இந்திரதுய்மன்

சூரிய குல மன்னன் சுமதியின் மகனும் மற்றும் பரதனின் பேரன்

இந்திரதுய்மன் (Indradyumna) என்பது இந்து இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு மன்னர்களின் பெயராகும். மகாபாரதம் மற்றும் புராணங்களில் இடம்பெற்றுள்ள ஒரு பாண்டிய மன்னரின் பெயரும், சூரிய குல மன்னன் சுமதியின் மகனும் மற்றும் பரதனின் பேரனுமாவான்.[1] கஜேந்திரமோட்சத்தில் தனது முற்பிறவில் யானையாக கூறப்பட்ட இந்திரதுய்மனின் ஆணவம் கடவுள் விஷ்ணுவால் அழிக்கப்பட்டு, மோட்சம் கிடைத்த கதையால் மிகவும் பிரபலமானவர்.[2]

இந்திரதுய்மன்
ஒரு தேரில் அமர்ந்திருக்கும் இந்திரதுய்ம்னனின் ஓவியம்
நூல்கள்மகாபாரதம், புராணம்
அரசமரபுசூரிய குலம்

இது பாண்டிய மன்னரின் அதே வம்சாவளியைப் பகிர்ந்து கொள்ளும் அவந்தி நாட்டின் மன்னரின் பெயராகவும் உள்ளது. இந்திரதுய்மன் புரி ஜெகன்நாதர் கோயிலின் சிலைகளை நிறுவிய கதைக்காகாகவும் நன்கு அறியப்பட்டவர். கந்த புராணத்தின் புரோசோத்தம-சேத்ர-மகாத்மிய பிரிவில் முக்கியமாக இடம்பெற்றுள்ளார்.[3][4][5]

கஜேந்திர மோட்சத்தின் புராணத்தின் சிற்பம், இங்கு கஜேந்திரனாக இந்திரதுய்மன் விஷ்ணுவால் முதலையிடமிருந்து மீட்கப்படுகிறார். தசாவதாரக் கோயில், தியோகர், உத்தரப் பிரதேசம்

பாண்டிய இந்திரதுய்மன்

தொகு

பாகவத புராணத்தில், எட்டாவது காண்ட்த்தில் இந்திரதுய்மனை பாண்டிய நாடு நாட்டின் ஆட்சியாளரான சுயம்புவ மனுவின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வைணவ மன்னராக விவரிக்கிறது. இந்திரதுய்மன் வயதாகும்போது தனது குழந்தைகளுக்கு ஆதரவாக தனது சிம்மாசனத்தை கைவிட்டு, மலய மலையில் தவம் செய்யத் தொடங்கினார். தவமிருந்த அரசன் அங்குவந்த அகத்தியரை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அகத்தியர், மன்னனை யானையாக பிறவி எடுக்கும்படி சபித்தார். பின்னர் இந்திரத்ய்மனின் வேண்டுகோளின் பேரில், விஷ்ணுவால் காப்பாற்றப்படும்போது மன்னன் தனது சாபத்திலிருந்து விடுவிக்கப்படுவார் என அகத்தியர் சாபவிமோசனமும் அளித்தார். அதன்படி, மன்னன் யானையாக பிறவி எடுத்தான்.[6] அதே சமயம் முதலையாக சாபம் பெற்றது ஒரு கந்தர்வன். ஒரு முறை முனிவர் தேவலாவுடன் கந்தர்வனும் சேர்ந்து நீராடினர். முனிவர் சூரிய நமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார்.

தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார்.

அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவியெடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர்.

 
இந்திரத்யும்னன் ஆமை அகுபராவுடன் பேசுகிறார். முகலாய கலைஞர் சுர்ஜானா வரைந்த ஓவியம், 1598-99 ராஸ்னாமா.

மேற்கோள்கள்

தொகு
  1. Wilson, Horace Hayman (1877). The Vishńu Puráńa: A System of Hindu Mythology and Tradition Translated from the Original Sanskrit and Illustrated by Notes... (in ஆங்கிலம்). Trübner & Company. p. 70. Archived from the original on 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
  2. Krishna, Nanditha (2014-05-01). Sacred Animals of India (in ஆங்கிலம்). Penguin UK. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-182-6. Archived from the original on 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
  3. Dowson, John (1888). A classical dictionary of Hindu mythology and religion, geography, history, and literature. Robarts – University of Toronto. London : Trübner. p. 127.
  4. Chakraborty, Yogabrata (28 June 2023). "পুরীধাম ও জগন্নাথদেবের ব্রহ্মরূপ বৃত্তান্ত" [Puridham and the tale of lord Jagannath's legendary 'Bramharup']. dainikstatesmannews.com (in Bengali). Kolkata: Dainik Statesman (The Statesman Group). p. 4. Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
  5. Books, Kausiki (2021-10-24). Skanda Purana: Vaishnava Khanda: Purushottama Kshetra Mahatmya: English Translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books. p. 249. Archived from the original on 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
  6. Dalal, Roshen (2014-04-18). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin UK. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-277-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரதுய்மன்&oldid=4128414" இலிருந்து மீள்விக்கப்பட்டது