இந்திய நீர்மின் திட்டங்கள்
இது இந்திய பெரிய நீர்மின் நிலையங்களின் பட்டியல் ஆகும்..[1] நீரேற்றித் தேக்கும் புனல்மின் நிலைய அணிகளும் தரப்பட்டுள்ளன.[2]
தொடக்கநிலை முதன்மை நீர்மின் திட்டங்கள்
தொகுடாடா நீர்மின் திட்டம்
தொகுஇவை மும்பை பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. லொனவாலா, நிலமுலா, ஆந்திரப்பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து மும்பை, தானா, கல்யாண், பூனா ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.
பைகாரா நீர்மின் திட்டம்
தொகுதமிழ் நாட்டின் பைகாரா நீர் மின் திட்டம் நீலகிரியில் உள்ள பைகாரா ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினால் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.
மேட்டூர் நீர்மின் திட்டம்
தொகுசேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் நீர் மின் திட்டம் ஒரு பெரிய திட்டமாகும். இது நீர் பாசனம், நீர் மின் உற்பத்தி ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட முதல் திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து சேலம், திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன. ஈரோட்டில் பைகாரா நீர்மின் ஆற்றலும் மேட்டூர் நீர்மின் ஆற்றலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
பாபநாசம் நீர்மின் திட்டம்
தொகுதிருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள பாபநாசம் நீர் மின் திட்டம் 1944-ல் முடிவடைந்தது. இத்திட்டத்தினால் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன. இவை தவிர தமிழ் நாட்டில் பெரியாறு நீர் மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம், மோயார் நீர்மின்திட்டம் ஆகிய நீர் மின் திட்டங்கள் உள்ளன.
சிவசமுத்திர நீர்மின் திட்டம்
தொகுகர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதிலிருந்து மைசூர், பெங்களூரு ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.
சராவதி நீர்மின் திட்டம்
தொகுஇது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது. இத்திட்டம் சராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டம் முதலில் ஜோக் நீர்மின்திறன் திட்டம் என்றும் பின்னர் மகாத்மா காந்தி நீர்மின்திறன் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான ஜோக் நீர் வீழ்ச்சி இந்த ஆற்றில் தான் அமைந்துள்ளது.
பள்ளிவாசல் நீர்மின் திட்டம்
தொகுஇது கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் நீர்மின் திட்டமாகும். 1940-ல் இத்திட்டம் முடிக்கப்பட்டது. இதைத் தவிர கேரளாவில் செங்குளம், பெரிங்குல் குது, சபரிகிரி, இடிக்கி, குட்டியாடி நீர்மின் திட்டங்கள் உள்ளன.
மண்டி நீர்மின் திட்டம்
தொகுஇமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டத்திலிருந்து பஞ்சாப், தில்லி, கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் இம்மின் ஆற்றலைப் பெறுகின்றன.
இவை தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி,லோக்டாக் போன்ற பல நீர்மின் திட்டங்கள் தொடக்க காலத்தில் உருவாகின .
இந்திய நீர்மின் நிலையங்கள்
தொகு|}
மேலும் காண்க
தொகுவெளி இனைப்புகள்
தொகுhttps://en.wikipedia.org/wiki/Hydroelectricity
https://en.wikipedia.org/wiki/List_of_power_stations_in_India
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of operating hydroelectric power stations in India". 30 August 2018. Archived from the original on 26 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pumped storage development in India" (PDF). 31 July 2018. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ "NHPC Under Construction Power Stations". NHPC. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
- ↑ "Lower mettur barrage power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Bhavani Kattalai Barrage" (PDF). பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Kadamparai Power House PH00344". Archived from the original on 16 April 2018. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
- ↑ "Aliyar power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Kundah Power House". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Pykara power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Pykara Ultimate Stage Hydro Electric Plant". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Kodayar Power House". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Periyar power house". பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
- ↑ "Status of Hydro Electric Projects under Execution for 12th Plan & beyond" (PDF). Archived from the original (PDF) on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 7 Sep 2014.
- ↑ "AP, Orissa join hands to build hydel project". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 November 2013.
- ↑ 15.0 15.1 "NHPC Geo Thermal and Small Hydro". NHPC. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.