இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்


இந்துக் கல்லூரி இரயில் நிலையம் (Hindu College railway station) தமிழ்நாட்டின் சென்னை புறநகர் இரயில்வே வலைப்பின்னலில் சென்னை மத்திய தொடருந்து நிலையம்-அரக்கோணம் பிரிவின் இரயில் நிலையங்களில் ஒன்றாகும். சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நிலையம், சென்னையின் புறநகர்ப் பகுதியான பட்டாபிராமின் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கடல் மட்டத்திலிருந்து 28 மீ உயரத்தில் உள்ளது.

இந்துக் கல்லூரி
Hindu College
இந்திய இரயில்வே & சென்னை புறநகர் இருப்புவழி நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சென்னை - திருவள்ளுர் நெடுஞ்சாலை, பட்டாபிராம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°7′7″N 80°4′30″E / 13.11861°N 80.07500°E / 13.11861; 80.07500
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்மேற்கு, வட மேற்கு மற்றும் தென் மேற்கு, சென்னை புறநகர் இருப்புவழி
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரை நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுஎச்.சி
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979[1]
முந்தைய பெயர்கள்தென்னக இரயில்வே

பெயர்க்காரணம்

தொகு

சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது பட்டாபிராம் நகர வாழ் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது . இந்துக் கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளதால் இப்பெயர்ப்பெற்றது.

வரலாறு

தொகு

1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-திருவள்ளூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்நிலையத்திலுள்ள பாதைகள் மின்மயமாக்கப்பட்டன[1]

பயன்கள்

தொகு

ஒவ்வொரு நாளும், சுமார் 4,000 மாணவர்கள், 5,000 அலுவலக பணியாளர்கள் மற்றும் 2,000 பிற பயணிகள் உட்பட சுமார் 11,000 பயணிகள் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். நடைமேம்பாலம் இல்லாததால், இந்துக் கல்லூரியில் இருந்து இரயில் தண்டவாளத்தை கடந்து, இரயில் நிலையத்தில் உள்ள புறநகர் நடைமேடைக்கு பயணிகள் செல்கின்றனர். ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டு நடைமேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டில் பாலம் கட்டப்பட்டது. மேம்பாலமானது பிரதான பாதையை விட்டு வெளியேறும் இரண்டு புறநகர் நடைமேடைகளை மட்டும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டதால் பயணிகள் இரயில் பாதையை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
  2. Ayyappan, V. (11 August 2008). "Bridge is on way, but commuters not happy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103162320/http://articles.timesofindia.indiatimes.com/2008-08-11/chennai/27931213_1_foot-overbridge-suburban-line-commuters.