இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம்
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் (Indira Gandhi Memorial Tulip Garden”)(மாதிரி மலர் வளர்ப்பு மையம்) என்பதுஇந்தியாவின் சம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு துலிப் தோட்டம் ஆகும். இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாகும். இத்தோட்டம் சுமார் 30 பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது தால் ஏரியின் பார்வையில் ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் மலர் வளர்ப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு இந்த தோட்டம் திறக்கப்பட்டது.[2] இது முன்பு சிராஜ் பாக் என்று அழைக்கப்பட்டது.[3][4] சுமார் 1.5 மில்லியன் துலிப் பூக்கள், பல வண்ணங்களில், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கியூகென்ஹாஃப் துலிப் தோட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டன.[5] ஆலந்திலிருந்து கொண்டு வரப்பட்ட டாபோடிலசு, ஹைசின்த் மற்றும் ரான்குலசு உட்பட 46 வகையான பூக்கள் உள்ளன. துலிப் தோட்டத்தில் சுமார் 65 வகையான துலிப் மலர்கள் உள்ளன.[6]
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் | |
---|---|
வகை | மலர்த்தோட்டம் |
அமைவிடம் | சபார்வான் சரகம், சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா |
பரப்பளவு | 30 ha (74 ஏக்கர்கள்) |
திறப்பு | 2007 |
உரிமையாளர் | ஜம்மு காஷ்மீர் அரசு |
வருகையாளர்கள் | 2,50,000 (2021) |
நிலை | திறந்துள்ளது |
Plants | 1.5 மில்லியன் |
உயிரினங்கள் | 64 |
சேகரிப்புகள் | துலிப் |
ஏழு அடுக்குகளைக் கொண்ட பாணியில் ஒரு சாய்வான தரையில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. துலிப் மலர்கள் தவிர, பல வகையான பதுமராகம், டாபோடில்சு மற்றும் ரான்குலசு ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
துலிப் திருவிழா
தொகுதுலிப் திருவிழா என்பது ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசின் சுற்றுலா முயற்சிகளின் ஒரு பகுதியாக தோட்டத்தில் மலர்களின் அழகை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வருடாந்திர கொண்டாட்டமாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இலவச அருகலை பிணைய வசதி, நீரூற்றுகள், கழிவறைகள் (மாற்று-திறனுள்ள நபர்களுக்குத் தனி) மற்றும் குடிநீர் நிலையங்கள் போன்ற வசதிகளுடன் இத்திருவிழா நடைபெறுகிறது.
பார்வையாளர்கள் இங்கு நினைவுப் பொருட்களை வாங்க முடியும். தோட்டப் பகுதிக்கு வெளியில் காஷ்மீரின் உணவுகளைச் சுவைக்க முடியும். காஷ்மீரின் உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் அலங்கரிக்கப்பட்ட நிலையங்களும் மற்றும் விற்பனை மையங்களும் இங்கு அமைந்துள்ளன.[7]
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Asia's largest tulip garden now open to visitors - Indian Express". www.indianexpress.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-14.
- ↑ "Tulip Gardens". The Indian Express.
- ↑ "Srinagar's Siraj Bagh, Asia's largest tulip garden, opens for tourists".
- ↑ "Siraj Bagh: Asia's largest Tulip garden opens up for visitors".
- ↑ "Immerse yourself in the colours of romance at this Tulip Festival in Srinagar".
- ↑ "Watch Asia's largest tulip garden in Kashmir".
- ↑ "Tulip Festival 2017 at Siraj Bagh (Tulip Garden) Srinagar, Kashmir | All Details - Chandigarh Metro". chandigarhmetro.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.