இந்திரன் (கவிஞர்)

இந்திரன் (Indiran) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கலை விமர்சகர் ஆவார்.[1] 1948 ஆம் ஆண்டு சூன் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் இராசேந்திரன் என்பதாகும். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார். தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கும் 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தார். பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்' என்கிற மனோரமா பிசுவால் மகாபத்ராவின் ஒரிய மொழிக் கவிதைகளின் மொழியாக்கத்திற்காக இந்திரன் 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமியின் மொழியாக்க விருதைப் பெற்றார்.[2] கவிதைகளில் சோதனை முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பாண்டிச்சேரியில் கஜேந்திரன் -சிவசங்கரி இணையருக்கு மகனாகப் பிறந்த இவர் சென்னை, கோபாலபுரம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பள்ளியில் படிக்கும்போது நண்பர்களுடன் 'எலைட் இலக்கியக் கழகம்' என்ற அமைப்பை நடத்தினார். ஆங்கிலத்தில் கட்டுரைகள் வாசித்தார். 'ஞானம்பாடி' என்ற பெயரில் அகில இந்திய வானொலிக்காக பாடல்கள் எழுதினார். பச்சையப்பன் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அம்பேத்கரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு அவரது எழுத்துக்களைப் படித்தார். இந்தியன் வங்கியில் பணிபுரிந்தார்.

படைப்புகள்

தொகு

கலை விமர்சனம்

தொகு
  • 1987 - நவீன கலையின் புதிய எல்லைகள்
  • 1989 - ரே :சினிமாவும் கலையும்
  • 1994 - தமிழ் அழகியல்
  • 1994 - MAN & MODERN MYTH
  • 1996 - தற்கால கலை :அகமும் புறமும்
  • 1999 - TAKING HIS ART TO TRIBALS
  • 2001 - தேடலின் குரல்கள் : தமிழக தற்கால கலைவரலாறு
  • 2005 - நவீன ஓவியம்
  • 2010 - கலை - ஓவியம் , சிற்பம் பற்றிய கட்டுரைகள்

கவிதை

தொகு
  • 1972 - திருவடி மலர்கள்
  • 1982 - SYLLABLES OF SILENCE
  • 1982 - அந்நியன்
  • 1991 - முப்பட்டை நகரம்
  • 1994 - சாம்பல் வார்த்தைகள்-நெடுங்கவிதை
  • 1996 - ACRYLIC MOON
  • 2002 - SELECTED POEMS OF INDRAN
  • 2003 - மின்துகள் பரப்பு
  • 2016 - மிக அருகில் கடல்
  • 2018 - மேசைமேல் செத்த பூனை
  • 2021 - பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்
  • 2021 - இந்திரன் கவிதைகள் 1982-2020: பிரம்மைகளின் மாளிகை

மொழிபெயர்ப்பு

தொகு
  • 1982 - அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்-ஆப்பிரிக்க/ஆப்ரோ அமெரிக்க இலக்கியம்.
  • 1986 - காற்றுக்குத் திசை இல்லை-இந்திய இலக்கியம்
  • 1994 - பசித்த தலை முறை- மூன்றாம் உலகஇலக்கியம்
  • 1995 - பிணத்தை எரித்தே வெளிச்சம்- தலித் இலக்கியம்
  • 2002 - KAVITHAYANA- TRILINGUAL COLLECTION OF ORIYA POETRY
  • 2003 - கடவுளுக்கு முன்பிறந்தவர்கள்-ஆதிவாசிகவிதைகள்
  • 2003 - மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள்-ஒரிய மொழி கவிதை
  • 2011 - பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் (சாகித்திய அக்காதமி விருது)

தொகுப்பு

தொகு
  • 2000 - இந்திரன்: கவிதை, ஓவியம், சிற்பம் ,சினிமா
  • 2000 - வேரும் விழுதும்: தற்கால மக்கள் பண்பாடு
  • இந்திரன் நடத்திய போபால் மனித இன அருங்காட்சியகத்திற்கான கருத்தரங்கக் கட்டுரைகள்
  • 2002 - புதுச்சேரி: மனசில் கீறிய சித்திரங்கள்

நினைவுக் குறிப்புகள்

தொகு
  • 2008 - இந்திரன் காலம்: ஓர் இலக்கிய சாட்சியம்

உரையாடல்

தொகு
  • 2000 - MAN AND MODERN MYTH: INDRAN WITH S.CHADRASEKARAN EMINENT ARTIST FROM SINGAPORE
  • 2004 - கவிதை அனுபவம் : இந்திரன் / வ.ஐ.ச.ஜெயபாலன்

இதழாசிரியர்

தொகு
  • 1976 - வெளிச்சம்
  • 1992 - THE LIVING ART-AN ART MAGAZINE
  • 1999 - நுண்கலை- ஓவிய நுண்கலைக்குழுவின் கலைஇதழ்

குறும்படங்கள்

தொகு
  • 2008 - A DIALOGUE WITH PAINTING-30
  • 2008 - THE SCULPTURAL DIALOGUE

அமைத்த கண்காட்சிகள்

தொகு
  • 1994 - THE CITYSCAPES;DRAWINGS OF S.KANTHAN AT CHOLA SHERATAN GALLERY, CHENNAI
  • 1995 - GANESHA CONSCIUSNESS-WORKS OF K.M.GOPAL AT JEHANGIR ART GALLERY MUMBAI
  • 1996 - CULTURAL DIALOGUE: ANTINA VERBOOM FROM NETHERLAND& A.V. ILANGO FROM INDIA AT ABN AMRO BANK GALLERY, CHENNAI
  • 1997 - GANAPATHIYAM: WORKS OF K.M.GOPAL AT CHITHRAKALA PARISHAD , BANGALORE
  • 1999 - A RETROSPECTIVE SHOW OF A.PERUMAL FROM SHANTINIKETAN
  • 1999 - A WRITERS AND PAINTERS MEET FOR PALLAVA ARTISTS VILLAGE AT LALIT KALA AKADEMI CHENNAI
  • 2000 - A MEGA SHOW OF 133 PAINTERS ON THIRUKURAL FOR TAMILNADU GOVERNMENT CULTURAL DEPARTMENT AT KANYAKUMARI

நடத்திய கருத்தரங்குகள்/ ஆய்வுகள்/ பட்டறைகள்

தொகு
  • 2000 - வேரும் விழுதும் :இந்திரா காந்தி ராஷ்ட்ரீய மானவ் சங்கராலயா, போபால்
  • 2002 - கவிதாயனா:20 ஒரியக் கவிஞர்/தமிழ்கவிஞர் சந்திப்பு
  • 2003 - ஒரிசாவின் படசித்ர பட்டறை
  • 2003 - THE SPIRIT OF MADRAS SCHOOL OF ART
  • 2004 - A PHOTO DOCUMENTATION OF PAINTING AND SCULPTURE OF TAMILNADU FOR STATE LALIT KALA AKADEMI TAMILNADU

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நாவல் என்பது கோணிப்பை அல்ல!- இந்திரன் பேட்டி". Hindu Tamil Thisai. 2018-10-07. Retrieved 2025-01-31.
  2. "கவிஞர் இந்திரனுக்கு சாகித்திய அகாதமி விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2012/Feb/22/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-462091.html. பார்த்த நாள்: 31 January 2025. 

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரன்_(கவிஞர்)&oldid=4200925" இலிருந்து மீள்விக்கப்பட்டது