக இணைக்கும் 6,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் 10 செப்டம்பர் 2023 அன்று கையெழுத்திட்டது.[3][4][5]

புதிய பொருளாதார வழித்தடத்தில் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். அதோடு ஹைட்ரஜன் கொண்டு செல்ல இராட்சத குழாய்களும் பதிக்கப்படும். இந்த திட்டத்தால் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி அடையும். இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.[6]

விமர்சனங்கள்

தொகு

இவ்வழித்தடம் துருக்கி வழியாக செல்லாத காரணத்தால், செப்டம்பர் 2023ல் துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் இத்திட்டத்தை விமர்சித்ததுடன், பாரசீக வளைகுடாவை ஐரோப்பாப்பாவை ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஈராக், துருக்கி வழியாக இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத் திட்டத்தை அறிவித்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Ram (2023-09-11). "A corridor of immense promise". BusinessLine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
  2. "World leaders launch India-Middle East-Europe Economic Corridor seen as counter to China's BRI". Financialexpress (in ஆங்கிலம்). 2023-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10. The IMEC aims to bolster economic development by fostering connectivity and economic integration between Asia, the Arabian Gulf, and Europe.
  3. Ellis-Petersen, Hannah (2023-09-09). "G20: EU and US back trade corridor linking Europe, Middle East and India" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2023/sep/09/g20-eu-and-us-back-trade-corridor-linking-europe-middle-east-and-india. 
  4. "7 countries, EU sign memorandum of understanding for trade corridor linking Europe, Middle East and India". www.aa.com.tr. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  5. "'Game-changer': India-Middle East economic corridor unveiled at G20". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  6. இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் 6,000 கி.மீ. தொலைவு பொருளாதார வழித்தடம்: சீனாவுக்கு சவால் விடும் இந்தியா
  7. Soylu, Ragip (11 September 2023). "Turkey's Erdogan opposes India-Middle East transport project". Middle East Eye. https://www.middleeasteye.net/news/turkey-erdogan-opposes-india-middle-east-corridor.