இந்திய இராணுவ விவகாரங்கள் துறை
இராணுவ விவகாரங்கள் துறை (Department of Military Affairs) (சுருக்கமாக:DMA), இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை ஆகும். இத்துறையின் அலுவல்-சாரா செயலாளராக பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் செயல்படுவர்.[1][2][3] இராணுவ விவகாரங்கள் துறையானது இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கும் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே பாலமாக செயல்படும்.[4][5]
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 சனவரி 2020 |
தலைமையகம் | நடுவண் தலைமைச் செயலகம், புது தில்லி |
அமைச்சர் | |
துணை அமைச்சர் |
|
துறை தலைமை |
|
மூல நிறுவனம் | இந்திய பாதுகாப்பு அமைச்சகம் |
செயல்பாடு
தொகுஇராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கொண்ட இராணுவ விவகாரங்கள் துறையானது ஆயுதக் கொள்முதல், பயிற்சி மற்றும் பணியாளர்கள் போன்ற பல்வேறு துறைகளில் கூட்டுத் தன்மையை ஊக்குவிக்கும்.[6] இராணுவ விவகாரங்கள் துறையானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்களின் தலைமையகம், தரைப்படை, வான்படை மற்றும் கடற்படைகளின் தலைமையகத்துடன் தொடர்புடன் இருக்கும். மேலும் முப்படைகளின். கூட்டுத் திட்டமிடல் மூலம் கூட்டுத் தன்மையை மேம்படுத்துதல், வளங்களின் உகந்த பயன்பாட்டிற்கான மறுசீரமைப்பை எளிதாக்குதல் மற்றும் சேவைகளால் உள்நாட்டு தளவாடங்களை பயன்படுத்துவதை மேம்படுத்துதல் ஆகியவற்றை கையாளும்.
அமைப்பு
தொகுஇந்தத் துறையானது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவரின் தலைமையில் செயல்படுகிறது. இவரே இத்துறையின் அலுவல்-சாரா அரசுச் செயலராக செயல்படுவர். அரசு செயலரின் கீழ் ஒரு கூடுதல் செயலாளர், ஐந்து இணை செயலர்கள், 13 துணைச் செயலாளர்கள் மற்றும் இருபத்தைந்து சார்புச் செயலாளர்கள் செயல்படுவர்.[7][8][9][10][11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Menon, Lt General Prakash (2019-12-25). "CDS was needed. But Modi govt also creating Department of Military Affairs is a big bonus". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
- ↑ "Govt sets up Dept of Military Affairs to be headed by Chief of Defence Staff". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-12-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
- ↑ Peri, Dinakar (2019-12-25). "CDS will bring in synergy, say experts" (in en-IN). The Hindu (New Delhi). இணையக் கணினி நூலக மையம்:13119119. https://www.thehindu.com/news/national/cds-will-bring-in-synergy-say-experts/article30397467.ece.
- ↑ Bhalla, Abhishek (24 December 2019). "CDS to head new dept of military affairs to integrate armed forces with Defence Ministry". India Today. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
- ↑ "Modi govt's CDS-Dept of Military Affairs: Cosmetic change or increasing defence efficiency?". ThePrint. 25 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
- ↑ "Cabinet approves creation of the post of Chief of Defence Staff in the rank of four star General". Press Information Bureau, Government of India. 24 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
- ↑ Peri, Dinakar (2020-01-10). "Dep. of Military Affairs' rules of business approved" (in en-IN). தி இந்து. இணையக் கணினி நூலக மையம்:13119119. https://www.thehindu.com/news/national/dep-of-military-affairs-rules-of-business-approved/article30535854.ece.
- ↑ P, Rajat; Jan 10 (2020-01-10). "New department of military affairs takes shape under the CDS | India News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). New Delhi. பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257. இணையக் கணினி நூலக மைய எண் 23379369. பார்க்கப்பட்ட நாள் 2020-01-12.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Creation of New Department of Military Affairs". 2020-02-03.
- ↑ "General Bipin Rawat's department to get 3 two-star military officers". 2020-02-12.
- ↑ "Bipin Rawat headed-DMA will give preference to domain experts like DRDO and ISRO; The Gen Rawat-headed Department of Military Affairs is currently operating with an interim structure as govt is yet to accord final sanction". 2020-02-14.
- ↑ "Proposal on structure of Department of Military Affairs sent to Defence Ministry". தி இந்து. 2020-02-14.