இந்திய மாதர் சங்கம்

இந்திய மாதர் சங்கம் (Women's Indian Association) என்பது 1917 ஆம் ஆண்டு சென்னை அடையாரில் நிறுவப்பட்ட ஒரு சங்கமாகும். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் விசயங்களில் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் கல்வி உரிமை பெறுவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும், ஆடவருடன் சம உரிமை பெறுவதையும் நோக்கமாக கொண்டு அன்னி பெசண்ட், மார்கரெட் கசின்சு, ஜீனா ராஜா தாசா மற்றும் பலரால் நிறுவப்பட்டது. கல்வியறிவின்மை, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை மற்றும் பிற சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் சக்தியாக இந்த சங்கம் பின்னர் வளர்ந்தது.[1][2] 1933 இல் அன்னி பெசன்ட் இறந்த பிறகு, ஜீனா ராஜா தாசா பிரம்மஞனிளின் உள் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டினார். தீவாய்ப்பாக அவர் ஆதரித்த பிரிவுக்கு சாதகமான நிலை இல்லாமல் போனது. அன்றிலிருந்து அவரது பெயர் எல்லா ஆவணங்களிலும் இடம்பெறாமல் போனது.

வரலாறு

தொகு

இந்திய, ஐரோப்பிய எனும் இருதரப்பு பெண்களையும் இணைப்பதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் பெயரானது எந்த மெய்யியல், சமயம், சாதி, சமூக வர்க்கம் ஆகியவற்றுடன் தொடர்பு இல்லாதவாறு தேர்ந்தெடுக்கப்பட்டது. இச்சங்கம் 1917 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள், சென்னை அடையாரில் மார்கரெட் இ. கசின்சால் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் அன்னி பெசண்ட் இருந்தார். நிறுவன உறுப்பினர்களாக எஸ். அம்புஜம்மாள், கமலாதேவி சட்டோபாத்யாய், மேரி பூனன் உலூகோசு, பேகம் ஹஸ்ரத் மோகனி, சரலாபாய் நாயக், தன்வந்தி ராமராவ், முத்துலட்சுமி ரெட்டி, மங்களம்மாள் சதாசிவியர், ஹீராபாய் டாட்டா ஆகியோர் இருந்தனர்.[சான்று தேவை]

ஸ்திரீ தர்மம்

தொகு

இதன் இலட்சியங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றிற்கு குரல் கொடுப்பதற்காக மாதர் சங்கத்தால் ஸ்த்ரி தர்மம் என்ற இதழ் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளையும், உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகள் குறித்தும் இதில் பேசப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Sudarkodi, S. (1997). "The Women's Indian Association and the Emancipation of Women in the Madras Presidency". Proceedings of the Indian History Congress 58: 742–743. 
  2. Reddi, S. Muthulakshmi (2015-08-14). "Emancipation of Women" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/emancipation-of-women-discussed-in-the-hindu-1947-indpendence-day-issue/article7540721.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மாதர்_சங்கம்&oldid=4110172" இலிருந்து மீள்விக்கப்பட்டது