இந்தோனேசிய விடுதலை நாள்
இந்தோனேசிய விடுதலை நாள் (இந்தோனேசியம்: Hari Ulang Tahun Kemerdekaan Republik Indonesia; (HUT RI) அல்லது Hari Kemerdekaan ஆங்கிலம்: Independence Day of Indonesia) என்பது 17 ஆகத்து 1945 அன்று, இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பை நினைவுகூரும் வகையில் இந்தோனேசியாவில் கடைபிடிக்கப்படும் ஒரு தேசிய விடுமுறை தினமாகும்.[1]
இந்தோனேசிய விடுதலை நாள் Hari Kemerdekaan Republik Indonesia Independence Day of Indonesia HUT RI | |
---|---|
மெர்டேகா அரண்மனை, மத்திய ஜகார்த்தா, ஜகார்த்தாவில் தேசிய கொடியேற்றும் விழா | |
அதிகாரப்பூர்வ பெயர் | Hari Ulang Tahun Kemerdekaan Republik Indonesia |
கடைப்பிடிப்போர் | இந்தோனேசியர் |
வகை | தேசியம் |
முக்கியத்துவம் | இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பு; இந்தோனேசியா |
நாள் | 17 ஆகத்து |
நிகழ்வு | ஆண்டு தோறும் |
18 சூன் 1946 அன்று, வெளியிடப்பட்ட இந்தோனேசிய அரசாங்க தீர்ப்பாணையின் மூலம் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிக்கப்பட்ட தேதி பொது விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டது.[2] [3]
பொது
தொகுஇந்த தேசிய தினத்தை கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதில் நாடு முழுவதும் நடத்தப்படும் கொடி ஏற்றுதல் விழா முக்கியமான நிகழ்வாகும். அத்துஅடன் வெளிநாடுகளில் உள்ள இந்தோனேசிய தூதரகங்களில் கொடி ஏற்றுதல் விழா நடைபெறுவது வழக்கமாகும்.[4]
உள்ளூரில் தேசிய தின சமூகப் போட்டிகள், தேசப்பற்று மற்றும் பண்பாட்டு அணிவகுப்புகளும் நடைபெறும். பங்குபெறும் வணிக வளாகங்களுக்கு அரசாங்கத்தின் மூலமாகத் தள்ளுபடிகளை வழங்கப்படுகின்றன. ஆகத்து 16 அல்லது ஆகத்து 17-க்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை, இந்தோனேசிய அதிபர் இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.[5]
மெர்டேக்கா அரண்மனை
தொகுஆகத்து 17 அன்று மேற்கு இந்தோனேசிய நேரம் 10:00 மணிக்கு அனைத்து இந்தோனேசிய தேசிய தொலைக்காட்சி சேவைகளும், பாரம்பரியமாக தேசிய விடுதலை தின விழா நிகழ்ச்சிகளை ஜகார்த்தாவில் உள்ள மெர்டேக்கா அரண்மனையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
அந்த நாளின் தொடக்கத்தில், இந்தோனேசியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் குறுமாநிலங்கள் அந்தந்த நகர அரங்குகளில் கொடி ஏற்றும் விழாவை நடத்துகின்றன. தெருக்கள், பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் போன்றவை தேசப்பற்று அலங்காரங்களால் அலங்கரிக்கப் படுகின்றன.
மற்றும் ஆகத்து மாதம் முழுவதும் இந்தோனேசியாவின் தேசியக் கொடியைக் குறிக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்; நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்துவது வழக்கமாக அமையும்.[6]
காட்சியகம்
தொகுஇந்தோனேசிய விடுதலை நாள் காட்சிப் படங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Independence Day 2019 and 2020". PublicHolidays.co.id. பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
- ↑ Raliby 1953, ப. 621–622.
- ↑ Raliby, Osman (1953). Documenta Historica: Sedjarah Dokumenter Dari Pertumbuhan dan Perdjuangan Negara Republik Indonesia [Historical Documentation: Documentary History of the Growth and Struggle of the Republic of Indonesia] (in இந்தோனேஷியன்). Jakarta: Bulain-Bintag. pp. 621–622.
- ↑ Callistasia Anggun Wijaya (17 August 2016). "Jakartans celebrate Independence Day with parade". The Jakarta Post. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
- ↑ Petir Garda Bhwana (16 August 2021). "President Jokowi's MPR Speech Acknowledges Covid-19 Exhaustion". Tempo.co.
- ↑ "Sambut HUT RI ke-76, Jalanan Ibu Kota Dihiasi Umbul-Umbul Merah Putih". inews.id. 7 August 2021.
சான்றுகள்
தொகு- Anderson, Benedict (1961). Some Aspects of Indonesian Politics under the Japanese occupation, 1944–1945. Cornell University. Dept. of Far Eastern Studies. Modern Indonesia Project. Interim reports series. Ithaca, N.Y.: Cornell University.
- Anderson, Benedict (1972). Java in a Time of Revolution: Occupation and Resistance, 1944–1946. Ithaca, N.Y.: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0687-0.
- Feith, Herbert (2006) [1962]. The Decline of Constitutional Democracy in Indonesia. Singapore: Equinox Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9793780450.
- Gouda, Frances (2002). American visions of the Netherlands East Indies/Indonesia: US foreign policy and Indonesian nationalism, 1920–1949. Amsterdam: Amsterdam University Press.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தோனேசிய விடுதலை நாள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Raliby, Osman (1953). Documenta Historica: Sedjarah Dokumenter Dari Pertumbuhan dan Perdjuangan Negara Republik Indonesia. Jakarta: Bulain-Bintag.
- Reid, Anthony (1974). The Indonesian National Revolution 1945–1950. Melbourne: Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-71046-4.