இந்து கோஸ்வாமி

இந்திய அரசியல்வாதி

இந்து பால கோஸ்வாமி (Indu Bala Goswami) ஒரு இந்திய அரசியல்வாதியும் இமாச்சலப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைககு இமாசலப் பிரதேச பாரதிய ஜனதா கட்சிக் குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் இமாச்சலப் பிரதேசத்தின் மாநில சமூக நல வாரியம் இமாச்சலப் பிரதேசத்தின் மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றின் தலைவராக இருந்தார். [2] [3] [4] [5]

இந்து கோஸ்வாமி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
22 சூலை 2020
முன்னையவர்விப்லவ் தாகூர்
தொகுதிஇமாச்சலப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஏப்ரல் 1967 (1967-04-12) (அகவை 57)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிஇமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம்[1]

அரசியல் வாழ்க்கை தொகு

இந்து கோஸ்வாமி 1988 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார், அவர் நீண்ட காலமாக கட்சிப் பணியாளராக பணியாற்றி வந்தார். 80 களின் பிற்பகுதியில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றினார்.

2017 ஆம் ஆண்டு இமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் பூடைலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார். இமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் இவரேயாவார். [6]

2020 ஆம் ஆண்டில் அவர் பாரதிய ஜனதா கட்சியளித்த வாய்ப்பில் இமாச்சலப் பிரதேசத்தின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

 

  1. https://www.india.gov.in/my-government/indian-parliament/indu-bala-goswami
  2. "Himachal: BJP's Indu Bala Goswami elected to Rajya Sabha". The Indian Express. 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  3. "Indu Goswami BJP's nominee for RS seat". Bhanu P Lohumi. The Tribune. 15 March 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Sharad Pawar, Harivansh among several candidates elected unopposed to Rajya Sabha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  5. "BJP's Indu Goswami elected to Rajya Sabha from Himachal Pradesh". India Today. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  6. "Himachal Pradesh Assembly elections 2017: BJP's first woman candidate, Indu Goswami aims at breaking trends". https://www.financialexpress.com/elections/himachal-pradesh-assembly-elections-2017/himachal-pradesh-assembly-elections-2017-bjps-first-woman-candidate-indu-goswami-aims-at-breaking-trends/918100/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_கோஸ்வாமி&oldid=3683668" இலிருந்து மீள்விக்கப்பட்டது