இந்திரா நாத்
இந்திரா நாத் (Indira Nath)(14 சனவரி 1938 - 24 அக்டோபர் 2021)[1] என்பவர் இந்தியாவினைச் சேர்ந்த நோயெதிர்ப்பியல் நிபுணர் ஆவார். மருத்துவ அறிவியலில் இவரது முக்கிய பங்களிப்பு, மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, எதிர்விளைவுகள் மற்றும் தொழு நோயின் நரம்பு சேதம் மற்றும் தொழுநோய் பேசிலசின் நம்பகத்தன்மைக்கான குறிப்பார்களைத் தேடுதல் ஆகும். நாத்தின் சிறப்புத் துறைகளாக நோயெதிர்ப்பு, நோயியல், மருத்துவ உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொற்று நோய்கள் ஆகும்.[2]
பிறப்பு | |
---|---|
இறப்பு | 24 அக்டோபர் 2021 புது தில்லி | (அகவை 83)
குடியுரிமை | India |
தேசியம் | இந்தியா |
Alma mater | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புது தில்லி |
அறியப்பட்டது | நோயெதிர்ப்பியல் ஆராச்சி, தொழுநோய் |
பணி
தொகுநாத் தனது மருத்துவப் பட்டத்தை புது தில்லி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பெற்றார். இங்கிலாந்தில் கட்டாய மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருந்தியல் முதுநிலை (நோயியல்) படிப்பில் சேர்ந்தார். 1970களில், இந்தியாவில் 4.5 மில்லியன் தொழுநோயாளிகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.[3]
1970ஆம் ஆண்டில் நஃபீல்ட் நிதி உதவியும் மேல்படிப்பிற்காக நாத் இங்கிலாந்து சென்றார். இந்த காலகட்டத்தில் இவர் நோயெதிர்ப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றார். அரச அறுவைச்சிகிச்சை நிபுணத்துவ கல்லூரியில் பேராசிரியர் ஜான் டர்க் மற்றும் இலண்டனில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். ஜே. டபிள்யூ. ரீஸ் ஆகியோருடன் தொற்று நோய்கள், குறிப்பாகத் தொழுநோய் பிரிவில் பணியாற்றினார்.
வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பயிற்சி அனுபவத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நாத் இந்தியாவில் சேவையாற்றுவதையே பெருமையாக நினைத்தார். வெளிநாட்டில் 3 வருடப் பயிற்சிக்குப் பின்னர் இந்தியா திரும்புவதற்கு இவரும் இவரது கணவரும் ஒப்பந்தம் செய்தனர். 1970களின் முற்பகுதியில் இந்தியா திரும்பினார்.[4]
"இருப்பினும், மீண்டும் வருவதற்கு மிகவும் உற்சாகமான நேரமாக இருந்தது, ஏனென்றால் ஆராய்ச்சியை வளர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே நல்ல பங்கை வகிக்க முடியும் என்று நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்," என்று அவர் 2002 இல் இயற்கை மருத்துவ (நேச்சர் மெடிசின்) மலரில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் நாத் கூறினார்.[4]
இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, நாத் இந்தியாவில் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சியைத் தொடங்கிய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பேராசிரியர் குர்சரன் தல்வாரின் உயிர்வேதியியல் துறையில் சேர்ந்தார். பின்னர் 1980-ல் இவர் நோயியல் துறைக்குச் சென்றார். மேலும் நாத் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறையை (1986) நிறுவினார். இவர் 1998-ஓய்வு பெற்றார். ஆனால் இந்தியத் தேசிய அறிவியல் கழக எஸ். என். போஸ் ஆராய்ச்சி பேராசிரியராக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.
இராஜீவ் காந்தி பிரதமரானபோது, இந்திய அறிவியலை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இவர் சேகரித்த 100 அறிவியலாளர்களில் இவரும் ஒருவர்.[4]
நாத் 2002-ல் பாரிஸில் உள்ள பியர் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். மலேசியாவில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பல்கலைக்கழகத்தின் புலத்தலைவர் பதவியிலும், ஐதராபாத்தில் உள்ள புளூ பீட்டர் ஆராய்ச்சி மையத்தின் (லெப்ரா ஆராய்ச்சி மையம்) இயக்குநராகவும் செயல்பட நாத் அழைக்கப்பட்டார்.
ஆராய்ச்சி
தொகுநாத்தின் ஆராய்ச்சி மனித தொழுநோயில் உள்ள உயிரணு நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் நோயினால் நரம்பு சேதம் குறித்ததாகும். தொழுநோய் ஏற்படுத்தும், பேசிலஸ் உயிர் பிழைத்திருப்பதற்கான குறி காட்டிகளையும் இவரது ஆய்வுத் தேடலாக இருந்தது.[5] இவர் 120க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், சொற்பொழிவுகள், பன்னாட்டு பத்திரிகைகளில் மருத்துவத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துகளை வெளியீட்டு உள்ளார். இவரது கண்டுபிடிப்பு மற்றும் இவரது முன்னோடி பணி தொழுநோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் படியாகும்.
விருதுகள்
தொகுஆண்டு | விருது | விருது வழங்கும் அமைப்பு |
---|---|---|
2003 | வெள்ளி பேனர் | டஸ்கனி, இத்தாலி |
2003 | செவாலியர் ஆர்ட்ரே நேஷனல் டு மெரிட் | பிரான்ஸ் அரசாங்கம் |
2002 | பெண்கள் அறிவியல் (ஆசியா பசிபிக்) விருது | லோரியல் யுனெஸ்கோ |
1999 | பத்மசிறீ [6] | இந்திய அரசு |
1995 | ஆர். டி. பிர்லா விருது | |
1995 | காக்ரேன் ஆராய்ச்சி விருது | இங்கிலாந்து அரசு |
1994 | பசந்தி தேவி அமீர் சந்த் விருது | இ. ம. ஆ. கு. |
1990 | ஓம் பிரகாஷ் பாசின் விருது | |
1988 | கிளேட்டன் நினைவு விரிவுரை விருது | |
1987 | 1வது நித்யா ஆனந்த் நினைவு அறக்கட்டளை விரிவுரை விருது | இதேஅக |
1984 | க்ஷனிகா விருது | இ. ம. ஆ. கு. |
1983 | சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது | இந்திய அரசு |
1981 | ஜல்மா அறக்கட்டளை சொற்பொழிவு | இ. ம. ஆ. கு. |
கௌரவங்கள்
தொகுநாத் தேசிய அறிவியல் கழகம், இந்தியா, அலகாபாத் (1988), இந்தியத் அறிவியல் கழகம், பெங்களூர் (1990),[7] இந்திய தேசிய அறிவியல் அகாதமி (1992),[8] தேசிய மருத்துவ அறிவியல் அகாதமி (இந்தியா)[9] (1992), அரச நோயியல் கல்லூரி (1992) மற்றும் வளரும் உலகத்திற்கான அறிவியல் அகாடமி(1995) ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய அரசின் அமைச்சரவைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், வெளியுறவுச் செயலர் (இதேஅக)(1995-97), குழு உறுப்பினர் (1992-94, 1998-2006) மற்றும் தேசிய அறிவியல் அகாதமியின் (இந்தியா), அலகாபாத் துணைத் தலைவராகவும் (2001-03) இருந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்தியா பெண் அறிவியலாளர் திட்ட (2003) தலைவராகவும் இருந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதும்,[10] 2002ஆம் ஆண்டு அறிவியல் துறையில் பெண்களுக்கான லோரியல்-யுனெஸ்கோ விருதும் வழங்கியது.[11]
மேலும் பார்க்கவும்
தொகு- அறிவியலில் பெண்களின் காலவரிசை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Obituary: Indira Nath 1938-2021". 15 November 2021.
- ↑ "Indian Fellow - Indira Nath". Indian National Science Academy. Archived from the original on 16 December 2019. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "FAT". Archived from the original on 9 December 2013. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ 4.0 4.1 4.2 Birmingham, Karen (2002-06-01). "Indira Nath" (in en). Nature Medicine 8 (6): 545. doi:10.1038/nm0602-545. பன்னாட்டுத் தர தொடர் எண்:1546-170X. பப்மெட்:12042793.
- ↑ "In Conversation - Interview with Dr. Indira Nath" (in en-US). Science Reporter 53 (6). June 2016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8512. http://nopr.niscair.res.in/handle/123456789/34339.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Fellow Profile". Indian Academy of Sciences.
- ↑ The Year Book 2014 // Indian National Science Academy, New Delhi
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
- ↑ "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
- ↑ Philanthropy: Award & Fellowships, 2002 பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம் L'Oréal.