இந்தோனேசிய கொடி
இந்தோனேசிய கொடி (இந்தோனேசியம்: Bendera Negara Indonesia; ஆங்கிலம்: Flag of Indonesia) என்பது இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசியக் கொடி ஆகும். இந்தக் கொடி சாங் மேரா பூத்தே (Sang Merah Putih), சாங் சக்கா மேரா பூத்தே (Sang Saka Merah Putih), மேரா பூத்தே (Merah Putih) என்று பரவலாகவும் அழைக்கப்படுகிறது.[1]
பிற பெயர்கள் | Sang Saka Merah-Putih Bendera Merah-Putih Merah-Putih |
---|---|
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | 11 நவம்பர் 1293 (மயாபாகித்து பேரரசு) 28 அக்டோபர் 1928 17 ஆகத்து 1945 (அசல்) 17 ஆகத்து 1950 (அரசு) |
வடிவம் | சிவப்பு; வெள்ளை நிறம் |
வடிவமைப்பாளர் | ஜெயகாட்வாங் (Jayakatwang) |
இது 1945 ஆகத்து 17 அன்று ஜகார்த்தாவில் உள்ள 56 புரோகிலமாசி சாலையில் (முன்னர் தைமூர் சாலை) இந்தோனேசிய விடுதலை நாளின் போது அறிமுகப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட்டது; மேலும் 27 திசம்பர் 1949 அன்று டச்சுக்காரர்கள் இந்தோனேசிய இறையாண்மையை முறையாக மாற்றியபோது மீண்டும் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து கொடியின் வடிவமைப்பு மாறாமல் உள்ளது.
பொது
தொகுஇந்தோனேசியக் கொடியின் நிறங்கள் 13-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் பதாகையிலிருந்து பெறப்பட்டதாகவும் அறியப்படுகிறது.[2]
இருப்பினும், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண அடையாளங்கள்; பழைய ஆசுத்திரோனீசிய புராணங்களில் காணப் படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் இந்த நிறங்கள் ஆசுத்திரோனீசியா முழுவதும் பல நாடுகளின் கொடிகளில் காணப்படுகின்றன.[3]
காட்சியகம்
தொகுஇந்தோனேசிய கொடியின் காட்சிப் படங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Flag, Coat of Arms, Anthem". Embassy of Indonesia, Oslo, Norway. 1 May 2007. Archived from the original on 19 October 2007. பார்க்கப்பட்ட நாள் 22 June 2009.
- ↑ "Flag of Indonesia". Britannica. Archived from the original on 16 September 2021. பார்க்கப்பட்ட நாள் 9 November 2021.
- ↑ "Earth Mothers and Sky Fathers of Austronesia". adamkeawe.com. 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 1 September 2024.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தோனேசிய கொடி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.