இந்திய யுரேனிய கழகம்
இந்திய யுரேனிய கழகம் (Uranium Corporation of India) என்பது யுரேனியம் சுரங்கம் மற்றும் யுரேனியம் செயலாக்கத்திற்கான அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1967-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் யுரேனியம் தாது சுரங்கம் மற்றும் தாதுவைனைத் தோண்டி எடுக்கும் பொறுப்பினைக் கொண்டது.[2][3] இந்த கழகத்தின் சுரங்கங்கள் ஜாதுகோரா, பதின், நர்வபகார், துராம்திக் மற்றும் பந்துகுராங்கில் அமைந்துள்ளன.[4]
வகை | பொதுத்துறை |
---|---|
நிறுவுகை | 1967 |
தலைமையகம் | ஜாதுகோரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | சி. கே. அசுனானி (தலைவர் & நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | சுரங்கத் தொழில் |
உற்பத்திகள் | யுரேனியம் |
வருமானம் | ₹2,034.79 கோடி (US$250 மில்லியன்) (2019) [1] |
இயக்க வருமானம் | ₹406.52 கோடி (US$51 மில்லியன்) (2019)[1] |
மொத்தச் சொத்துகள் | ₹3,866.33 கோடி (US$480 மில்லியன்) (2019)[1] |
மொத்த பங்குத்தொகை | ₹2,833.93 கோடி (US$350 மில்லியன்) (2019)[1] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
பணியாளர் | 4629 (மார்ச் 2019) |
இணையத்தளம் | uraniumcorp |
சுரங்கங்கள்
தொகுஜதுகுடா
தொகுஇது இந்தியாவின் முதல் யுரேனியம் சுரங்கமாகும். இது 1967-ல் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இந்த சுரங்கம் சார்கண்ட்டு மாநிலத்தில் உள்ளது.[5] யுரேனியம் தாது செயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் சுரங்கத்திற்கு அருகிலேயே ஜதுகொடா சுத்திகரிக்கும் ஆலை அமைந்துள்ளது. பதின் மற்றும் நர்வபகார் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் தாதும் இங்கு தயார்ப்படுத்தப்படுகிறது.
பதின்
தொகுஇந்த சுரங்கம் ஜதுகுடாவிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது. இது பெரும்பாலான உள்கட்டமைப்பை ஜதுகுடா சுரங்கத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
நர்வபகார்
தொகுஇந்த சுரங்கம் ஏப்ரல் 1995-ல் தொடங்கப்பட்டது. இது நாட்டின் அதி நவீன சுரங்கமாக அறியப்படுகிறது.
துரம்திக்
தொகுதுரம்திக் சுரங்கம் ஜாதுகுடாவிற்கு மேற்கே 24 கி. மீ. தொலைவில் ஹவுரா மும்பை தொடருந்து முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துராம்தி, பாண்டுஹராங் மற்றும் மொஹுல்டின் சுரங்கங்களிலிருந்து தாதைத் சுத்திகரிப்பதற்காக துரம்திக் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
பாக்ஜாதா
தொகுபாக்ஜதா சுரங்கம் என்பது சார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலத்தடி சுரங்கமாகும்.
புதிய திட்டங்கள்
தொகுஇந்திய யுரேனிய கழகம் சார்க்கண்டில் இரண்டு நிலத்தடி சுரங்கங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் யுரேனியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, கடப்பா மாவட்டத்தில் நிலத்தடி சுரங்கம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.[6]
சர்ச்சைகள்
தொகுஇந்திய யுரேனிய கழக சுரங்க நடவடிக்கைகள் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சை விளைவிப்பதாக உள்ளூர் சமூகத்தின் சில பிரிவுகளிடமிருந்து விமர்சனம் இருந்து வருகிறது.[7] 1998ஆம் ஆண்டு சக்தி நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவால் அனுமதியளிக்கப்பட்ட 63 இந்திய நிறுவனங்களில் இந்திய யுரேனிய கழக நிறுவனமும் ஒன்று.[8] காசி மலைகளில் இந்திய யுரேனிய கழக சுரங்க நடவடிக்கைகள் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என உள்ளூர் பழங்குடியினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Balance Sheet 31.03.2019".
- ↑ "URANIUM PRODUCTIONFrom ore to yellow cake". தி இந்து. 1999-09-10. Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ Correspondent, Vikatan. "விவசாயிகளை சிவக்க வைத்த யுரேனிய குண்டு!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
- ↑ "Mines". UCIL. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Wikimapia - Let's describe the whole world!".
- ↑ "Welcome to UCIL India".
- ↑ Chakrabarti, Ashis (1998-09-19). "Angry villagers take on uranium corporation". Indian Express. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980919/26251044.html.
- ↑ "BARC among 63 blacklisted institutions". 26 July 1998. http://www.indianexpress.com/ie/daily/19980726/20750704.html.
- ↑ Bhaumik, Subir (5 May 2003). "Tribes dig in to fight uranium". BBC News. http://news.bbc.co.uk/2/low/south_asia/3000991.stm.