ஜாதுகோரா
ஜாதுகோரா (Jadugora) மேலும் ஜாதுகோடா அல்லது ஜதுகோடா என்றும் உச்சரிக்கப்படும் இது இது இந்திய மாநிலமான சார்க்கண்ட்டில் உள்ள கிழக்கு சிங்பூம் மாவட்டத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இங்கு இந்திய யுரேனிய நிறுவனம் அமைந்துள்ளது. இது ஜம்சேத்பூர் நகரத்திலிருந்து சாலை வழியாக 35 கி.மீட்டரும், இரயிலில் 20 கி.மீ தூரமும் கொண்டது. இந்தியாவில் யுரேனியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சுரங்கங்கள் இங்கு அமைந்துள்ளது. நகரியம் 1965 இல் நிறுவப்பட்டது. மேலும் இது நவீன பள்ளி, டென்னிசு மைதாங்கள் கொண்ட சங்கங்கள், மேலும், ஒரு முழு அளவிலான மருத்துவமனை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டது. இங்குள்ள பள்ளி அணுசக்தி மத்திய பள்ளி எனப்படும் பள்ளிகளின் சங்கிலியின் ஒரு பகுதியாக இருந்தது.
ஜாதுகோரா
ஜாதுகோடா | |
---|---|
சிறிய நகரம் | |
ஆள்கூறுகள்: 22°39′N 86°22′E / 22.65°N 86.36°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சார்க்கண்ட் |
மாவட்டம் | கிழக்கு சிங்பூம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 24,891 |
மொழிகள் | |
• அலுவல் | Hindi, சந்தாளி, ஹோ |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JH |
சொற்பிறப்பியல்
தொகு"ஜாதுகோரா" அல்லது "ஜாதுகோடா" என்ற பெயர் "ஜாதகோடா" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் உள்ளூர் பழங்குடி மொழியில் 'யானைகளின் நிலம்' என்பதாகும். இது ஒரு காலத்தில் பல ஆசிய யானைகளின் வசிப்பிடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பல சுரங்கங்களும், தொழிற்சாலைகளும் நிறுவப்பட்டப் பின் காலப்போக்கில், அவை வாழ்விட இழப்பு காரணமாக அடர்த்தியான காடுகளுக்குள் சென்றுவிட்டன.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[1] நகரத்தின் மக்கள் தொகை 19,003 என்பதாகும். ஆண்கள் 53சதவீதமும், பெண்கள் 47 சதவீதமு இருக்கின்றனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 63%. இங்கு, 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்நகரம் பல்வேறு தாவரங்களாலும், விலங்கினங்களாலும் செல்வாக்குள்ள பழங்குடி கலாச்சாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சந்தாளிகள், கோண்டு மக்கள், முண்டாக்கள் மலை காரியா போன்ற சில பழங்குடி பழங்குடியினருக்கும் இந்த இடம் உள்ளது. இந்த இடம் மலைகளாலும், ஆறுகளாலும் சூழப்பட்டுள்ளது. பறவைகளிலும், ஊர்வனவைளிலும், விலங்குளிலும் பல வகைகள் இங்கு காணப்படுகின்றன. இதன் கலாச்சாரம் மேற்கு வங்காளம், ஒடியா, பீகார் ஆகியவற்றின் கலாச்சாரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவை அண்டை மாநிலமான சார்க்கண்ட்டும் ஒன்றாகும். துர்கா பூஜை, தீபாவளி, மேலும், உள்ளூர் பழங்குடி திருவிழாவான சாத், துசு பர்வா போன்ற பண்டிகைகளில் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
சுற்றுலா இடங்கள்
தொகுஇரங்கினி கோயில் என்பது நகரத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையின் சாலை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கோயில் ஆகும். இது ஜாதுகோடா சந்தை சதுக்கத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கோயில் மாதா இரங்கினிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஜம்சேத்பூர் நகரம் உட்பட அருகிலுள்ள இடங்களிலிருந்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகைத் தருகின்றனர். ஒரு புராணத்தின் படி, ஒரு உள்ளூர் பழங்குடியினர் ஒரு பழங்குடி சிறுமியை ஒரு அரக்கனைக் கொல்ல தேவி வடிவத்தை எடுத்ததைக் கண்டார். அவர் அந்தப் பெண்ணைப் பின்தொடர முயன்றபோது அவள் காடுகளுக்குள் மறைந்தாள். அதே இரவில் தேவி தனது கனவுகளில் தோன்றி அதே இடத்தில் ஒரு கோவிலைக் கட்டும்படி பணித்தார்.
யுரேனியச் சுரங்கங்கள்
தொகுஇந்திய அரசு நிறுவனமான ஜாதுகோரா யுரேனிய நிறுவனத்தின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. 1960களின் பிற்பகுதியில் வளமான யுரேனியத்தாது இருப்பதால் இது நிறுவப்பட்டது. இந்நிறுவனம் அண்மையில் சார்க்கண்டின் நர்வபஹாரில் யுரேனியம் சுரங்க மற்றும் ஆலைத் திட்டத்தை முடித்தது. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஜாதுகுடா யுரேனியச் சுரங்கத்தில் யுரேனியத்தின் போதுமான வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாட்டின், நர்வபஹார் போன்ற இடங்களில் யுரேனியம் வைப்பு தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. நர்வபஹார் சுரங்கம், ஜாதுகுடாவிலிருந்து வடமேற்கே 12 கி.மீ தூரத்தில் உள்ளது. நாட்டின் மிக நவீன சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இச்சுரங்கம் உருசியத் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
தொகு- Hiroaki KOIDE, Research Reactor Institute, Kyoto University Radioactive contamination around Jadugoda uranium mine in India 27 April 2004
- Jadugoda: The Nuclear Graveyard [1]